பீகார் மாநிலத்தில் உள்ள பாடலிபுத்திரா மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்யும் பொழுது ஓட்டுக்களை பெறுவதற்காக இந்தியா கூட்டணி “முஜ்ரா நடனம்” ஆடுவதாக திருவாளர் மோடி அசிங்கமாக பேசி இருக்கிறார்.
முஜ்ரா நடனம் என்பது முகலாயர்களின் அரசவையில் பெண்கள் ஆடிய கவர்ச்சி நடனம். இந்த நடனத்தை தேவதாசிகள் நடனம் என்று கூறினால் வாசகர்களுக்கு பளிச்சன புரியும்.
முகலாயர்களின் அரசவைகளில் ஆடிய பெண்களோ அல்லது தேவதாசிகளாக இந்து கோவில்களிலும் இந்து மன்னர்களின் அரசவைகள் மற்றும் வணிகர்கள், நிலப்பரப்புகள் போன்றோர் கூடி இருந்த அரங்கங்களிலும் ஆடிய பெண்கள் யாரும் விருப்பபூர்வமாக அந்த வேலையில் ஈடுபட்டிருந்ததாக வரலாறு கூறவில்லை.
இந்தப் பெண்கள் ஆணாதிக்கவாதிகளாலும் அரசர்கள், நிலப்பரப்புகள், வணிகர்கள் போன்ற செல்வந்தர்களாலும் வலுக்கட்டாயமாக பரம்பரை பரம்பரையாக அடிமை ஆக்கப்பட்டு ஆட்டுவிக்கப்பட்டவர்கள் என்பதுதான் உண்மை. இவர்களை காலம் காலமாக மிகவும் கேவலமானவர்களாக ஆண்களின் பாலியல் தேவையை தூண்டி பணம் பறிப்பவர்களாக சமூகத்தால் சித்தரிக்கப்பட்டு மிக மிக இழிவாக நடத்தப்பட்டவர்கள்.
சுருங்கச் சொன்னால் இந்தப் பெண்கள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள். இந்த தேவதாசி முறையை ஒழித்தே ஆக வேண்டும் என்று குரல்கள் எழுந்த பொழுது, போராட்டம் நடத்தப்பட்ட பொழுது தேவதாசி முறை இருந்தே தீர வேண்டும் என்று வாதிட்டவர்கள், துடியாய் துடித்தவர்கள் சனாதனவாதிகள்தான்; அதாவது மோடியின் மூதாதையர்கள் தான்.
மக்களை மயக்கி ஓட்டுக்களை பெறுவதற்காக ஆபாச நடனம் ஆடுவதாக இந்தியா கூட்டணியினரை வசைபாடும் மோடி, 10 ஆண்டுகளாக செய்து கொண்டிருப்பது என்ன? இந்திய நாட்டை – மக்களை கொள்ளையடித்து அம்பானி, அதானி வகையறாக்கள் சொத்து சேர்க்க மொத்த அரசாங்கத்தையும் ஆட வைத்து அனைத்து வகையான வேலைகளையும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கும் மோடி ஓட்டுக்காக இப்படி ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
தேர்தலில் இந்தியா கூட்டணிக்குச் செல்லும் வாக்குகளை தடுத்தே ஆக வேண்டும், பிஜேபிக்கு மக்களின் வாக்குகளை கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் (3000 இஸ்லாமியர்களை கொன்ற) நரவேட்டை நாயகன் மோடி, ஆபாசமாக – அசிங்கமாக பொது வெளியில் பேசுவதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.
படிக்க:
♦ மதக்கலவரத்துக்கு முன்னோட்டம் பார்க்கும் பாசிச இழிபிறவி!
♦ இந்தியாவே விழித்தெழு! கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்து!
ஜூன் 4ல் தான் மோடியின் முழுமையான முகம் வெளிப்பட போகிறது என்றும் நாட்டையும் ஜனநாயகத்தையும் காக்க மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டி இருக்கும் என்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒரே மாதிரியாக இப்பொழுது எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாசிஸ்டுகளிடமிருந்து நாட்டை மீட்கும் போராட்டத்தில் ஜனநாயகத்தை காக்கும் போராட்டத்தில் ஈடுபட மக்களை அணி திரட்டுவோம்.
—குமரன்