ராணுவம் தனியார்மயம்! தேசம் யாருக்கு சொந்தம்?

அக்னிபாத் என்ற திட்டத்தின் கீழ் நான்கு வருடங்களுக்கு மட்டும் இளைஞர்களை ராணுவத்திற்கு எடுத்துக் கொள்வது என்ற திட்டத்தை பாசிச மோடி அரசு அறிவித்துள்ளது.

ராணுவம் தனியார்மயம்!
தேசம் யாருக்கு சொந்தம்?

ட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மனிதனைக் கடித்து குதறியது ஒரு மிருகம் என்பார்கள்.

அதுபோல தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க துவங்கியது.

அதில் உச்சகட்டமாக ராணுவத்தை ராணுவ தளவாட உற்பத்தியை தனியாருக்கு தாரை வார்ப்பது என்று முடிவெடுத்தவுடன் ராணுவ தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாதுகாப்பு துறை தொழிற்சாலைகளை தனியார்மயமாக்குவதற்க்கு எதிராக போராடும் தொழிலாளர்கள்

அதுமட்டுமின்றி விரைவில் ராணுவத்தையும் தனியாருக்கு விட்டுவிடுவார்கள் என்று தொழிற்சங்கத் தலைவர் ஸ்ரீகுமார் எச்சரித்தார்.

இன்று அக்னிபாத் என்ற திட்டத்தின் கீழ் நான்கு வருடங்களுக்கு மட்டும் இளைஞர்களை ராணுவத்திற்கு எடுத்துக் கொள்வது என்ற திட்டத்தை பாசிச மோடி அரசு அறிவித்துள்ளது.

ராணுவம் தேசபக்தி உடையது என்பது கற்பனையும், பித்தலாட்டமும் ஆகும்.
அதே சமயத்தில் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டிற்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்ற ஒரு ராணுவ கட்டமைப்பு தேவைப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை முப்படைகளையும் கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும் பல லட்சம் கோடி மக்களின் வரிப்பணம் கொட்டி அழப்படுகிறது.

படிக்க

தற்போதைய சூழலில் ராணுவத்தையே நான்காண்டுகளுக்கு என்று தற்காலிக வேலையை போல (fixed term employees, FTE) நியமிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நாடு முழுவதும் இதை எதிர்த்து இளைஞர்கள் போராட துவங்கியுள்ளனர்.
மோடி கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் கண்மூடித்தனமாக வட மாநில மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று இங்கே சில இனவாத கும்பல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்தியாவில் நடக்கின்ற அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களை எதிர்த்து வட இந்தியாவில் கணிசமான மக்கள் போராடி வருகிறார்கள் அந்த வரிசையில் தற்போது இளைஞர்களும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ராணுவத்திற்கு நான்காண்டுகளுக்கு மட்டும் ஆள் சேர்ப்பது என்ற திட்டத்தை மாணவர்கள், இளைஞர்களுடன் சேர்ந்து நாமும் போராடுவோம்!

  • திருச்செங்கோடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here