புலிட்சர் விருது வென்ற புகைப்பட பத்திரிக்கையாளர் சன்னா இர்ஷாத் மட்டூ அக்டோபர் 18 அன்று நியூயார்க்கில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக புது தில்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

“நியூயார்க்கில் புலிட்சர் விருது @Pulitzerprizes ஐப் பெறுவதற்காக நான் சென்று கொண்டிருந்தேன், ஆனால் டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டேன், சரியான அமெரிக்க விசா மற்றும் டிக்கெட்டை வைத்திருந்தாலும் சர்வதேச அளவில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது” என்று சன்னா ட்விட்டரில் எழுதினார்.

நடந்த சம்பவத்திற்குப் பிறகு பல அதிகாரிகளை அணுகிய போதிலும், எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வது எனக்கு வாழ்நாளில் ஒருமுறை கிடைத்த வாய்ப்பாகும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

28 வயதான புகைப்பட பத்திரிக்கையாளர் சன்னா இர்ஷாத் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் நான்கு பத்திரிகையாளர்களில் ஒருவர், அவர் கோவிட்-19 தொற்றுநோயைப் பற்றிய தகவல்களுக்காக புலிட்ஸரை வென்றார்.

இந்த விருதை வென்ற முதல் காஷ்மீரி முஸ்லீம் பெண் இவர், மேலும் அமைதியற்ற காஷ்மீரில் மோதல்கள், நெருக்கடிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையை உள்ளடக்கிய பணியின் மூலம் முக்கியத்துவம் பெற்ற புகைப்பட பத்திரிக்கையாளர்களில் ஒருவர்.

இருப்பினும், பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் காஷ்மீரைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்களில் சன்னாவும் ஒருவர். இன்னும் பலர் குறிப்பாக சர்வதேச பத்திரிகைகளுக்கு பங்களிப்பவர்கள் நாட்டிற்கு வெளியே பயணம் செய்வதைத் தடுக்கும் அதிகாரிகளால் பட்டியலிடப் பட்டுள்ளார்கள்.

Irshad Mattoo டிவிட்டரில் தனது விமான டிக்கெட் மற்றும் விசாவை பகிர்ந்திருந்தார்.

ஜூலை 26 அன்று, மற்றொரு தி கார்டியனில் பணிபுரியும் காஷ்மீரி பத்திரிகையாளர் ஆகாஷ் ஹாசன், நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தலைநகர் கொழும்பிற்கு விமானத்தில் ஏறவிருந்தபோது, ​​புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

2019 ஆம் ஆண்டு, ஜெர்மனியில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிற்குப் பயணித்த கவுஹர் கிலானி டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்

ஆகாஷ் மற்றும் சன்னாவின் பயணக் கட்டுப்பாடுகள் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றன. ஜம்மு காஷ்மீர் போலிசார் ஏற்கனவே மூன்று காஷ்மீர் பத்திரிக்கையாளர்கள் மீது சர்ச்சைக்குரிய சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் அதாவது ஆள்தூக்கி சட்டமான ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: பத்திரிக்கையாளர்களை அவமானபடுத்திய அண்ணாமலை!

காஷ்மீர் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை பத்திரிகையாளர்கள், அரசியல் தலைமைகள் மற்றும் ஊடக உரிமைகள் குழுக்கள் கண்டித்துள்ளன, இது பத்திரிகை சுதந்திரம், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறியுள்ளது.

இந்தியாவை ஆளும் பாசிச மோடி அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கிய பின்னர் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு எதிரான அதன் ஒடுக்குமுறையை தீவிரபடுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் முழுவதும் புதுடெல்லியில் உள்ள பாசிஸ்டுகளால் ஆளப்படுகிறது. அங்கு வாழும் மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகிறது.

1989-ல் இந்திய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியின் தொடக்கத்திலிருந்து பல்லாயிரகணக்கான காஷ்மீரிகள் கொல்லப்பட்டனர். 4 லட்சத்திற்க்கும் அதிகமான துருப்புகள் நிரந்தரமாக இப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. காஷ்மீர் உலகின் இராணுவமயமாக்கப்பட்ட மண்டலங்களில் ஒன்றாகும்.

நாடு முழுவதும் பத்திரிக்கையாளர்கள் இந்துத்துவ பாசிஸ்டுகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கபடுகிறார்கள். கேரள பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன் நீண்ட நாள் சிறைவாசத்திற்க்கு பிறகு தற்போது தான் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஊடகம் கிட்டத்தட்ட பாசிசமயமாகியுள்ள நிலையில், குறைந்த அளவில் பாசிசத்திற்கு எதிராக உண்மையை உலகிற்கு அறிவிக்கும் பத்திரிக்கையாளர்களை குறி வைக்கிறது பாசிசம். இந்தியாவை ஆளும் பாசிச கும்பலுக்கு பாடம் புகட்ட பத்திரிக்கையாளர்கள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here