த்தீஸ்கர் சர்குஜா மாவட்ட்த்தில் பர்சா நிலக்கரி சுரங்கத்திற்காக காடுகளை அழிப்பதன் ஒரு பகுதியாக மரங்கள் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்கள் கடந்த வியாழன் அன்று காவல்துறையினர் நடத்திய தடியடியால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர் தாக்குதல் நடத்தியால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கிராம மக்கள் தாக்கியதால் 8 போலீசார் மற்றும் இரண்டு வருவாய் பணியாளர்கள் காயம் அடைந்ததாக காவல்துறை கூறுகிறது. அந்த கிராமத்திற்கு பாதுகாப்பிற்காக சென்ற காவல்துறையை மக்கள் தாக்கியதாக கோடி(Godi) மீடியாக்களும் இடைவிடாமல் அலறுகின்றன. ஆனால் காவல்துறை நடத்திய தடியடியை ஒளிப்பரப்பவில்லை..

என்ன பிரச்சினை? எதனால் மக்கள் போராடுகிறார்கள்?

ஒரே வரியில் கூற வேண்டுமானால் ‘நாட்டின் வளர்ச்சிக்காக மோடி கொண்டு வந்துள்ள திட்டத்தினை எதிர்த்து போராடுகிறார்கள் தேசத்துரோகிகள் (Anti-Indians)’. நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம் என்றால் அது கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கான திட்டம் என மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஹஸ்டியோ அரந்த் பல்லுயிர் நிறைந்த வனப்பகுதி ஆகும். இந்த பகுதியில் ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் லிமிடெட் (RRVUNL) நிறுவனத்திற்காக நிலக்கரி சுரங்கம் அமைக்க காட்டை தாரை வார்த்துள்ளது பாஜக அரசு. இந்த நிலக்கரியை அதானி நிறுவனமே எடுக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்தங்களை ரத்து செய்த நீதிமன்றமும்கூட அதானிக்கு கொடுக்கப்பட்ட சுரங்க உரிமத்தை மட்டும் ரத்து செய்யவில்லை.

ஹஸ்தியோவில் உள்ள காட்பர்ரா கிராமத்தில் உள்ள மரங்களை அக்டோபர் 18 அன்று வெட்ட திட்டமிட்ட நிலையில் முதல் நாளே காவல்துறையை குவித்திருந்த்து சத்தீஸ்கர் அரசு.

காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சமாதானம் செய்த போதிலும் காட்டை விட்டுக் கொடுக்க விரும்பாத பழங்குடி மக்கள் காவல்துறையின் நோக்கத்தை அறிந்து தங்கள் பாரம்பரிய ஆயுதங்களான கோடாரி, வில், அம்பு மற்றும் தடிகளுடன் தயாராய் இருந்தனர். மரங்களை வெட்ட அனுமதிக்காத பழங்குடி மக்கள் மீது தடியடி நடத்தியது காவல்துறை.

காட்டில் வாழும் மிருகங்களை தினம்தினம் எதிர்கொண்ட அனுபவம் மிக்க பழங்குடி மக்கள் அரசினால் ஏவப்பட்ட காவல்துறை மிருகங்கள் நடத்திய தடியடியை தங்களின் பாரம்பரிய ஆயுதங்களை கொண்டு எதிர்கொண்டார்கள். மக்களின் உணர்வு மிக்க போராட்டத்தின் முன் எந்த அதிகார படையும் தாக்குபிடிக்க முடியாது என்பதை காவல்துறைக்கு உணர்த்தினார்கள்.

“இந்த தாக்குதலில் எட்டு பொலீசார், ஒரு துணை ஆட்சியர், ஒரு ‘கோட்வார்’ (கீழ் மட்ட வருவாய் பணியாளர்) காயமடைந்தனர்” என்று சுர்குஜா காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் படேல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். கிராமவாசி ராம்லால் காடியம் எனபவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளது காவல்துறை. ஆனால் அத்தகைய ஆயுதங்கள் எதையும் எடுத்து செல்லவில்லை என காவல்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

காவல் துறையால் தாக்கப்பட்ட பழங்குடி

“ராஜஸ்தானுக்கு நிலக்கரி வழங்கவும் அதானியின் வணிகத்தை விரிவுபடுத்தவும் ஹஸ்டியோ காட்டில் பார்சா நிலக்கரி தொகுதி(Coal Mine Block) என்ற புதிய சுரங்கத்தை வலுக்கட்டாயமாக திறக்க நிராயுதபாணியான கிராம மக்கள் மீது தடியடி மற்றும் அடக்குமுறை நடவடிக்கையை சத்தீஸ்கர் அந்தோலன் பச்சாவோ(CPA) கடுமையாக கண்டிக்கிறது என்று சிபிஏ-வின் கன்வீனர் அலோக் சுக்லா கூறினார். இவரை கடந்த வருடம் இந்த பிரச்சினைக்காக காவல்துறை கடத்தியது குறிப்பிடத்தக்கது.

போலி ஆவணங்கள் மூலம் சுற்றுச்சூழல் அனுமதி!

“பர்சா நிலக்கரி சுரங்கத்திற்கான வனம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகள் போலியான கிராமசபை ஆவணங்களை அடிப்படையாக கொண்டு பெறப்பட்டவை. ஹரிஹஸ்பூர், சாலி, ஃபதேபூர் கிராமங்களின் கிராம சபைகள் நிலக்கரி சுரங்கத்திற்கான ஒப்புதலை வழங்கவில்லை. மேலும் இந்த சுரங்கத்திற்கான அனைத்து ஒப்பந்தங்களையும் உடனடியாக ரத்து செய்ய CPA கோருகிறது” என அலோக் சுக்லா தெரிவித்தார்.

தலித் குடும்பத்தின் பணத்தை ஏமாற்றிப்பறித்த மோடி-அதானி கொள்ளைக் கும்பல்!

2018-ல் அப்போதைய சர்பஞ்ச் மற்றும் பஞ்சாயத்து செயலாளரிடம் அழுத்தம் கொடுத்து போலி கிராமசப தீர்மான ஆவணங்களை தயாரித்து வனத்துறை அனுமதி பெறப்பட்ட்து. 2021 ஆம் ஆண்டில் 30 கிராமங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 300 கிலோ மீட்டர் நடைபயணம் செய்து ராய்பூரை அடைந்தனர். அப்போது ஆளுநர் இது குறித்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார்.

அதன்பின்பு சத்தீஸ்கர் சட்டமன்றம் 2022-ல்(காங்கிரஸ் ஆட்சியின் போது) ஹஸ்தியோ பகுதியில் சுரங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

ஹஸ்தியோ அரண்ட் பகுதியில் சுரங்கம் தோண்டினால் 1,70,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு மனித யானை மோதல்கள் அதிகரிக்கும் என்றும் அதற்கு தூண்டுகோலாக இந்தம் சுரங்கம் இருக்கும் என்றும் அலோக் சுக்லா கூறுகிறார். காடுகளை அழிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என்றார்.

ரூ.12,000 கோடி ஊழல்: இந்தியர்களின் தலையில் நிலக்கரியை அரைத்த அதானி

காவல்துறையின் அராஜகத்தை கண்டிக்கும் விதமாக “நாடு முழுவதும் பழங்குடியினரை ஒடுக்குவதே பாஜகவின் கொள்கையாகிவிட்டது. அதானியின் சுரங்கம் இயங்கும் வகையில் பல நூற்றாண்டுகளாக காடுகளின் உரிமையாளர்களாக இருந்த பழங்குடியினர் வெளியேற்றப்படுகிறார்கள்…” என்று தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஹஸ்தியோ ஆரண்யா பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படாது என்று தீர்மானம் நிறைவேற்றிய போது பாஜக ஆதரித்தது. அதேபோல் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது மோடியும் பழங்குடி மக்களை பாதுகாப்பேன் என்று வாக்குறுதியும் அளித்துள்ளார். ஆனால் அவையெல்லாம் வெறும் தேர்தல் வாய்சவடால்கள் என்பதை நிரூபித்துள்ளது பாசிச பாஜக.

அதானிக்கு சேவை செய்வதில் முனைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி நட்புக்காக இதைக் கூட செய்ய மாட்டாரா என்ன? ஆசியாவிலே மிகப் பெரிய பணக்காரனாக வளர்ந்திருக்கும் அதானியை உலகின் முதல் பணக்காரனாக ஆக்க எந்த எல்லைக்கும் பாசிச மோடி செல்லலாம். ஆஸ்திரேலியா நிலக்கரி சுரங்கம், கென்யா ஜெமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம் குத்தகை ஒப்பந்தம், இஸ்ரேல் துறைமுகம் என தேசங்கடந்த தரகு முதலாளியாக பரிணமித்திருக்கும் அதானிக்கு பர்சா சுரங்கத்திற்காக பழங்குடி மக்களை பாசிச மோடியை பயன்படுத்தி வெளியேற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார். ஆனால் காட்டின் வளத்தை பாதுகாக்க பழங்குடி மக்களின் உறுதியான போராட்டத்திற்கு இந்திய மக்கள் அனைவரும் உறுதுணையாக நிற்போம்.

  • சுவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here