இந்திய தத்துவ மரபு இந்து மரபு இல்லை! பாகம் 10-ன்
தொடர்ச்சி…
இன்னும் அதற்கடுத்தது முக்கியமானது தர்க்கத்திலே தர்க்கம்னு சொல்லுவாங்களே, ஏரணம் என்று மாணிக்க வாசகர் சொல்லுவாரே இந்த விவாதத்திலே மெய்ப்பொருள் காணுவதற்கு விவாதிக்கிற முறை இருக்கிறதே. அதுல டாப்பு டக்கரு நாமதான். இந்து மதத்துல எதையுமே விவாதிக்க முடியாது. எதைச் சொன்னாலும் அதை நீ நம்பு. இதை நம்பு. ஏண்டா நம்புறதுன்னு கேட்டா நம்புன்னு சொல்றன் இல்ல. அதுக்காக நம்பு. எப்படிப்பா நம்பறது?
எங்கிட்ட ஒரு கிறிஸ்தவர் வந்தாரு. ஏசுவை நீங்கள் விசுவாசியுங்கள். நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்ன்னாரு. சரி நான் இரட்சிக்கப்படுவது எனக்கும் ஆசைதான். ஏசுவை விசுவாசிக்க நான் தயாராக இருக்கிறேன். ஏன் நான் அவரை விசுவாசிக்க வேணுன்னு கேட்டா அதான் பைபிள்ல இருக்குதேன்னாரு. சரி பைபிள்ல இருக்கிறத நான் ஏனய்யா நம்பணும்னா, அதான் ஏசுவே சொல்லியிருக்காரே என்றார். ஏசு சொன்னாருன்னு எப்படி தெரியும்னு கேட்டா, அதான் பைபிள்லே இருக்குதே, சரி பைபிள்ல இருக்கிறத நான் ஏன்யா நம்புறதுன்னா, ஏசுவே சொல்லிட்டாரே. ஏசு சொல்லிட்டாருன்னு எப்படிடா நம்புறதுன்னா அதான் பைபிள்ல இருக்குதே. அண்ணாந்த நம்ம கதையே முடியாது போய்வான்னிட்டேன். அவரு இன்னொரு நாள் வந்து ரொம்ப கோவிச்சிகிட்டாரு என்கிட்ட. பிரிய சகோதரரே நீங்க நல்லா பேசறீங்க. ஆனால், ஏசுவை நீங்கள் விசுவாசித்தால் நல்லா இருக்கும்னாரு. எதுக்குங்க’ன்னு கேட்டேன். நீங்கள் ஏசுவை விசுவாசிப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இன்னாயா காரணம் என்று கேட்டதற்கு, நீங்கள் புஷ்பத்தை பார்த்திருக்கிறீர்களா? ஏன்யா 56 வயசாச்சி, பூவே பார்த்திருக்க மாட்டேன் நானு. பார்த்திருக்கேன்னேன்.
புஷ்பத்தை பார்த்திருக்கிறீங்களா அதிலே மொய்க்கிற வண்ணத்து பூச்சியைப் பார்த்திருக்கிறீர்களா? பட்டாம் பூச்சி? பார்த்திருக்கிறேன். அந்த அழகான காட்சியைக் காணும்போது தோன்றவில்லையா. இந்த அழகிய காட்சியைப் படைத்து அளித்த கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டாமா? ன்னாரு. உடனே நான் கைதூக்கிட்டேன். ஸ்தோத்திரம். ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம். அழகான புஷ்பத்தையும் அற்புதமான வண்ணத்து பூச்சியையும் படைத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்னேன். பார்த்தீர்களா கர்த்தர் உங்களுக்குள் புகுந்து விட்டார்ன்னாரு. கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்கண்ணே. ரொம்ப அவசரப்படாத கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு. மேட்டரு கொஞ்சம் இருக்குது. நானு அழகான புஷ்பத்தையும் அதில் மொய்க்கிற அற்புதமான வண்ணத்துப் பூச்சியையும் படைத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சொல்லிவிட்டேன்; அருவருப்பான மலத்தையும் அதில் நெளிகிற புழுவையும் படைத்தளித்த கர்த்தரை கட்டி வைத்து உதைக்க வேண்டும். எப்போ போலாம்னேன். அருவருப்பான மலத்தையும் அதில் நெளிகிற புழுவையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும்? அப்படீன்னு கேட்டேன். அவரு கையத்தூக்கிட்டாரு. எப்படிங்க இப்படியல்லாம் பேசறீங்க. பயமா இருக்குது. நான் இந்த வேலைய விட்டுடுவம்போல இருக்குது என்றாரு. இதுதான் தர்க்க முறையான சிந்தனை. இது தமிழன் இரத்தத்தில் ஓடுகிற தர்க்க சிந்தனை.
இதுதான் எங்களின் இந்திய மரபு. லேட்டா வேலைக்கு போயிட்டு லேட்டா வந்துட்டு அங்க எங்கனா ஊர் மேஞ்சிட்டு வந்து வீட்ல பொய் சொல்லி தப்பிக்கவே முடியாது மவன எவனாலேயும். ஏன்? நம்முடைய தாய்மார்கள் இயற்கையிலேயே, படிக்காமலேயே தர்க்கம் அறிந்த மரபு தத்துவ வாதிகள் என்பதாலே, அன்னிக்கு அப்படி சொன்னியேன்னு இன்னிக்கு கொக்கி போடுவாங்க. கல்யாணம் ஆனப்ப என்னா சொன்ன நீ எனக்கு எதுவுமே வேணாம், நீ ஒன்னு இருந்தா போதுன்னு சொன்னியேன்னு கொக்கி போடறாங்க பாரு, அது தர்க்கம். இந்த வாய் கோபுர வாசல்னு சொன்னானே திருமூலர், தர்க்கம் என்பது நம்முடைய மரபு, இந்திய தத்துவ மரபு. அதற்கு இந்து தத்துவ மரபில், வேதத்திலும் இடமில்லை, ஆரண்யகத்திலும் இடமில்லை, உபநிடதத்திலும் இடமில்லை. இந்த முரண்பாடுகளை தவிர்க்க மகாபாரதத்திலும் இடமில்லை. வேற எதுலயும் இடமில்லை. புரியுதா உங்களுக்கு, இந்து தத்துவ மரபுல இப்ப தர்க்க ரீதியா பேசப்போனா, உங்கள்ள யாரு பார்த்தீங்களோ தெரியல இராமகோபாலனோட விவாதிச்சது சன் டிவியில் வந்ததே, பார்த்தவங்க யோசிச்சு பாருங்க, அந்தாளால என் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடிந்ததா? கரெக்டா சொல்றேளே, சரியா சொல்றேளே ஊ…. ஆன்னான். நான் அப்படி என்னா சொன்னேன்னா, மாட்ட உரித்தான், பசுத்தோலை உரித்தான் என்பதற்காக, அஞ்சு பேர் தோல உரிச்சு கொன்னுட்டு இதுதான் எங்களுடைய இந்துமத சாஸ்த்திர, சம்மதம்னு சொன்னியே, இங்க எங்காளு ஒருத்தன் சைவன் ஒருத்தன் இருக்கறான். அந்தாளு சொல்லியிருக்கிறான் நான் வணங்கற கடவுள் யார் தெரியுமாடா? அப்படின்னு கேக்கறான்.
நீ மாட்டுத்தோல உரிச்சவன் தோல உரிச்சுட்டு அதுதாண்டா சாஸ்திரம், இந்து மதம்னு சொல்ற இங்க எங்க ஊர்ல சைவன் ஒருத்தன் இருக்கறான். அந்த ஆளு காலைல எழுந்து பாட்டுப் பாடறான். என்னாடா பாட்டுன்னு நான் உத்து கேட்டேன். அவன் என்னா சொல்றான், “”சங்க நிதி, பதும நிதி இரண்டும் தந்து, சங்க நிதி பதுமநிதி இரண்டும் தந்து வானாள தருவரேனும், மங்குவார். அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்.” சங்கநிதி, பதுமநிதி இரண்டும் தந்து மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம், அங்கம் குறைந்து அழுகி தொழுநோயராய் ஆ உரித்து, பசுத்தோல் உரித்து, தின்று உழலும் புலையரேணும், கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில், அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுள் ஆவார்” அவர் தான் நான் வணங்கும் கடவுள். அங்கம் குறைந்து அழுகி தொழு நோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரைத்தான் நான் வணங்குவேன் என்கிறான் சைவன்.
அப்பரடிகள், திருநாவுக்கரசர், இதுவும், மாட்டுத்தோல உரிச்சவன் தோல உரிப்பேன்னு சொன்னியே, அந்த இந்து மதமும் ஒண்ணான்னு இராம கோபாலன கேட்டா இல்லியே, அது இல்லியே, அத நாங்க கண்டிச்சிட்டோமேன்னான். அது நாங்க கண்டிச்சோமேன்னா எத கண்டிச்ச? கண்டிச்ச இல்ல, இந்துமத கோவணத்த அவுத்து போட்டுட்டு வெளியே வா. அத கண்டிக்கறதுன்னா எப்படி இந்துவா இருக்க முடியும். நாங்கள் யாரும், இதோ ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கிறோமே, நாங்கள் யாரும் இந்துக்கள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. எங்கள் இந்திய மரபு வேறு. அது தர்க்கம் சார்ந்தது. இப்படி யோசிப்பது. அதனால்தான் சங்கராச்சாரியாராலயும், பெரியார்தாசனுக்கு பதில் சொல்ல முடியல.
அதனால்தான் இராமகோபலனால பதில் சொல்ல முடியல. அதனாலதான் யாராலயும், இன்னும் சவால் விடறேன். பண்டித சிரோமணி, குரோமணி, கூப்பிட்டு வா, எங்கிட்ட பதில் சொல்ல முடியாது. எங்கிட்ட மட்டுமில்ல, எங்க ஊர்ல படிக்காத கைநாட்டு, சாதாரண விவசாயி, இங்கு எல்லோருக்கும் தர்க்கம் தெரியும், படிக்காமலேயே. ஆக, தர்க்க மரபு எங்களுடையது.
தொடரும்…