இதுதான் இன்றைய இந்தியா.

மோடி அசைக்கமுடியாத தலைவர். அவர் முன்வைக்கும் அரசியல் பொருளாதார கருத்துகளுக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது என்று ஊடகங்கள் ஊதிப் பெருக்கிய நாயக பிம்பம் உடைந்து நொறுங்கியது.

ராணுவத்திற்கு நான்காண்டுகள் ஒப்பந்த முறையில் இளைஞர்களை பயிற்சிக்கு எடுத்துக் கொள்வது என்ற அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடத் துவங்கி உள்ளனர்.

வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஒரு ஆண்டுக்கு மேல் அமைதியுடன் போராடிய விவசாயிகளை திரும்பிக்கூடப் பார்க்காமல் இழிவுபடுத்தி மனு தர்மம் என்ற பார்ப்பன நீதி விவசாயத்தை இழிவாக பார்ப்பதை நிலைநாட்டியது.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பாஜக அலுவலகத்தில் மோடியின் பேனர்களை கிழித்தக் காட்சி

உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் இந்து ராஷ்டிரம் என்று அழைக்கப்படும் பார்ப்பன பயங்கரவாத சட்ட திட்டங்களைக் கொண்ட இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கி நான்காந்தர குடிமக்களை போல நடத்துவதே இந்து ராஷ்டிரம்-ராமராஜ்யம் என்பதை நிலைநாட்டிக் கொண்டுள்ளனர்.

ஆனால் ராணுவத்திற்கு ஒப்பந்த முறையில் ஆள் எடுப்பது தங்களுக்குள்ள அரைகுறை நம்பிக்கையையும் இழக்கச் செய்கிறது என்ற கோபத்தில் வீதியில் இறங்கி போராடுகிறார்கள் மாணவர்கள் இளைஞர்கள்.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக காவி பயங்கரவாதிகளின் அதாவது பாரதிய ஜனதா கட்சியினரும் வீடுகள், அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டு பிரதமர் மோடி உருவபொம்மை கட்டவுட்டுகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டது.

கேட்க ஆளில்லாத 56 இன்ச் மார்பு கொண்ட மோடி என்று துதிபாடும் ஊடகங்கள் ஒருபுறம்.

வாழ்க்கையே கேள்விக்குள்ளாக்கி ராணுவத்திலும் தனியாரையும் ஒப்பந்த முறையையும் புகுத்தும் கார்ப்பரேட் – காவி பயங்கரவாதிகளை எதிர்த்து போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மறுபுறம்.

இதுதான் இன்றைய இந்தியா.

  • இரா.கபிலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here