உலகில் வாழும் மனிதக் கூட்டத்தின் பொது இயல்பு வாழ்தல். வாழ்வதோற்கோர் சொந்த இடம் என்பது ஒரு இலட்சியக் கனவு. சொந்த இடமிருந்தும் நாடு இருந்தும் அதில் அன்னியராகவும் வாழ்தலே போராட்டமாகவும் தங்களை எதிரிகள் என அடையாளப்படுத்தும் அரச படைகளின் முன் கண்காணிப்பிலும் முற்றுகையிலும் வாழ்தல் பெருந்துயரம்.
பாலஸ்தீன மக்களின் அன்றாட வாழ்வு பற்றிய ஒரு ஆவணமாக “வேறு நிலம் இல்லை” NO OTHER LAND திரைப்படம் வெளிவந்திருக்கிறது. குடியேற்ற காலனிய அரசும் முழுவதும் இனவெறியில் தோய்ந்த அரசுமான இசுரேலின் அட்டூழியங்களைப் பற்றிய உண்மைகளை வெளி உலகுக்குச் சொல்கிறது திரைப்படம்.
எந்நேரமும் சாலையில் வரும் பாதுகாப்பு வாகனங்களும் புல்டோசர்களும் பாலஸ்தீன மக்களின் குடியிருப்புகளை அத்துமீறி இடிப்பதும் அவர்களை வெளியேற்றி தாய் நலத்தை விட்டு விரட்டியடிப்பதுமாக இருக்கிறது.
இத்தகைய நெருக்கடியான சூழலில் படையினரின் துவக்குகளுக்கு முன் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் கைவிடவில்லை என்பதே ஆறுதல்.
ஊர்ந்து வரும் புல்டோசர் பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடிக்கிறது; பள்ளிகளை இடிக்கிறது.
அந்த இடிபாடுகளில் இருந்து மீண்டும் தங்கள் குடியிருப்புகளைக் கட்டியெழுப்புகின்றனர். மீண்டும் இடிக்கின்றனர். இது ஒரு தொடர் நிகழ்வாக நடக்கிறது. இது ஒரு அன்றாட வாழ்வியல் பட்டுணர்வாக இருந்தால் என்னவாகும் என்பதையும் பாலஸ்தீனியர்கள் இனவெறி இசுரேல் அரசால் அடைந்து வரும் துயரங்களை மக்கள் முன் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தை எடுத்ததற்காக அதன் இயக்குநர் பலால் தாக்குதுலுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் வீடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது.
படிக்க:
♦ அமெரிக்க செனட்டில் ஒலித்த பாலஸ்தீன ஆதரவு போர் குரல்!
உலகச் சட்டங்கள் விதிகள் என எதையும் பின்பற்றாத உலகின் கொடூர அரசாக இசுரேல் இருக்கிறது. அதனைத் தடுத்து நிறுத்தும் பார்வையாளாராக உலக சமூகம் நிற்கிறது.
பாலஸ்தீனம் போல இந்தியாவிலும் புல்டோசர் ஊர்ந்து வருகிறது. அது பார்ப்பனிய வெறியர்களால் முசுலீம்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளைக் குறிவைத்து இடித்து வருகிறது. இனவெறி பாசிஸ்டுகளிடம் இருந்து இந்திய பாசிஸ்டுகள் புல்டோசர் உத்தியைக் கடன் பெற்றிருக்கின்றனர்.
அநீதிகளைக் கண்டு கொதிப்பதும் பிறர் பொருட்டு கவலையுறுவதுமே மனித வாழ்வின் அடிப்படை .
எதிர்ப்புகள் ஒன்றுகூடும் போது அநீதிகள் தானாக மறையும். அதைவிட்டால் வேறு வழியில்லை.
நன்றி,
குமரன்
முகநூல் பதிவு








நோ அதர் லேண்ட் ! வேறு நிலம் இல்லை !திரைப்பட முகநூல் கட்டுரை :
கட்டுரை சிறியதாக இருந்தாலும் பாலஸ்தீன மக்களின் வீடுகளை புல்டோசர் வைத்து இஸ்ரேல் அரசு இடித்து தள்ளுவதும் பாலஸ்தீன மக்கள் தங்களுக்கான நாடு வீடு ஏதும் இல்லாமல் வெட்ட வெளியில் பாலஸ்தீன மக்கள் இருக்கிறார்கள் என நோ அதர் லேண்ட் திரைப்படத்தில் இயக்குனர் உணர்த்துகிறார்.
குமரன் முகநூல்: சிறப்பு