இந்திய தத்துவ மரபு இந்து மரபு இல்லை! பாகம் 9-ன்

தொடர்ச்சி…

லாயிலா…உல்லா…ன்றாங்க இதுக்கு என்ன அர்த்தம், இல்லப்பா, இல்லப்பா அல்லாவ தவிர வேற கடவுள் இல்லப்பா அத சொன்னவர் முஸ்தபா ரஸூலல்லா, முகமது சல்லப்பா அத நீ நம்புப்பா, அவ்வளவுதான் அது. அவரு எல்லையற்ற அன்பாளர் எல்லையற்ற அறிவாளர், எல்லாவற்றையும் படைத்து காத்து இரட்சிக்கிறவர், இது பாய் சொல்றது. கவனியுங்கள் தோழர்களே, இந்து தத்துவ மரபு இதை ஏற்கிறதா? மறுக்கிறதா என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன்.

இந்து தத்துவ மரபு இதை ஏற்காது. ஏன்னா வேதத்தில் வருணன், இந்திரன், வெங்காயத்தான், வெள்ளப்பூண்டான் எல்லார்கிட்டயும் போய் மாப்பிள என்ன அடிக்கிறாங்கப்பா, பயமா இருக்குதுப்பா, சப்போர்ட்டுக்கு கொஞ்சம் வறியா? அதுதான் வேதம். எல்லா சாமியும் கூப்பிடறது. அதுக்கு, ஊனும், மதுவும், எல்லாத்தையும் கொட்டி யாகம் வளர்க்கிறது உயிர்பலி கொடுக்கறது. இது இந்து தத்துவ மரபே தவிர, இந்திய தத்துவ மரபு அல்ல. இந்திய தத்துவ மரபுல இப்போ நாம என்ன சொல்லிக்கிட்டு இருக்கறோம்னா, ஆழ்வார் பாசுரத்தில குலசேகர ஆழ்வார் சொல்றாரு, அவர் சொன்னது, ஆறாம் நூற்றாண்டு, ஏழாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். கவனியுங்கள்,

ஏழாம் நூற்றாண்டுல குலசேகர ஆழ்வாருக்கு அந்த குரான் புத்தகம் மொழி பெயர்ப்பா தந்தனுப்பி இருந்தார்கள். அத அவர் படிச்சிட்டா சொல்லியிருப்பாரு. அவரு என்னமோ படிச்சு பார்த்து சிந்திச்சு பாடறாரு கடவுள் எப்படி இருப்பான்னு கேக்கறாரு. அவரே கேள்வி கேட்டு, அவரே பதில் சொல்லிக்கிறாரு, நல்லா கவனியுங்க, நாராயணன் ஆமைமேல உட்கார்ந்திருக்கிறான் உலகத்தையே தாங்கிக்கிட்டிருக்கிறான் ஆமைமேல உலகம் உட்கார்ந்திருக்கிறது. சங்கொடு, சக்கரம் அதெல்லாம் சொல்லல. நல்லா கவனியுங்க. குலசேகர ஆழ்வாருக்கு எப்படி தோணுது, மன்னிக்க வேண்டும். நம்மாழ்வாருக்கு எப்படி தோணுது, “”உயர்வர உயர் நலன் உடையவன் எவன் அவன்” எவன் என்றே பதில் சொல்லவில்லை, உயர் வர உயர் நலம் உடையவன் எவன் அவன், கேள்வி மட்டும் கேட்டாச்சு. இதற்கு இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம். எல்லாரும் கவனிச்சிங்கனா புரியும், உயர்வர உயர்நலம், தனக்கு இணை இல்லாதவனாய், தன்னைவிட உயர்ந்தவன் எவனுமில்லாதவனாய் இருக்கிற நலமுடையவன் எவன்னு கேள்வி கேட்டாச்சு பதில் வரல. உயர்வர உயர்நலன் உடையவன் எவன் அவன், மயர்வரமதி நலம் எல்லையற்ற, மயக்கமற்ற, மதிநலம் அறிவுநலம் உடையவன் எவன் அவன், எவன் என்றே சொல்லவில்லை. மூ­ணாவது வரி “”அயர்வரு அமரர்கள் சதிபதி எவனவன்” எவன் சொல்லவே இல்லை.

கடைசியா முடிக்கும் போது துயர் கெட என்னுடைய துயரம் கெட்டுப் போக என்னுடைய துயரம் கெட்டு நல்லவனாய் இருக்க, மகிழ்ச்சியா இருக்க என்ன செய்யலாம்னா, அவனடி தொழுதெழு மனமே, மனமே அவனடியை தொழு எவனடியை? எவனடி என்றே சொல்லாத உயர்வர உயர்நலம், தனக்கு இணையில்லாதவனாய் அகில உலகத்துக்கும் தனக்கு இணை இல்லாதவனாய் இருக்கிறவன்னு அவன் சொல்றான் பாருங்க, லாயில்லாவு இல்லில்லாவு அதுக்கு டிரான்ஸ்லேசன் மாதிரி இல்ல இது. உயர்வர உயர்நிலம், உடையவன் எவனெவன் அந்த பக்கம் பார்த்தா லாயில்லாவு இல்லல்லாவு அவருக்கு இணையே கிடையாது. அதுவே தான் இது. இப்போ இந்த ரண்டு கம்பனியையும் முட்ட வைக்க பார்க்கிற பார்ப்பான கூப்ட்டு இங்கேயே முட்டணுமா? வேணாமா? அவன் சொல்றததான் எங்க ஆழ்வார் சொல்லியிருக்கிறாரு. லாயிலா உல்லாவு, முஸ்தபா ரஸூலல்லாவு, முகம்மது சல்லல்லா, எங்காளு உயர்நலம், உயர்வர உடையவன் எவனவன். மயர் வர மதிநலம் அருளினவன் எவன் அவன், அயர்வரு அமரர்கள் அதிபதி எவனவன், கடைசி வரையிலும் எவன்னே சொல்லல. அவன் யார்னு நீயே கண்டு பிடித்து சிந்திச்சு நீயே தொழுன்னு பொருள். இப்போ சாங்கிய சிந்தனை முறை இந்திய தத்துவ மரபு இதற்கு சில உதாரணங்கள் சொன்னேன். அடுத்தது யோகம்.

நம்முடைய சித்தர்கள் எல்லோரும் யோகிகள். ஊணை சுருக்கி, உள்ளொளி பெருக்கி யோக முறையை கற்றவர்கள். இப்ப கூட நம்ம கிராமத்துல காலைல 4.30 மணிக்கு எழுந்திருக்கணும்னு யாரும் அலாரம் வைப்பது கிடையாது. நம்ம டவுனுக்கு வந்துட்டவங்க தான் அலாரம் வச்சுட்டு 4.30 மணிக்கு எழுந்து ரயிலுக்கு போலான்னு நினைச்சுட்டு 4.30 மணிக்கு அலாரம் அடிச்ச உடனே டயர்டா ஆகிப்போயி எழுந்து அது தல மேல ஒரு தட்டு தட்டி திரும்பவும் படுத்துகிட்டு தூங்கி விடுகிறோம். ஆனால், அருமை சகோதரர் தங்கர் பச்சான் ஒத்துக்குவார், கிராமத்து கதையெல்லாம், அருமையா எடுக்கறவர். அவர் கிராம வாழ்க்கை வாழுகிறவர். அங்கே 4.30 மணிக்கு எழுந்திருக்கணும் கண்ணே! போய் மடை மாத்தணும்டா, தண்ணி கட்டணும்டா. அலாரமில்ல, டைம்பீஸ் இல்ல, ஒரு மசுருமில்ல.

அவனவன் தானா எழுந்து போவான். பயலாஜிகல் கடிகாரம் உடம்புல இருக்கற ஒரே இனம் தமிழினம். உழைக்கும் இனம். நம்ம கிராமத்துலதான் இதை பார்க்கலாம். இதே ஆளு டவுனுக்கு வந்து கெட்டுப் போயிடறான். அது வேற விசயம். ஆனா கிராமத்துல நான்கு மணிக்கு எழுந்துக்கணுண்டா கண்ணுன்னு சொல்லிட்டா சரியா எழுந்துக்குவான். எப்படி அவனுக்கு டைம் தெரியும். அதுதான் யோகம். மனமும், உடலும், ஒன்றி செயல்படுவதற்கு பெயர் யோகம். அது இந்திய தத்துவ மரபு. சரிதானா? மீமாம்சம் செயல்திறன் இதுக்கு விளக்கமே சொல்லத் தேவையில்லை. கூடியிருக்கும் எல்லோரும் உழைக்கும் மக்கள், ஒரு நெல்லை நூறு நெல்லாய் மாற்றுகின்ற மீமாம்ச தத்துவ வாதிகள் இவர்கள். செயல்முறை வித்தகர்கள். செயல் சோம்பேறிகள் இங்க யாருமில்லை.

பார்ப்பான், பார்ப்பான்னா கெட்டவார்த்தைன்னு நினைச்சுகிட்டு பேரறிஞர் அண்ணா, பெரியார்கிட்ட ஒருமுறை ரிப்போர்ட் பண்ணாராம். ஏன்? அண்ணா, “”அவங்க மனசுக்கு கஷ்டப்படாதா, பார்ப்பான், பார்ப்பான்னு, திட்டறீங்களே!” “”அப்ப என்னான்னு சொல்றதுன்னு கேட்டராம்” பெரியார். அதுக்கு அண்ணா சொன்னாராம். பிராமணன்னு சொல்லுங்கன்னு. யோவ் பிராமண்ணன்னா என்னய்யா அர்த்தம்னு கேட்டாராம் பெரியார். பிராமணர்னா பிரம்மத்தை உணர்ந்தவன். பிரம்மத்தை உணர்ந்தவன்னா, அவன் செத்து போயிருக்கணுமே, அவன் உயிரோட இருந்தா அவன் எப்படி பிரம்மத்தை உணர்ந்தவன்னு சொல்றது, பிராமணன்னு என்னால சொல்லமுடியாது. நான் பார்ப்பான்னு தான் சொல்லுவேன். இல்லீங்க அவங்க மனசு கஷ்டபடுமேன்னு சொன்னதுக்கு அதுக்கு பெரியார் சொன்னாராம்.

பார்ப்பான்னு சொல் ஒண்ணும் கெட்ட வார்த்தை கிடையாது. நீயும், நானும் கஷ்டப்பட்டு உழைப்போம். அவன் தூர நின்னு பார்ப்பான். பார்ப்பான்னா அது ஒண்ணும் கெட்ட வார்த்தை கிடையாது. இன்னைக்கு வரைக்கும் பார்ப்பான்தான் மீமாம்சகனாக இல்லையே தவிர செயலூக்கம் உள்ளவனாக இல்லையே தவிர, யோசியுங்கள். எந்தப் பாப்பானாவது கதை எழுதுற சிவசங்கரியோ, கதை எழுதுற நம்ம சுஜாதாவோ உழைப்பாளிகள் என்று இந்த உலகம் ஒப்புக் கொள்ளுமா? இந்துமதி உழைப்பாளியா? எங்கள் பிரபஞ்சனோ, எங்கள் தங்கர்பச்சானோ, எங்கள் திலகவதியோ ஒரு செய்தியை எழுதணும்னா உழைச்சு களைச்சு அந்த செய்தியை தெரிஞ்சுக்கிட்டு எழுதறாங்களே. இந்த உழைப்பாளிக்கு முன்னால் எங்கியோ உட்கார்ந்துகிட்டு டுபாக்கூர் கதை எழுதற எழுத்தாளர்கள் எப்படி இணை ஆவார்கள். எங்கள் சிந்தனை முறை மீமாம்ச சிந்தனை முறை சாங்கிய சிந்தனை முறை யோக சிந்தனை முறை, அதெல்லாம்தான் எங்கள் மரபு. மீமாம்சம்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here