மோடி’ மஸ்தான் வித்தைக்கு பலியாகாதே! விழித்தெழு!

மனித நாகரிகத்தின் தொட்டில்களான பழங்குடிகள், நாகரீகம் என்ற பெயரில் காவி பாசிச காட்டுமிராண்டிகளின் தாக்குதல்களுக்கு பலியாகி கொண்டிருக்கிறார்கள்.

0

இதுதான் இன்றைய இந்தியா!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை முழுமையாக பறிமுதல் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.

அவ்வாறு பறிமுதல் செய்த பணத்திலிருந்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கு ரூபாய் 15 லட்சம் போடுவோம் என்று நம்பச் சொன்னார்கள்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று மார்தட்டிக் கொண்டார்கள்.
ஆனால் இருக்கின்ற வேலையையும் பிடுங்கிக்கொண்டு பல கோடி தொழிலாளர்களை நிரந்தர தன்மையற்ற தினக்கூலி தொழிலாளர்களாக மாற்றினார்கள்.

5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்று வாய் சவடால் அடித்தார்கள்.
இன்று வரை 2 ட்ரில்லியன் பொருளாதாரத்திற்கு தாளம் போட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் முதலாளித்துவ புள்ளியியல் வல்லுனர்கள்.

வளர்ச்சிப்பாதையில் வேகமாக சென்று நாடு முன்னேறி வல்லரசாகி விடும் என்று அப்துல்கலாம் பாணியில் கனவு காண சொன்னார்கள். மறக்காமல் இரவில் தூங்கினால் வருவதல்ல கனவு. உன்னை தூங்கவிடாமல் வருவதே கனவு என்று அப்துல் போட்ட பிளேட்டை ‘ஹாம்லெட்’ போட்டார்கள்.

ராம ராஜ்ஜியம் என்பது ஏதோ செல்வம் பெருகி அமைதி தவழும் அற்புதம் என்று நம்ப வைத்தார்கள்.

ஆனால் 19 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் பூர்வ குடிமக்களான தலித்துகள், அன்றாடம் ஆதிக்கசாதி வெறியர்களால் தாக்கப்பட்டு துன்புறுத்தப்படுவது முதல் படுகொலை செய்யப்படுவது வரை தடையின்றி நடக்கிறது.

நாட்டில் 18 கோடி பேர் மக்கள் தொகையை கொண்ட இஸ்லாமியர்கள் தனது உடமைக்கும் உயிருக்கு உத்தரவாதம் இன்றி நரக வேதனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மீது ஜெய் ஸ்ரீராம் முழக்கத்துடன் காவி பாசிச குண்டர்களின் தாக்குதல் தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.

3.7 கோடி மக்கள் தொகை கொண்ட மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்கள் தனது காலடியின் கீழ் காலங்காலமாய் சேர்த்துவைத்த கனிம வளங்களும், காட்டு வளங்களும் உருவிக் கொள்ளப்பட்டு வேட்டையாடப் படுகிறார்கள். எதிர்த்துப் போராடுகிறவர்களின் உயிர் படுகொலை செய்யப்படுகிறது.

மனித நாகரிகத்தின் தொட்டில்களான பழங்குடிகள், நாகரீகம் என்ற பெயரில் காவி பாசிச காட்டுமிராண்டிகளின் தாக்குதல்களுக்கு பலியாகி கொண்டிருக்கிறார்கள்.

3.75 கோடி மக்கள் தொகை கொண்ட கிறிஸ்தவர்கள் வழிபடும் தேவாலயங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அவர்கள் புனித நூலாகக் கருதும் பைபிள் கிழித்து எறியப்பட்டு தீக்கிரையாக்கப் படுகிறது. எதிர்த்துப் போராடினால் குடியுரிமைப் பறிக்கப்படும் என்ற அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவையன்றி பல்வேறு தேசிய இனங்களாக வாழ்ந்து வரும் மக்கள் தனது பாரம்பரிய கலாச்சாரம், மரபுகள், பழக்கவழக்கங்கள் அனைத்தையும் பார்ப்பன கழிசடை பண்பாட்டின் கீழ் அடக்கி ஒடுக்கப் படுகிறார்கள்.

நாட்டின் மக்கள்தொகையில் ஆகப் பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் தனது பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது முதல் உண்பது, உடுத்துவது உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது, சுதந்திரமாக, கண்ணியமாக வாழும் உரிமை பறிக்கப்பட்டு மரண பயத்தில் வாழ நிர்ப்பந்திக்கப் படுவது ஒருபுறம்.

நாட்டின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள், காட்டு வளங்கள் உள்ளிட்டு பஞ்சபூதங்களின் மூலம் கிடைக்கும் அனைத்து செல்வங்களையும் சூறையாடும் கார்ப்பரேட்டுகளின் தலைமை பீடமாக உருவெடுக்கும் அம்பானி அதானி மறுபுறம்!

இதுதான் இன்றைய இந்தியா!

  • இரா.கபிலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here