மேற்கண்ட வீடியோவில் உரையாற்றும் “மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின்” மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் கூற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களாகிய நாம் என்ன முடிவுக்கு வர முடிகிறதெனில், பெயருக்கு கலெக்டர், S.P.
144 தடை உத்தரவு போட்டிருப்பது போல பாவ்லா காண்பித்து விட்டு – ஆயிரக் கணக்கான போலீசையும் குவித்ததாக ஒரு பாவ்லா காண்பித்து விட்டு, காவிக் கூட்டத்தை ஆயிரக் கணக்கில் கூட அனுமதித்ததும், கோவிலுக்குள் கொடியுடன் நுழைய அனுமதித்ததும், மத மோதலை உருவாக்குவதற்கு அடித்தளமிட்டதும் – ஒட்டு மொத்த தமிழ்நாட்டு நிர்வாகமும் பாசிச RSS – பாஜக – இந்துத்துவ மதவெறிக் கும்பலுக்கு சாதகமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்ச மாகிறது!
பன்னிரெண்டாம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டு நாளது தேதி வரை இஸ்லாமியர்களின் – சாதி மதம் கடந்த வழிபாட்டுத் தளமாக இருக்கக்கூடிய – மத நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய மக்கள் மத்தியில் ஒரு திணிக்கப்பட்ட மோதல் போக்கை வெளி மாவட்டங்களில் இருந்து திரட்டி வந்து நடத்திக் கொள்ள அனுமதித்திருக்கிறார்கள் என்பதே உண்மை! பேருண்மை!!
ஆக, திருப்பரங்குன்றத்திலும், அயோத்தி பாபர் மசூதி பிரச்சனையைப் போல ஒரு கலவர பூமி ஆக்க திட்டமிடுகிறது பாசிச ஆர் எஸ் எஸ்- பாஜக – இந்துத்துவமதவெறிக் கும்பல்! அதன் மூலம் அரசியல் அறுவடை செய்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறது ஹிட்லர் முசோலினி வழியில் பயணிக்கும் இந்த கேடுகெட்ட கும்பல்!
அப்படிப்பட்ட கேவல நிலைமைக்கு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகமும் அன்று உ.பி.யில் கல்யாண் சிங், அத்வானி கும்பல், பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கிவிட்டு அந்த இடத்தில் தான் ராமன் பிறந்தான் என பொய் கூறி இன்றைக்கு பல்வேறு சட்டப் பிரச்சினைகள் மூலமாக கூட ராமர் கோவிலை அமைத்துக் கொண்டார்களோ, அதேபோல தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றத்தில் மலையில் பன்னிரெண்டாம் நூற்றாண்டு காலம் தொட்டு பயன்பாட்டில் இருந்து வரும் சிக்கந்தர் தர்காவை தரைமட்டமாக்க எத்தனிக்கிறார்கள்….
படிக்க:
🔰 திருப்பரங்குன்றத்தை கலவர குன்றாக்க முயலும் காவிகள்!
🔰 திருப்பரங்குன்றத்தில் இந்துமுன்னணியின் மதவெறியும், மேலூரில் கார்ப்பரேட் சார்பும்!
ஆக,
கேவலமானது பாசிசக் காவிக்கூட்டம்!
கேவலமான ‘திராவிட மாடல் அரசு!’
கேவலமான கலெக்டர் தலைமையிலான நிர்வாகத்துறை!
கேவலமான காவல்துறை!
கேவலமான நீதித்துறை!
கேவலமான இந்து சமய அறநிலையத்துறை!
ஒட்டுமொத்த தமிழக அரசு நிறுவனங்களும், தமிழ்நாட்டின் இணக்கமான வாழ்நிலையை தலை குப்புற புரட்டிப்போட்டு அமைதி இன்மையை – கலவரத்தை உருவாக்குவதற்கு துணை போகிறார்கள்! இது மறுக்க முடியாத உண்மை!
நேற்று திருப் பரங்குன்றத்தில் ஆர் எஸ் எஸ் பாஜக காலிகள் நடந்து கொண்டதைப் போல பிற இயக்கங்கள் ஜனநாயக சக்திகள் முற்போக்கு இயக்கங்கள் இப்படிப்பட்ட முறையில் 144 தடை உத்தரவை மீறி இருந்தால் அரசும் காவல் துறையும் கலெக்டரும் நீதித்துறையும் இப்படித்தான் மௌனம் காத்திருப்பார்களோ?
ஆக, ‘இது சமூக நீதி மண்; பெரியார் மண்’ என்றெல்லாம் யார் போலி கோஷம் போடுகிறார்களோ அவர்களையும் சேர்த்து அம்பலப்படுத்தி பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட – பழங்குடியின – சிறுபான்மையின – சக்திகளை ஒருங்கிணைத்து, அனைத்து ஜனநாயக சக்திகளும், புரட்சிகர இயக்கங்களும், மார்க்சிய-பெரியாரிய- அம்பேத்கரிய இயக்கங்களும் ஒருங்கிணைந்து தலைமை தாங்கி களப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்!
அனைத்துத் தடைகளையும் தகர்த்து, காவிக் கூட்டம் தலை தூக்குவதை கருவறுக்க வேண்டும்!
கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி ஏறிவோம்!
ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதற்காக அர்ப்பணிப்புடன் களமாடுவோம்!
புதிதாக உருவெடுத்துள்ள சங்கி சீமானின் தோலுரிப்போம்!
- எழில்மாறன்
எச்சரிக்கை.. எச்சரிக்கை
காவி பாசிசமயமாகிக் கொண்டிருக்கும் அரசு கட்டமைப்பும், அதிகார வர்க்கமும்..
அனைத்து துறைகளிலும் காவிகளின்ஆதிக்கம் ., இதுபோன்றசூழல் வளர்ந்து கொண்டே சென்றால் குஜராத், உத்தர பிரதேசம் போல் தமிழ்நாடு மாற்றப்படும்