RSS பெற்றெடுத்த பிள்ளைக்கு
பாலூட்டச் சென்றது
தாய் சிறுத்தை…
தாலாட்ட வந்து சேர்ந்தது
முஸ்லீம் லீக்….
60 ஆண்டுகால
Rss – பார்ப்பனர்
கனவு
நிறைவேறியது…
அறநிலையத்துறை – பார்ப்பனர்
பிடியில்…
சமூக நீதி – மண்
Blastu… Blastu….
சூத்திரதாரி – சங்க பரிவார கும்பல்…
சூன்யமானது – தமிழகம்…
நடிகனின் கையில்
நாடு…
தற்குறிகளின் கையில்
பதவிகள்…
விஜய் அண்ணா…
விஜய் அண்ணா…
என எங்கும்
ஒரே ஓலம்…
நடிகன் – தற்போது – கடவுளாக்கப்பட்டுவிட்டார்.
கடவுளையே உடைத்த
தமிழகமா – இப்படி என ஒரு நொடி பதருகிறது…
அடுத்த 5 ஆண்டு
தமிழகத்தில் Rss ஆட்சி…
ஆட்சியை நடத்தபோகிறவர் – ஒடுக்கப்படும் சிறுபான்மை சமூகம் என்பது மிகப்பெரும் முரண்…
தாங்கி பிடிப்பவர்…
நசுக்கப்படும் தலித்…
தமிழ்நாடு – போராடும் – வெல்லும்…
என சூளுரைத்தால் மட்டும் போதாது…
அணிதிரள – திரட்ட வேண்டியுள்ளது…
முன்னைவிட அரசியலை
ஆழ கற்பிக்க வேண்டியுள்ளது
Gen-z தலைமுறைக்கும் – ஏனைய அனைவருக்கும்…
வரலாறு – முன்னோக்கி பாய்ந்தே தீரும்
என்பதே இயங்கியல் – அறிவியல்…
சந்தோஷ்குமார்
புஜதொமு, கோவை
(22.05.2026)






பாராட்டிற்குரிய கவிதை வரிகள்! தோழர் சந்தோஷ் குமாருக்கு வாழ்த்துக்கள்! அவரது பெயரை கவிதையின் இறுதியில் ஆங்கில மொழியில் பதிவு செய்திருப்பது பொருத்தமாகப் படவில்லை.
உண்மையில் கூறுகிறேன். விசிக தலைவர் தொல் திருமா, ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பிறந்து வளர்ந்து, இந்த அளவிற்கு முற்போக்கான கருத்துக்களை உட்கிரகித்து, சிறந்த பேச்சாளராகவும், போராளியாகவும் , பல்லாயிரக் கணக்கானோரைரை ஈர்த்தவராகவும் பரிணமித்து உள்ளாரே… என்று பல நிலைமைகளிலும் அவரை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். 77 வயதுடைய எமது புரட்சிகர அரசியல் பயணப்பாடு வேறொரு பாதை எனினும், திருமாவை நான் எவரிடமும் விட்டுக் கொடுத்து வாதிட்டதில்லை. அவருடன் நாம் தோழமையுடன் கரம் கோர்க்க வேண்டும் என்றே உணர்வுபூர்வமாக வாதிட்டு வந்திருக்கிறேன்.
அப்படிப்பட்ட திருமா. ஒரு நொடிக்குள்
இப்படிப் போய் சறுக்கி, சினிமா கவர்ச்சி மோக – பொறுக்கி அரசியல்வாதி – அரசியலற்ற தற்குறி – காவிக் கும்பலின் கைப்பாவை – விஜய்யின் தவெக என்ற ‘மலத்தொட்டி’யில் வீழ்ந்து விட்டாரே…என
எண்ணும் பொழுது மனம் கனக்கிறது; மிகவும் வலிக்கிறது! காதர் மொய்தீன் குறித்து நான் கவலை கொள்ளவில்லை.
எந்த வகையிலும் அவர் ஒரு மதவாதி.
சமூக நீதி, பகுத்தறிவு, திராவிடம், சாதி ஒழிப்பு…எனப் பேசித் திரிந்த திருமா இந்த கொள்கைகளுக்கு எள்ளின் முனை அளவும் சம்பந்தப்படாத விஜய்யிடம் போய் சரண்டர் ஆகியிருக்காரே என்பதுதான் விந்தையிலும் விந்தை! இதை அவரும் அவரது கூட்டத்தினரும் எந்த வகையில் நியாயப்படுத்த முற்பட்டாலும் அவை அருவருக்கத் தகுந்த ஆபாசமே என்பதில் சந்தேகமே இல்லை.
இது காங்கிரசை விடவும் பெரும் துரோகத் தன்மை வாய்ந்தது! ஒற்றை அமைச்சர் பதவிக்காக கொள்கையை 100% அடமானம் வைத்தது, மானக்கேடு! வெட்கக்கேடு!
எந்தெந்தப் புற்றுக்குள் என்னென்ன இருந்து தொலைக்கும் என்பதற்கு திருமா கூட ஒரு எடுத்துக்காட்டாய் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்!
காலம் பதில் சொல்லும்!
நமது பணிகளையும் பயணங்களையும் – தோழர் சந்தோஷ் குமாரின் கவிதை வரிகளின் உள்ளடக்கத்தில் கண்டவாறு – முன்னோக்கி விரைந்து நகர்த்துவோம்! உண்மையான விடியல் தரும் மாற்றத்தை நோக்கிப் பயணப் படுவோம்! பொருள் முதல் வாத இயங்கியல் சமூக விஞ்ஞானம் சார்ந்த பரிணாமத்தை மேலும் மேலும் வளர்ச்சி பெறச் செய்வோம்! ஆசான் லெனின் குறிப்பிட்டுள்ளது போல, ‘பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவம்’ எனும் பொழுது, நாம் இவற்றில் மேலும் மேலும் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்வதில் பயனில்லை.