னைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 5 ஜி ஏலம் முடிவடைந்துள்ளது. பலராலும் 5ஜியில் பல லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது என பேசப்பட்டு வரும் சூழ்நிலையில் ஊடகங்கள் இதுப் பற்றி வாய்திறக்கவே இல்லை. 2ஜி ஊழலை தண்டோரா அடித்த ஊடகங்கள் 5ஜி குறித்து பேசாமல் நவ துவாரங்களையும் மூடிக் கொண்டுள்ளன.

5ஜி ஏலம் ஒன்றிய அரசால் எதிர்பார்க்கப்பட்ட தொகை  4.3லட்சம் கோடி. ஆனால் கிடைத்ததோ 1.5 லட்சம் கோடி தான். மீதம் வரவேண்டிய தொகை எங்கே போனது என்பது தான் அனைவராலும் எழுப்படும் கேள்வி. இதற்கு ஒன்றிய அரசிடம் இருந்தும் முறையான பதில் இல்லாததால் தான் இதில் முறைகேடு நடந்திருக்கிறது என்கிறோம். இதே நிலை தான் 2ஜி ஏலத்தின் போதும் நடந்தது.

முதலில் 5ஜி என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

5ஜி என்பது 5th Genration( தலைமுறை)க்கான தொழில்நுட்பம். இது சாதாரண மக்களின் பயன்பாட்டிற்க்கு பெரிய அளவில் பயன் தராது. வேண்டுமானால் மக்கள் பேசுவது போல் படங்களை டவுன்லோட் செய்வதற்கு குறைவான நேரம் தேவைப்படும் என்று சொல்லலாம். இப்படி சொல்லித்தான் ஜியோ போன்ற நிறுவனங்கள் பணத்தை நம் பாக்கெட்டில் இருந்து உருவுகின்றன.

சரி விசயத்திற்கு வருவோம்.

மோடியை பொறுத்தமட்டில்  இந்தியாவின் தரகு முதலாளிகளான அம்பானி, அதானி உள்ளிட்ட முதலாளிகளின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. அதானியை உலகின் 4 வது பணக்காரர் ஆக்கிவிட்டார் மோடி. அம்பானியை கவனிக்காமல் விட்டுவிடுவாரா என்ன?

4ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம் ஆன போது Vodafone, Airtel, Idea போன்ற நிறுவனங்களே முன்னணியில் இருந்தன.  அதுவரை நம்மிடம் பணம் இருந்தால்  ரீசார்ஜ் செய்வோம். மாதம் 200 ரூபாயே அதிகம் தான். அந்த நேரத்தில் தான் அம்பானியின் ஜியோ எண்ட்ரி. Free sim card சில மாதங்களுக்கு Free Internet.

இளைஞர்களுக்கோ அடிச்சான் பாரு அம்பானி என்று விடியற்காலையிலேயே கடை வாசலில் தவம் கிடந்து சிம் கார்டை வாங்கியவர்கள் ஏதோ சாதித்துவிட்டவர்கள் போல் வெளியில் பேசிக் கொண்டார்கள். அம்பானியின் இலவசத்தின் பின்னே உள்ள ஆபத்தை யார் சொன்னாலும் உணரும் நிலையில் அவர்கள் இல்லை. அவர்களை பொறுத்தவரையில் ஸ்மார்ட் ஃபோனில் மூழ்கி கிடக்க youtube வீடியோ நிற்காமல் ஓடவேண்டும். சினிமாவை சில நிமிடங்களிலேயே டவுன்லோட் செய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மி விளையாடும் போது நெட்வொர்க் கட் ஆக கூடாது.

சில மாதங்கள் இலவச இண்டர்நெட் என ஆரம்பித்த ஜியோ அதன் பிறகு வசூல் வேட்டையை ஆரம்பித்தது. ஜியோ விலை ஏற்றுவதற்கேற்ப மற்ற நிறுவனங்களும் விலையை ஏற்றின. இதனால் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களுக்கும் செலவு அதிகமானது. இலவசத்தின் மூலம் வாடிக்கையாளர்களை இண்டெர்நெட்டிற்க்கு அடிமையாக்கி சுரண்டிய ஜியோவின் இன்றைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40 கோடிக்கும் மேல்.


இதையும் படியுங்கள்:விலைவாசி உயர்வு: கொண்டாட்டத்தில் அதானி அம்பானி!


 

ஒரு கட்டத்தில் ஜியோவுக்கு எதிரான போட்டியில் தாக்குபிடிக்க முடியாமல் Vodafone, Airtel, Idea போன்ற நிறுவனங்கள் தடுமாற ஆரம்பித்தன. Idea நிறுவனம் Vodafone நிறுவனத்துடன் இணைந்தது. ஆனாலும் அவர்களால் ஜியோவுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்பது தான் எதார்த்தம்.

5ஜி ஏலத்தில் கிட்டத்தட்ட ரூ 88,078 கோடிக்கு ஏலத்தில் முன்னணியில் உள்ளது. அதாவது மொத்தமாக விற்க்கப்பட்ட 1,50,173 கோடியில் அம்பானி வாங்கியது மட்டும் 50 சதவீதத்திற்க்கும் மேல். அடுத்த 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் இது. பல நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கலந்துக் கொண்டதில் Airtel நிறுவனம் ரூ.43,084 கோடிக்கும், Vodafone-Idea கூட்டு நிறுவனம் 18,784 கோடிக்கும் மட்டுமே வாங்கியுள்ளன. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் அம்பானியின் ஜியோ தொலைத்தொடர்பு துறையில் ஏகபோகமாக வளர்வதையே காட்டுகிறது.

புதிதாக தொலைதொடர்பு துறையில் நுழைந்துள்ள அதானி நிறுவனம் 212 கோடிக்கு அலைக்கற்றையை வாங்கியுள்ளது. இது பொதுப்பயன்பாட்டிற்க்கு அல்ல. அதானியின் நிறுவனங்கள் சார்ந்த தனி பயன்பாட்டிற்க்கு மட்டுமே.

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் இந்தியாவின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான BSNL-ல் இந்த ஏலத்திலேயே பங்கேற்கவில்லை. இந்த ஏலம் நடந்த சமயத்தில் ஒன்றிய அரசு BSNL நிறுவனத்திற்கு ரூ.1.6 லட்சம் கோடி ஒதுக்கி இருப்பதாக செய்தி பரப்பப்பட்டது. அது இந்த 5G ஏலத்தில் BSNL பங்கு கொள்ளவில்லை என்பதை மறைக்க நடத்தப்பட்ட நாடகம் என பலரும் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளனர்.  மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்தே BSNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக் கட்டுவதில் மும்மரமாக செயல்பட்டு வருகிறார். அவரா BSNL நிறுவனத்திற்கு 5ஜி இணைய சேவையை வழங்க போகிறார். 4ஜி சேவையே இன்னும் வழங்கப்படவில்லை என்பது தான் BSNL-ன் நிலைமை.


இதையும் படியுங்கள்: கார்ப்பரேட்டுகளால் சூறையாடப்படும் இயற்கை! துடித்துக்கொண்டிருக்கும் இந்தியா !!


 

BSNL-லை ஒழித்துக் கட்டி தரகு முதலாளியான அம்பானியின் ஜியோவை இந்தியாவின் ஏகபோகமான நிறுவனமாக மாற்றுவதில் முனைப்பாக செயல்படுகிறார் பாசிஸ்ட் மோடி.

பல லட்சம் கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றையை சொற்ப தொகைக்கு ஏலம் விட்டதன் மூலம் கார்ப்பரேட்டின் முகச்சிறந்த சேவகர் மோடி  தான் என நிரூபித்துள்ளார். ஆனால் நாம் இதையெல்லாம் பார்த்து கடந்து விடலாம் என்று நினைத்தீர்கள் என்றால் நாளை நம்முடைய அத்தியாவசிய சேவைகள் ஒவ்வொன்றிற்க்கும் கார்ப்பரேட் முதலாளிகளை சார்ந்திருக்கும் நிலை உருவாகும். பணம் படைத்தவன் மட்டுமே வாழமுடியும் என்ற நிலை உருவாகும். இதை நாம் அனுமதிக்கலாமா?

  • நந்தன்

1 COMMENT

  1. அம்பானியின் ஜியோ நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 30 கோடி.
    அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஜெர்மன், இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் தொலைத்தொடர்பு பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை விட இது அதிகம் என்பதிலிருந்து 5 ஜி அலைக்கற்றை கொள்ளை பற்றி புரிந்து கொள்ள முடியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here