சென்னை பார்ப்பன கும்பலின் நகர்புற அக்ரகாரமான திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம் ஆகியவற்றில் மேற்கு மாம்பலம் பிரசித்தி பெற்றது.
இந்த மேற்கு மாம்பலத்தில் 1954 ஆண்டு கட்டப்பட்ட அயோத்தியா மண்டபம் இராம சமாஜம் என்ற சனாதன கும்பலால் நிர்வகிக்கப்பட்டு, பார்ப்பன ஊழல் பெருச்சாளிகள் பொறுக்கித் தின்று வந்தனர்.

இந்த ஊழலை ஒழித்து 2013 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. தற்போது பாபர் மசூதி உள்ளிட்ட வழக்குகளில் நீதிமன்றத்தின் மூலம் சாதகமான தீர்ப்பைப் பெற்ற திமிரில் இராம சமாஜத்தின் ரவிச்சந்திரன் என்ற நபர் மீண்டும் உரிமை கொண்டாடி வழக்கு பதிவு செய்தார்.

சட்டப்பூர்வமாக அயோத்தியா மண்டபம் யாருக்கும் உரிமை கிடையாது என்று உயர் நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பு வழங்கி விட்டது.

இந்த நிலையில் பார்ப்பன ஜனதா கட்சி இதை ஒரு விவகாரமாக கையில் எடுத்துக் கொண்டு சென்னையில் “சூத்திர அடிமைகளை” வைத்து அரசியல் கலவரம் செய்ய எத்தனித்துள்ளது.

இது போன்ற முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிவோம்.
ராதா கல்யாணம், சீதா கல்யாணம் போன்றவற்றை முறியடித்து அரவான் களப்பலி, நந்தனார் சரித்திரம் போன்றவற்றை அரங்கேற்ற உரிமை கேட்போம்.

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here