குறையும் வறுமை: புள்ளிவிவர மோசடியில் இறங்கியுள்ள மோடி கும்பல்!

உலகெங்கும் உண்மை நிலையினைக்கண்டு கதறும் சர்வாதிகாரிகளின் அரசுகள் தங்கள் ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்தும் புள்ளிவிவரப்பட்டியலை காலந்தோறும் தங்களுக்கு ஏற்றவாறு திருத்தி வெளியிட்டு வருகின்றனர்.

0
25 கோடி மக்களை வறுமையிலிருந்து வெளிக்கொண்டுவந்துள்ளோம் என்று புளுகுகிறது

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்கள் முன்னதாக ஜனவரி மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் ஒரு பொதுகூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “எங்கள் அரசாங்கத்தின் பத்து வருட ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார். புளுகுவதையே தொழிலாகக் கொண்ட மோடியின் பல அண்டப்புளுகு, ஆகாசப்புளுகுகளில் இதுவும் ஒன்று, என அந்த சமயத்தில் எல்லோரும் கடந்து சென்றுவிட்டனர். அது சந்தேகமேயில்லாத ஒரு அண்டப்புளுகுதான் என்றாலும், அப்படி புளுகுவதற்கு என்ன அடிப்படை என்பதை “Reporters Collective” என்ற இணையதள பத்திரிக்கை தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றுநோய் காலத்தில் அதன் தாக்குதலால் இறந்துபோன மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள், காவலர்கள் குறித்தும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறையால் இறந்துபோனவர்கள், நாட்டின் பலப்பகுதிகளிலுருந்தும் நடந்தே தங்கள் ஊருக்குச்சென்ற புலம்பெயர் தொழிலாளிகள், டெல்லி விவசாயிகளின் போராட்டத்தின்போது போராட்டக்களத்தில் இறந்துபோன மற்றும் கைது செய்யப்பட்ட விவசாயிகள், மரணமடைந்த தகவல் அறியும் உரிமை செயல்பாட்டாளர்கள், கைது செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள், மனிதக்கழிவுகளை சுத்தம் செய்யும்போது ஏற்பட்டுள்ள மரணங்கள், லவ் ஜிஹாத், கும்பல் படுகொலை, போட்டித்தேர்வுகள் வினாத்தாள் கசிவு, ஒடுக்கப்பட்ட/பழங்குடியினர் மீதான தாக்குதல், அரசு மருத்துவமனைகளில் தற்கொலை செய்துகொண்ட இளநிலை மருத்துவர்கள் போன்ற முக்கியமான தகவல்கள் குறித்து விவரங்கள் இல்லை என்று மோடி கும்பல் நழுவிவந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் பாசிச பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசை “No Data Available” அரசு என்று கேலியாக விமர்ச்சித்தன.

உள்ளூரில் எழுந்த பல விமர்சனங்களையெல்லாம் கொட்டை எடுக்காத புலியாக லேப்ட் ஹாண்டில் டீல் செய்ய முடிந்த மோடி கும்பல் சர்வதேச அளவில் பட்டினி குறியீடு, பத்திரிக்கை சுதந்திரம், மதசுதந்திரம் பற்றி வெளிவரும் புள்ளிவிவரங்களைத் தடுக்க முடியவில்லை. இதனால் உலகளவில் மானம் கப்பலேறிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ளூரில் கப்பலேறக்கூடாது என்று நினைத்து “நீங்க என்னடா டேட்டா கொடுக்கிறது? இப்போ நாங்க கொடுக்கிறோம் பாருங்கடா டேட்டா” என்று கோதாவில் இறங்கி சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் அளவைகளில், கூறுகளில் சில இடைச்செருகல்களைச் செய்து தங்களுக்கு வேண்டிய புள்ளிவிவரங்களை பிழிந்தெடுத்துக்கொண்ட,கொள்ளப்படுகின்ற அடிப்படையில்தான் மோடி அன்று 25 கோடி மக்களை வறுமையிலிருந்து வெளிக்கொண்டுவந்துள்ளோம் என்று புளுகியது.


படிக்க: பசி தான் நம்மை ஆள்கிறது!


அதாவது சர்வதேச அளவில் வறுமை குறித்த புள்ளிவிவரங்களைத் தொகுக்கும்போது சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத்தரம் என்ற மூன்று தலைப்புகள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. இதில் சுகாதாரம் என்ற தலைப்பின்கீழ் ஊட்டச்சத்து, குழந்தை இறப்பு ஆகியவையும், கல்வி என்ற தலைப்பில் எந்தவகுப்புவரை கல்வி கிடைக்கிறது, பள்ளிக்குச் செல்லும் நாட்கள் என்ற கூறுகளும், வாழ்க்கைத்தரம் என்ற தலைப்பின் கீழ் சமையல் எரிபொருள், கழிவறை, குடிநீர், மின்சாரம், வீடு, மற்றும் சொத்துகள் ஆகிய கூறுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த அடிப்படையில் வரும் புள்ளிவிவரங்கள் உலகளவில் வறுமை குறித்தான பட்டியலில் இந்தியாவை தொடர்ந்து கீழிறக்கி வருவதால் கடுப்பான பாசிச மோடி கும்பல் இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிடும் சர்வதேச நிறுவனங்களை விஞ்சியும் பார்த்தது கெஞ்சியும் பார்த்தது. ஆனால் அவைகள் மோடிக்கும்பலை உதாசீனப் படுத்தியதால்வேறுவழியின்றி புராண புரட்டுகளையே இந்திய வரலாறு என்று புனைந்துரைக்கும் கும்பல்  தலைமையிலான புள்ளிவிவரங்களைத் தொகுக்கும் பணியில்,

நிதி ஆயோகின் கண்காணிப்பின்கீழ் GIRG (Global Indices for Reform and Growth) என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்த அமைப்பு “தேசிய மாதிரி கணக்கெடுப்பின்” (National Sample Survey)  மூலம் திரட்டப்பட்ட அரைகுறை விவரங்களைக் கொண்டும், மேற்குறிப்பிட்ட அளவைகளில் சுகாதாரம் என்ற தலைப்பின்கீழ் ஊட்டச்சத்து, குழந்தை இறப்பு ஆகியவற்றோடு “பேறுகால கண்காணிப்பு” என்ற ஒரு புதிய கூறையும், வாழ்க்கைத்தரம் என்ற தலைப்பின்கீழ் புதிதாக “வங்கிக்கணக்கு” என்ற கூறையும் புகுத்தித் தங்களுக்கு சாதகமான புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது.


படிக்க: பெற்ற குழந்தையை விற்ற பெற்றோர்! பிஜேபியின் ஆட்சியில் நடக்கும் கொடூரம்!!


உலகெங்கும் உண்மை நிலையினைக்கண்டு கதறும் சர்வாதிகாரிகளின் அரசுகள் தங்கள் ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்தும் புள்ளிவிவரப்பட்டியலை காலந்தோறும் தங்களுக்கு ஏற்றவாறு திருத்தி வெளியிட்டு வருகின்றனர். அதைத்தான் தற்போது பாசிச மோடிக்கும்பலும் செய்ய முனைந்துள்ளனர். பொருளாதாரம், வறுமை ஒழிப்பு, பொதுசுகாதாரம், கல்வி வளர்ச்சி போன்ற அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து தமது எஜமானர்களான அதானி, அம்பானி, அனில் அகர்வால் போன்ற கார்போரேட் கும்பலுக்காகவே ஆட்சி நடத்தி மக்களிடம் சாதி, மத, இன மோதலை உருவாக்கி இரத்தம் குடிக்கும் காட்டேரிகளான மோடி தலைமையிலான பாசிசக் கும்பலை ஆட்சியிலிருந்து மட்டுமல்ல,

நாட்டைவிட்டே விரட்டியடிப்பதுதான் மக்களுக்கு உண்மையான விடுதலை. அதற்கான வேலைகளை பாசிச எதிர்ப்பு ஐக்கியமுன்னணியைக் கட்டி முன்னெடுப்போம். மக்களை உண்மையிலேயே வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் தேசங்கடந்த கார்போரேட் தரகு முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் குறைந்தபட்ச செயல்திட்டதின்அடிப்படையில் ஜனநாயக கூட்டரசை அமைப்போம்.

ஜூலியஸ்

ஆதாரம்: Inside Modi Govt’s War Room to Whitewash Global Indices

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here