மிழகம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், பஞ்சாப் ஆகிய 07 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடந்து முடிந்தன. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 அன்று நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தபடி நடைபெற்று அதன் முடிவுகள்  வெளியானது.

சில எம்.எல்.ஏ.க்களின் மரணம் மற்றும் ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் இந்த 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்திருந்தாலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த முதல் இடைத்தேர்தல் என்பதால் முக்கிய கவனம் பெற்றன.

இண்டியா கூட்டணி வெற்றியும்! கூட்டணியில் தோல்வியும்!

இடைத்தேர்தல் நடந்த 13 இடங்களில் காங்கிரஸ் – 4, திரிணாமுல் காங்கிரஸ் – 4, ஆம் ஆத்மி – 1, திமுக – 1 என மொத்தம் 10 இடத்தில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளன. ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளரும் இரண்டு இடங்களில்  பாசிச பாஜகவும் வென்றுள்ளனர்.

கூட்டணியாகப் பார்க்கும் போது இண்டியா கூட்டணிக் கட்சிகள் சில மாநிலங்களில் பாசிச பாஜக கூட்டணி கட்சிகளை தோற்கடித்து  கூடுதலாக இடங்களைப் பெற்றுள்ளன என்பது உண்மை. குறிப்பாக, காங்கிரஸ் ஏற்கனவே எம்.ஏல்.ஏ-வாக இருந்த ஓர் இடத்தை இழந்துள்ளது. ஆனால், புதிதாக 02 இடங்களைக் பெற்றும் ஒரு இடத்தைத் தக்க வைத்தும் உள்ளது. ஆம் ஆத்மி தன் ஓர் இடத்தைத் தக்க வைத்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் 3 இடங்களைக் கூடுதலாகப் பெற்றும் ஓர் இடத்தை தக்க வைத்தும் உள்ளது. திமுக தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை  பாசிச பாஜக இரண்டு இடங்களில் புதிதாக வென்றும், 3 இடங்களை இழந்தும் இருக்கிறது. கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஓர் இடத்தை இழந்துள்ளது.

இண்டியா கூட்டணி 10 இடத்தில் வென்று உள்ளது என பெருமைப்பட்டுக் கொள்கின்றன. ஆனால், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கூட்டணியாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவில்லை. கூட்டணியில் இருக்கும்  காங்கிரசுக்கு எதிராக தங்கள் வெற்றியை மாநிலக் கட்சிகளான திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி பெற்றிருக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் தொகுதிகளில் காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை பார்க்கும் போது கூட்டணியாக வெற்றியும் கூட்டணியில் தோல்வியும் அடைந்துள்ளது இண்டியா கூட்டணி.

பாசிச  பாசிச பாஜகவை தேர்தல் அரங்கில் தோற்கடிப்பதற்கு இண்டியா கூட்டணி உருவாகி இருந்தாலும் இதற்கென பொது விதியை வகுத்துக் கொள்ளவில்லை. அதாவது, பாசிச  பாசிச பாஜக-வை தேர்தல் அரங்கில் தோற்கடிக்க தங்களுக்குள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதும், பாசிச  பாசிச பாஜகவை தோற்படிப்பற்கான கொள்கை ரீதியாக திட்டமும் ஏதும் வகுத்துக் கொள்ளவில்லை என்பதால் இதன் பாசிச எதிர்ப்பு கொள்கையானது, ’வெங்காயத் தோலை உரித்த கதையாக’ மாறி வருகிறது. இதனால் இண்டியா கூட்டணியில் பல்வேறு முரண்பாடுகள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக, ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களது கட்சியின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள, பதவியைப் பாதுகாக்க இந்தக் கூட்டணியில் பல்வேறு முரண்பாடுகள் தோன்றி வளர்ந்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. இதனைப் பயன்படுத்தி பாசிச  பாசிச பாஜக தனது சதித்தனத்தால் கூட்டணிக்குள் விரிசலை உருவாக்கும் அரசியலை கையாளும் அபாயமும் உள்ளது.

மக்களின் அதிருப்தியால் சரியும்  பாசிச பாஜக செல்வாக்கு!

2024 நாடாளுமன்றத் தேர்தலில்  பாசிச பாஜகவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சிகள் தயவில் ஆட்சியை அமைத்துள்ளளது.  பாசிச பாஜகவிற்கு தனிப் பெருபான்மை கிடைக்கவில்லை என்றாலும் அதன் வாக்கு வங்கி பெரிய அளவில் குறையவில்லை. அதே நேரத்தில்  பாசிச பாஜக மீதான மக்களின் அதிருப்தி நகர்ப்புறத்தில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சனை, அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு ஆகியவை மக்களிடையே நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தியதின் விளைவு மக்கள்  பாசிச பாஜக கட்சியின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதே.

இந்த அதிருப்தியை எதிர்க்கட்சிகள் தங்களது பிரச்சார வியூகங்கள் மூலம் உருவாக்கவில்லை. மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த சில முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டனர். புரட்சிகர ஜனநாயக சக்திகள், அறிவுஜீவிகளின் தொடர் பிரச்சாரங்களும் மக்களின் சொந்த அனுபவமுமே  பாசிச பாஜக மீது மக்களுக்கு அதிருப்தியை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிச பாஜக மீதான மக்களின் அதிருப்தி தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளிலும் வெளிப்பட்டு உள்ளது. இதனால்தான்  பாசிச பாஜக வெறும் 02 இடங்களில் மட்டுமே வெற்றியைப் பெற்றது. மக்கள் மத்தியில்  பாசிச பாஜக-வின் அரசியல் செல்வாக்கு சரிவை சரியாக இந்தியா கூட்டணி பயன்படுத்தாவிட்டால் அடுத்தடுத்த சுற்றுகளில் நடக்கும் தேர்தலில்  பாசிச பாஜக வெற்றி பெறவே வழிவகுக்கும்.

கீழிருந்து பாசிச சிந்தனையோடு கட்டியமைக்கப்பட்டுள்ள ஒரு பாசிச கட்சியை தேர்தல் அரங்கில் தோற்கடிப்பற்கு குறைந்தபட்ச செயல் திட்டத்துடன் கூடிய பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை உருவாக்காமல் வெறும் தேர்தல் கூட்டணி மூலம் தோற்கடிக்க முடியாது.

தேவை: வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல! பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி!

ஒவ்வொரு நாளும்  பாசிச பாஜக செய்யும் மக்கள் விரோத பாசிச நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, மக்களிடம் பிரச்சாரமாக மேற்கொள்வதும், இதற்கு பாசிச எதிர்ப்பு கொள்கை அடிப்படையில் குறைந்தபட்ச செயல் திட்டத்துடன் கூடிய ஐக்கிய முன்னணி உருவாக்கப்படவும் வேண்டும்.

கீழிருந்து பாசிச சிந்தனையோடு கட்டியமைக்கப்பட்டுள்ள ஒரு பாசிச கட்சியை தேர்தல் அரங்கில் தோற்கடிப்பற்கு குறைந்தபட்ச செயல் திட்டத்துடன் கூடிய பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை உருவாக்காமல் வெறும் தேர்தல் கூட்டணி மூலம் தோற்கடிக்க முடியாது. இதனை இந்தியா கூட்டணி செய்யாமல் தங்களது சொந்த கட்சி நலன்களுக்காக, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று மட்டும் செயல்பட்டால் பாசிச பாஜகவை தேர்தல் அரங்கில் தோற்கடிக்க முடியாது.

மாறாக, ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி‌ என சொல்லிக் கொண்டு மாநிலங்களில் தனித்தனியாக போட்டியிட்டுக் கொண்டே இருந்தால் மக்கள் வேறுவழியின்றி நிர்க்கதியாக நிற்பார்கள். இதனை பாசிசம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி எளிமையாக வெற்றி பெறும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ஏழு மாநில இடைத்தேர்தலிலும் இண்டியா கூட்டணி எடுக்க வேண்டிய படிப்பினை இதுவே.

  • முனியாண்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here