நடிகர் சீமானை கைது செய்யும் வரை ம.க.இ.க, பு.ஜ.தொ.மு தலைமையில் தொடர் போராட்டம்

திருச்சியில்… தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேசி தமிழகத்தை கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் நடிகர் சீமானை கைது செய்யும் வரை ம.க.இ.க, பு.ஜ.தொ.மு தலைமையில் தொடர் போராட்டம்

புதுச்சேரியில் நடிகர் சீமான் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போது தந்தை பெரியாரை மிகவும் இழிவுபடுத்தி அவர் சொல்லாததை சொன்னதாக அவதூறுபடுத்தி பேசினான்.

தொடர்ந்து இது போன்று மக்கள் மதிக்கும் தலைவர்களை மிகவும் இழிவாக பேசி தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற ஆர்.எஸ்.எஸ் ன் அடியாளாக வேலை செய்யும் சீமானை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி…

நேற்று (10.01.2024) காலை 11 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலை அருகே மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்திற்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர்.ஜீவா தலைமை தாங்கினார்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர்.சிவா,
அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர்.பழனிச்சாமி,
மக்கள் அதிகாரத்தின் மாவட்டச் செயலாளர் தோழர்.செழியன்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்டச் செயலாளர் தோழர்.கமலக்கண்ணன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர் ரஞ்சித், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ம.க.இ.க மையக் கலைக்குழு பொறுப்பாளர் தோழர்.லதா,

மக்கள் அதிகாரத்தின் மாவட்டப் பொருளாளர் தோழர்.கார்க்கி,

ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர்.சம்சுதீன்,

ரெட் பிளாக் கட்சி மாவட்டத் தலைவர் தோழர்.A.C.இராமலிங்கம்,

தந்தை பெரியார் திராவிடர் கழகம் தோழர்.வின்சென்ட்,

ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் தோழர்.மாணிக்முருகேசன்,

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர்.மணலிதாஸ்,

மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் தோழர்.செழியன்,

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ஆதி,

ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ம.க.இ.க மாநில பொதுச் செயலாளர் தோழர்.கோவன் சிறப்புரையாற்றினார்.

ம.க.இ.க தோழர்.சீனிவாசன் தலைமையில் சீமானை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பெரியார் அவர்களின் புகழை போற்றியும் முழக்கங்கள் இட்டவாறு தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேசிய நடிகர் சீமானை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ம.க.இ.க மாவட்ட செயலாளர் தோழர்.ஜீவா தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

இறுதியாக ம.க.இ.க வின் மாவட்டப் பொருளாளர் தோழர்.சரவணன் நன்றியுரையாற்றி போராட்டத்தை நிறைவு செய்தார்.

இப்போராட்டத்தில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் நிர்வாகிகள், தோழர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள், ஜனநாயக சக்திகள் என திரளாக பங்கேற்றனர்.

தகவல்: ம.க.இ.க பு.ஜ.தொ.மு திருச்சி மாவட்டம். தொடர்புக்கு: 8056905898, 8098604347.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here