இந்துத்துவத்தின் சோதனைச்சாலை என்று சங்கிகளால் பீற்றிக்கொள்ளப்படும் குஜராத் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று ஏறக்குறைய 50,000 பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்த மதத்திற்கு மாறி உள்ளனர்.
சுயம் சைனிக் தள் (The Swayam Sainik Dal ) என்ற தலித் அமைப்பு
குஜராத் மாநிலத்தின் தலைநகரான காந்தி நகரில் உள்ள ராம் கதா மைதானத்தில்
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. மதமாற்றத்திற்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.
சாதி ஒடுக்கு முறைக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளான மக்கள்
இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என்பது குஜராத்தில் நீண்ட காலமாக நடந்து வரும் ஒன்று. தலித் ஒருவர் குதிரையில் செல்வதற்கோ மீசை வைத்துக் கொள்வதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை. இந்து மதத்தில் உள்ள சாதி, தீண்டாமைக் கொடுமைகள் காரணமாக அதில் இருந்து தப்பிப்பதற்காகத்தான் மதம் மாறுவதாக மதம் மாறிய மக்கள் கூறியுள்ளனர்.
அம்பேத்கர் அவர்கள், அக்டோபர் 14, 1956 அன்று, ஆயிரக்கணக்கான மக்களுடன் இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்த மதத்திற்கு மாறினார். அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி அன்று இந்த மதமாற்றத்திற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என்பது ஒரு சிறப்பு வாய்ந்த செய்தி.
கடந்த ஆண்டு, அக்டோபர் 5ஆம் தேதி அன்று தில்லியில் 7000 பேர் இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்த மதத்தை தழுவிய நிகழ்வு நடந்தது. இப்படி அவ்வப்பொழுது இந்து மதத்தில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவது என்பது நடந்து கொண்டே இருக்கிறது.
இதையும் படியுங்கள்: ஆர் எஸ் எஸ் -இன் நெஞ்சைக் கிழித்த அம்பு!
இந்த நிலையில் ‘இந்துத்துவத்தின் நாயகன்’, ‘துடிப்பு மிக்க தலைவன்’ ’56 இன்ச்’ மோடியின் குஜராத்தில் இப்படிப்பட்ட மதமாற்றம் நடைபெறுவது என்பது பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு மாபெரும் இடியாக இறங்கியுள்ளது. இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கும் இவர்களால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. இப்பொழுது நடந்த மதமாற்றத்தை கண்டும் இனிவரும் காலங்களில் நடக்கவுள்ள மதமாற்றங்களை நினைத்தும் சங்கிகள் கதறித் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தொடரட்டும் சங்கிகளின் கதறல்.
- பாலன்
செய்திஆதாரம்:
The New Indian express