தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் ஆணவப் படுகொலையை கண்டித்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பு அதன் தோழமை அமைப்புகளுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த கவினின் ஆணவப்படுகொலை தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்னர் சாதிவெறியர்களால் பல்வேறு ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளது. குறிப்பாக தருமபுரி கண்ணகி-முருகேசன், இளவரன், கோகுல்ராஜ், உடுமலை சங்கர் இப்படியாக சாதிவெறி கும்பலுக்கு பலியானர்வர்கள் ஏராளம். சமீபத்தில் கவின் மற்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறையை சேர்ந்த வைரமுத்து என தொடர்கிறது ஆணவப் படுகொலைகள்.
கொலை செய்தவன் அதன் தன் சாதிப் பெருமிதமாக எண்ணி சிறை செல்கிறானேயொழிய குற்றத்தை உணர்ந்து திருந்தும் மனநிலையில் இல்லை. கோகுல்ராஜ் கொலை குற்றவாளியான யுவராஜ் சிறை சென்றும் திருந்தாமல் இன்று வரை அதை பெருமிதமாகவே எண்ணிக் கொள்கிறான்.
இருக்கின்ற சட்டத்தின் மூலம் உரிய தண்டனை வழங்குவதோ இனிமேல் ஆணவப் படுகொலைகளால் நடைபெற விடாமல் தடுப்பதற்கான வழிவகையிலோ தமிழ்நாடு அரசு முயல்வதில்லை. ‘ஆணவப்படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்று’ என்பது தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக மாறியுள்ளது.
“ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்று” என்ற முழக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கடந்த 1 மாத காலமாக மக்களிடம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். இந்த முழக்கத்தை தமிழ்நாட்டு மக்களின் முழக்கமாக மாற்றியுள்ளார்கள். பிரச்சாரத்திற்கு சென்ற தோழர்கள் மக்கள் ஆணவப்படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் அவசியம் என உணர்ந்துள்ளதாகவும், சாதிவெறியை உண்டாக்கும் சாதிவெறி சங்கங்களை தடை செய்ய வேண்டும் என்று தங்களது ஆதரவை தெரிவித்துள்ளார்கள்.
கோவை போராட்ட படங்கள்
ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் தேவை என்ற மக்களின் முழக்கத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் ட்தந்த பெரியாரின் பிறந்த நாளான இன்று கோவை மதுரையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அத தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தொழிலாளர் அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளுடன் ஜனநாயக சக்திகளும், பகுத்தறிவு அமைப்புகளும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.






