முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமனுக்குப் பாரதீய ஜனதாக் கட்சி அச்சுறுத்தல் – இதுவும் நீதித் துறை சுதந்திரத்தின் மீது மற்றுமொரு தாக்குதலே!

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு து. அரிபரந்தாமன் அவர்கள் தமிழ்நாடு பொதுமேடை – 2024 என்ற குடிமைச் சமூக முன்முயற்சியின் ஒருங்கிணைப்பாளராக இயங்கி வருகின்றார்.

தமிழ்நாடு பொதுமேடை – 2024 சார்பில் அவர் எழுதிய ”நீதித் துறையை நிலைகுலையச் செய்யும் பாஜக அரசு” என்ற கட்டுரை அறம் இணைய இதழில் வெளியிடப்பட்டதோடு சிறு நூலாகவும் வெளிவந்து, ஜனநாயக ஆர்வலர்கள், மனிதவுரிமைப் பற்றாளர்கள், வழக்கறிஞர்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

பிரதமர் திரு மோடி தலைமையிலான பாஜக அரசு எவ்வாறெல்லாம் நீதித்துறையின் சுதந்திரத்தில் குறுக்கிட்டு வருகிறது என்பதை உரிய சான்றுகளுடன் விளக்கும் இந்நூலின் கருத்துகளுக்கு எதிர்க் கருத்துகளை முன்வைத்து வாதிட முடியாத பாரதீய ஜனதாக் கட்சித் தலைமை, காவல் துறைக்கும், என்.ஐ.ஏ. எனும் தேசியப் புலனாய்வு முகமைக்கும் புகார் செய்து, நீதிபதி அரிபரந்தாமன் அவர்களையும், தமிழ்நாடு பொதுமேடை- 2024இல் ஒருங்கிணைந்துள்ள குடிமைச் சமூகச் செயற்பாட்டாளர்களையும் அச்சுறுத்தும் இழிமுயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இவ்வகையில் சென்ற ஏப்ரல் 6ஆம் நாள் பாஜக சட்டப் பிரிவின் மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் திரு ஏ. குமரகுரு சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகாரில் உள்நோக்கத்துடன் கூடிய பொய்க்குற்றச்சாட்டுகளே நிறைந்துள்ளன. வாக்குப் பதிவு நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் களத்தில் காத்திரமான கருத்துப் போராட்டங்கள் நிகழ்வதைத் தடுத்துக் கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் கொடுமுயற்சியாகவும் இதனைக் கருத வேண்டியுள்ளது.
திரு அரிபரந்தாமன் அவர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாடு பொதுமேடை – 2024க்கும், குடிமைச் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் ஜனநாயக இயக்கங்களுக்கும் விடபட்டுள்ள இந்த அச்சுறுத்தலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கருத்துரிமை காக்கவும் நீதித்துறையின் சுதந்திரம் காக்கவும் இந்த முக்கியமான தருணத்தில் உறுதியாகச் செயல்பட அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.

ஒருங்கிணைப்பு
கண. குறிஞ்சி, தியாகு, செந்தில்
தமிழ்நாடு பொதுமேடை – 2024
தொடர்புக்கு: 94433 07681

ஒப்பமிட்டவர்கள்:

வழக்கறிஞர்கள்
வழ. சுரேஷ்
மக்கள் சிவில் உரிமைக் கழகம்
ப.பா. மோகன்
மூத்த வழக்கறிஞர்
சுதா இராமலிங்கம்
மூத்த வழக்கறிஞர்
வழ. பானுமதி
தமிழ்நாடு முற்போக்குப்
பெண் வழக்கறிஞர்கள் சங்கம்
வழ. ஹென்றி திபேன்
மக்கள் கண்காணிப்பகம்
அஜ்மல்கான்
மூத்த வழக்கறிஞர்
லஜபதிராய்
மூத்த வழக்கறிஞர்
வழ. பிரபு ராஜதுரை
வழ..குமாரதேவன்
திராவிடர் கழகம்
வழ மனோகரன்
தமிழ்நாடு பொதுமேடை 2024
வழ.அஜிதா
தமிழ்நாடு பொதுமேடை 2024
வழ. ராஜூ
மக்கள் அதிகாரம்
வழ. வாஞ்சிநாதன்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
வழ. ச. பாலமுருகன்
பி யூ சி எல்
வழ. கயல் (எ) அங்கயற்கண்ணி
சான்றோன் சட்டப் பயிலகம்
வழ. கமருதீன்
குடிமக்கள் உரிமைகள் பொது மன்றம்
ஜான் கென்னடி
மூத்த வழக்கறிஞர்
வழ. கே.சுப்பிரமணியம்
இந்திய – சோவியத் கலாச்சாரச் கழகம்
வழ. பகவத்சிங்
உயர்நீதிமன்றத்தில் தமிழ் அமைப்பு
வழ. மலரவன்
புரட்சிகர இளைஞர் முன்னணி
வழ. ஆனந்தன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
வழ. வெண்மணி
திராவிடத் தமிழர் கட்சி
வழ. பாவெல்
இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம்.
வழ. பாவேந்தன்
தமிழ்த்தேச நடுவம்
வழ. தமிழ் ராசேந்திரன்
பாவாணர் பேரவை
வழ.திருமூர்த்தி
திராவிடர் விடுதலைக் கழகம்
வழ.ரஜினி
மதுரை
வழ. குணசேகரன்
சாமானிய மக்கள் கட்சி
வழ .தமயந்தி
புரட்சிகர விடியல்
பெண்கள் மையம்
வழ. சி.முருகேசன்(எ) மணிமாறன்
கோவை
வழ.விஜய்தரணீஸ்
கற்றல் கலையகம்
வழ. செ.குணசேகரன்
அம்பேத்கர் பெரியார்
கலப்புத் திருமணம்
செய்தோர் நலச்சங்கம்
எழுத்தாளர்கள்
எஸ்.வி.ராஜதுரை
ஆதவன் தீட்சண்யா
ஆழி செந்தில்நாதன்
வீ.அரசு
பொதியவெற்பன்
அமரந்தா
ஜமாலன்
சே. கோச்சடை
மனித உரிமைப்போராளிகள் / சமூக ஆர்வலர்கள் / இயக்கச்
செயல்பாட்டாளர்கள்
வசந்தி தேவி
மேனாள் துணைவேந்தர்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்.
கொளத்தூர் மணி
திராவிடர் விடுதலைக் கழகம்
கோவை கு.இராமகிருட்டிணன்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
இரா. அதியமான்
ஆதித்தமிழர் பேரவை
நாகை திருவள்ளுவன்
தமிழ்ப் புலிகள் கட்சி
மீ.த.பாண்டியன்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பொழிலன்
தமிழக மக்கள் முன்னணி
திருமுருகன் காந்தி
மே 17 இயக்கம்
வாலாசா வல்லவன்
மார்க்சியப் பெரியாரியப்
பொதுவுடைமைக் கட்சி
பேரா. த.செயராமன்
மீத்தேன் திட்ட
எதிர்ப்புக் கூட்டமைப்பு
டிராட்ஸ்கி மருது
ஓவியர்
சுப. உதயகுமார்
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கம்
கிறிஸ்டினா சாமி
சுயஆட்சி இந்தியா இயக்கம்
ஆசீர்வாதம்
மனித உரிமைப் பாதுகாப்பாளர் அமைப்பு
கே.பாலகிருஷ்ணன்
சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM)
பேரா. பிரபா கல்விமணி
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்
புகழேந்தி
ஓவியர்
பேரா. இரா. முரளி
உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கம்
பேரா. சிவகுமார்
மக்கள் கல்விக் கூட்டியக்கம்
பேரா. சங்கரலிங்கம்
சுயாட்சி இயக்கம்
கோ. சுகுமாரன்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு
நிலவழகன்
மக்கள் தமிழகம் கட்சி
கி.வே. பொன்னையன்
தற்சார்பு விவசாயிகள் சங்கம்
சா.கதிரவன்
பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் சிந்தனைக்களம்
மா. நேருதாஸ்
தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகம்
பொன். சந்திரன்
பியூசிஎல்
ரவிச்சந்திரன்
தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here