ழலை ஒழிக்கப் போவதாக கூறி ஆட்சியைப் பிடித்த உத்தமர் மோடியின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் தற்பொழுது ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியுள்ளன.

அதன் தற்போதைய வரவுதான் அதானியின் நிலக்கரி ஊழல்.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு வெளி வரும் “பைனான்சியல் டைம்ஸ்” என்ற பத்திரிக்கை உலகப் புகழ் பெற்றது; நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டது. அந்தப் பத்திரிக்கையில் வெளிவரும் செய்திகள் உண்மையாகத்தான் இருக்கும் என்று உலக அளவில் நம்பப்படுகிறது.

இப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட பத்திரிக்கை அதானின் ரூ.12,000 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து ஆய்வு செய்து ஆதாரங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது.

2019 க்கும் 2021க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் 32 மாதங்களில் மாதங்களில் 30 கப்பல்களில் கப்பல்களில் இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு அதானியின் கம்பெனி மூலமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் நிலக்கரி ஏற்றுமதி செய்யப்படும் பொழுது (கப்பல் போக்குவரத்து கட்டணம் மற்றும் காப்பீட்டுத் தொகை உட்பட ) அதன் விலை 142.1 மில்லியன் டாலர். ஆனால் இந்தியாவில் இந்த நிலக்கரி இறங்கும் பொழுது இதன் விலை 215 மில்லியன் டாலர் என்று என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதாவது நிலக்கரியின் விலை 52% உயர்த்தி காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளராக அதானி உள்ள நிலையில் அவரின் 10 நிறுவனங்கள் தான் இந்திய அளவில் அனல் மின் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிலையில் தான் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்துகொண்டே செல்கிறது என்பதையும் இணைத்துப் பேசுகிறது இந்த அறிக்கை.

அதானியிடம் இருந்து அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்கப்பட்டதால் மின்சார உற்பத்தி செலவு அதிகரித்து மின்கட்டணம் உயர்கிறது. மக்கள் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆக மக்கள் பணம் மின் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கப்பட்டு அதானியின் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் இருந்து மூன்று இடைத்தரகர்கள் மூலம்
(தைவானின் தைபேநகரில் உள்ள ஹாய் லிங்கோஸ், துபாயில் டாரஸ் கமாடிட்டிஸ் ஜெனரல் டிரேடிங் மற்றும் சிங்கப்பூரில் பான் ஏசியா டிரேட்லிங்க் ஆகிய நிறுவனங்கள் மூலம்) நிலக்கரியை அதானி இறக்குமதி செய்துள்ளார்.இதில்
ஹாய் லிங்கோஸ் நிறுவனம் தைவானிய தொழிலதிபர் சாங் சுங்-லிங்கிற்கு சொந்தமானது. இந்த சாங் சுங்-லிங் அதானியின் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர்களில் ஒருவராக (ரகசிய பங்குதாரர்) 2013 லிருந்து 2017 வரையிலான ஆண்டுகளில் இருந்துள்ளார் என்று பினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் படியுங்கள்:

இப்படி நிலக்கரி விலையை உயர்த்தி சுருட்டப்பட்ட பணம் வரியில்லா சொர்க்கத்தின் மூலமாக அதானி நிறுவனத்திற்கு முதலீடாக வந்துள்ளது என்று இந்த ஏடு குறிப்பிடுகிறது.

ஆக, இந்த நிலக்கரி ஊழலில் ரூ.12000 கோடியை அதானி சுருட்டியுள்ளார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. மோடியின் ஆசீர்வாதம் இன்றி இப்படிப்பட்ட கொள்ளை நடந்தேறுவதற்கு வாய்ப்பில்லை என்பதையும் அந்த ஏடு சுட்டிக்காட்டி உள்ளது.

  • பாலன்

மூலம்: https://thewire.in/business/adani-coal-imports-over-pricing-customers-overcharged-fuel-ft

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here