சாரு நிவேதிதாவின் ’சாவும்’ இதர இலக்கிய பிழைப்புவாதிகளின் ’வாழ்வும்’!

“சீரோ டிகிரி, ராசா லீலா, தேகம், எக்சிஸ்டென்சியிலிசமும் ஃபேன்சி பனியனும் என்ற சாருவின் அத்தனை நாவல்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் பாலியல் வக்கிரங்கள்

‘எனக்கு தூக்கு மாட்டிக்கொண்டு சாகலாம்போல இருக்கிறது!’

—-சாரு நிவேதிதா!

000

“ஒரு கன்னட எழுத்தாளர் – நாற்பது வயது – பத்து புத்தகம் எழுதியிருக்கிறார் –

ஒரு புதினம் பதினைந்தாயிரம் பிரதிகள் ஒரு ஆண்டில் விற்கிறதாம். கன்னட மொழியில்தான் எழுதுகிறார்.

பெங்குவின், ஹார்ப்பர்காலின்ஸ் என்று அத்தனை பதிப்பகங்களும் அவருடைய நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுகின்றன.

ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு மெக்ஸிகோவில் நடந்ததாம். வெளியீட்டு விழாவுக்கு மெக்ஸிகோ போய் வந்தாராம்.

நாற்பது வயது. பத்து புத்தகம்.

எனக்கு எழுபது வயது. நூறு புத்தகம். தொகுக்கப்படாமல் இன்னும் ஐம்பது புத்தகம் உள்ளன.

எனக்கு சென்னையை விட்டு வெளியே செல்ல சாத்தியமே இல்லாமல் இருக்கிறது.

கன்னடம் இலக்கியத்தைக் கொண்டாடுகிறது. நான் பிறந்த சமூகம் சினிமாவைக் கொண்டாடுகிறது.

|| எனக்கு தூக்கு மாட்டிக்கொண்டு சாகலாம் போல் இருக்கிறது ||”

-சாருநிவேதிதா.

என்று சாரு போட்ட முகநூல் பதிவை பார்த்து பதட்டத்தில் சிக்கியுள்ளனர் அவரது ரசிகர் பெருமக்கள்.

யார் இந்த சாரு நிவேதிதா என்று குழம்பும் சிலருக்காக அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை எமது இணையதளக் கட்டுரைகளில் இருந்து எடுத்து தருகிறோம்.

”நான் நரேந்திர மோடியின் ஆதரவாளன்” என்று வெளிப்படையாக அறிவிக்கிறார் சாரு நிவேதிதா. இவர்தான் முன்பு நித்தியானந்தாவுக்கு சிஷ்யராக இருந்தார் என்பதாலும், அந்த நித்தி காலில் விழுந்து கும்பிட்டவர்தான் நரேந்திர மோடி என்பதாலும் இந்த வட்டத்தை பூர்த்தி செய்து புரிந்துகொள்வது சுலபம்தான். மேலும் முகநூலில் இயங்கிய ஒரு இளம் பெண்ணுடன் சாரு நிவேதிதா நடத்திய ஆபாசமும், வக்கிரமும் நிறைந்த உரையாடல் முன்பு வெளியானது நினைவிருக்கலாம். நித்தியானந்தாவின் லீலைகள் காட்சி வடிவில் இருந்ததால் உடனே அது சூப்பர் ஹிட்டாகிவிட்டது. சாருவின் வக்கிர அரட்டை, எழுத்து வடிவில் இருந்ததால் சுமாரான ஹிட்டுதான். ஒருவேளை எழுத்தாளனை தமிழ்ச் சமூகம் மதிக்கவில்லை என்பது இதுதானோ? என்று 2013 ஆம் ஆண்டில் எமது இணையதளத்தில், ”சாரு நிவேதிதா: மோடிக்கு கொடி பிடிக்கும் இலக்கிய தரகன்’ என்ற கட்டுரையில் அம்பலப்படுத்தி எழுதியிருந்தோம்.

“சீரோ டிகிரி, ராசா லீலா, தேகம், எக்சிஸ்டென்சியிலிசமும் ஃபேன்சி பனியனும் என்ற சாருவின் அத்தனை நாவல்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் பாலியல் வக்கிரங்கள், அதிலும் பிரபலங்களின் கிசுகிசு கதைகளாகவே நிறைந்திருக்கும். சாருவின் நெருங்கிய நண்பர் அந்துமணி இரமேஷின் வாரமலரில் துணுக்கு மூட்டையாக வரும் கிசுகிசுத் துணுக்குகள் இங்கு குறுங் காவியமாக நீண்டிருப்பது சரோஜா தேவி இரசிகர்களுக்கு நிச்சயம் வரப்பிரசாதம்தான். இணையத்தில் இருக்கும் எந்த படிப்பும், அக்கறையும் இல்லாத நடுத்தர வர்க்க, மேட்டுக்குடி லும்பன் பிரிவினருக்கு சாருவின் கிசுகிசு கிளுகிளுப்பு கதைகள் ஒருபெரிய வடிகாலாக இருக்கிறது. இவர்கள்தான் சாருவின் இரசிகர்கள்”என்று 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, ”சரசம், சாடிஸம், சாரு நிவேதிதா” எனற எமது இணையக் கட்டுரை ஒன்றில் சாருவின் யோக்கியதையை அம்பலப்படுத்தி எழுதி இருந்தோம்.

இத்தகைய பின் நவீனத்துவ கழிசடை எழுத்தாளரான திருவாளர் சாரு நிவேதிதா தான் தனது வாழ்வை முடித்துக் கொள்வதற்கு தூக்குக் கயிற்றை தேடிக் கொண்டுள்ளார்.

பொதுவாக கம்யூனிசம் பேசிக்கொண்டு அல்லது கம்யூனிசம் கதைக்கு ஆவாது என்று அதற்கு மேல் ஏதோ ஒன்று உள்ளதை போல இலக்கிய ரசவாதத்தில் இறங்கி தனது ஆழ் மனதும் நிஜ உடலும் தேடும் கழிசடை புத்திக் கொண்ட இலக்கிய எழுத்தாளர்களை பெரும் இலக்கியவாதிகளை போல கொண்டாடுகின்ற மனநிலையை நாம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது.

சமகாலத்தில் நடக்கின்ற அரசியல் நிகழ்ச்சி போக்குகளை பற்றி பேசாத இலக்கியவாதியும், சமகாலத்தில் நடக்கின்ற மக்களின் துன்ப துயரங்களை பற்றி பேசாத எழுத்தாளனும், ’சமூகத்தின் மனசாட்சி’ என்று கற்பனை புனைவுகளில் இறங்கி கதையளப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

கன்னட எழுத்தாளரின் புத்தகம் பத்து பதிப்புகளை கண்டுள்ளது என்றும், வெளிநாடு சென்று வர அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும்ம் வயிறு எரிகின்ற பின்நவீனத்துவ அற்பவாதி தான் சாரு நிவேதிதா என்பது அவரது இந்த பதிவின் மூலம் மேலும் நிரூபணம் ஆகிறது.


படிக்க: அரசு பள்ளி மாணவர்கள் குறித்து ஜெயமோகனின் மோசமான கருத்து!


கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்துப் போராடுகின்ற ஒரு அரசியல் ஏடு இலக்கிய களத்தில் இது போன்ற மொக்கைகளை எதிர்த்து போராட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம்.

சினிமா கழிசடை விஜயை கொண்டாடுகின்ற மனோபாவம் கொண்ட இளைஞர்கள்; சாகச பைக் ஹீரோ டிடிஅப் வாசனை கொண்டாடுகின்ற இளைஞர்கள்; 30 நாட்களில் புரட்சியை நடத்துவது எப்படி என்று ’குறுக்கு வழியில்’ புரட்சி செய்வதற்கு முயற்சிக்கின்ற ’சாகசவாதிகளை’ கொண்டாடுகின்ற மனநிலை கொண்ட இளைஞர்கள்; கிரிக்கெட்டில் இந்திய ஆஸ்திரேலிய அணிக்கு இடையில் நடக்கின்ற தொடரில் பும்ரா வீசுகின்ற பந்துவீச்சை சிலாகித்து பேசுகின்ற இளைஞர்கள் நிரம்பி வழிகின்ற சூழலில், சமூகப் பொறுப்புள்ள இளைஞர்களை தேடிக் கண்டுபிடித்து, ’அரசியல் காயடிக்கும்’ முயற்சி செய்கின்ற இப்படிப்பட்ட பிழைப்புவாத கழிசடை எழுத்தாளர்களை அம்பலப்படுத்தி முறியடிப்பதும் அவசியம்.

சாரு விருப்பப்பட்டால் அவர் தூக்கு மாட்டிக் கொள்வதற்கு பொருத்தமான ஒரிஜினல் தூக்குக் கயிற்றை நாம் இம்போர்ட் செய்தாவது கொடுத்து விடலாம். ஆனால் சாரு போன்ற கழிசடை மனநிலையில் புகழ் விரும்பும், சுய விளம்பர மோகம் கொண்ட, தன்னை முன்னிறுத்தி சிந்தித்துக் கொண்டே ’இலக்கியம்’ பேசுகின்ற அல்லது எப்போதாவது அரசியல் பேசுகின்ற இலக்கியவாதிகளை, சினிமாவில் இடம் பிடிக்க தனது ’அண்ணன்களை’ ஆராதிக்கின்ற இலக்கியவாதிகளை எந்த தூக்கு கயிற்றில் ஏற்றுவது என்பதுதான் நம் முன்னே உள்ள கவலை?

  • தமிழ்ச்செல்வன்.

1 COMMENT

  1. சாரு நிவேதிதா,இறந்து விட்டார் என்று நினைத்தேன்.ஆனால் கட்டுரை முழுவதும் படித்த பின்பு தான் தெரிந்தது ,இதற்கு மேல் அந்த மனிதர் உயிரோடு இருந்தால் என்ன,? இறந்தார் என்ன? என்று எண்ணும் அளவிற்கு இருக்கிறது.
    முடிச்சு விட்டீங்க ! போங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here