மோடியின் சொல்லும் செயலும்;
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி,
வெங்கி-ராமகிருஷ் ணனின்
நமட்டு சிரிப்பு.
( NOBEL LAUREATE,VENGI RAMAKRISHNAN’S
SUPERIOR SMILE ON
MODI’S WORDS AND DEEDS)

இந்துத்துவக்
கொள்ளிக்கட்டையால்
தலையை சொரிந்த
மோடி!!

துகில் உரித்து
தெருவில் இழுத்துச் செல்லப்பட்டது……
பழங்குடி பெண்களை அல்ல……
பாரத்…மாதா…வை!!

இரா.குசேலன்
(வழக்குறைஞர்)
93 44 27 24 11

பொறுப்பு துறப்பு:

கட்டுரையின் தலைப்பு கற்பனையே;மேலும்,இக் கட்டுரை–அரசியலமைப்பு சட்டத்தின் உயரிய கோட்பாடுகளான ஜனநாயகம்,மதச்சார்பின்மை ஆகியவற்றின் மீதான தாக்குதல்கள் நடைபெற்றுவரும் சமகால-அரசியல் நிகழ்வுகளின் மீதான ஓர் மதிப்பீடு.எந்த ஒரு தனி நபருக்கும் அல்லது சமூக பிரிவினருக்கும் எதிரான கருத்துகளை வெளிப்படையாகவோ அல்லது உட்கிடையாகவோ கொண்டதல்ல–இது.)

ன்புடையீர்.,

(1)மணிப்பூரில் பற்ற வைத்த கலவரத் தீ இன்னும் அணைந்தபாடில்லை.அடுத்ததாக பாஜக ஆளும் ஹரியானாவில் கலவரத் தீ பற்றவைக்க பட்டுவிட்டது.ராஜஸ்தானிலும் கலவரம் தலைகாட்ட தொடங்கியதாக தெரிகிறது.உத்திர பிரதேசம் எப்பொழுதுமே சாதிய-மதவாதக் தாக்குதலின் மய்யமாகவே இருந்து வருகிறது.கர்நாடக மாநில சட்ட மன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட மரண அடியால் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்துத்துவ பாசிச சக்திகள் எந்தமாதிரியான எல்லைக்கும் செல்லக்கூடும் என பொதுவாகவே அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கணிக்கப்பட்ட ஒன்றுதான்.முதலில் ஓர் விசயத்தினை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டியது அவசியம்.

தற்போது நடைபெற்றுவரும் கலவரத் “தீ”யை பற்றவைத்தில் பிரதமர், மோடியின் பேச்சும் இதில் அடக்கம்.மணிப்பூர் கலவரத்திற்கு, மைதேயி இன மக்களை பட்டியல் பழங்குடியினராக அறிவித்து உத்தரவிட்ட அம்மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பு ஓர், காரணமாக இருந்தாலும் எரியும் தீயில் எண்ணையை ஊற்றியதே மோடியின் பேச்சுதான். கர்நாடக வீதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் “ஜெய் ஸ்ரீ ராம்!மற்றும் ஜெய் பஜிரந்தள்!! ஆகிய கூப்பாடுகள்தான்.

நாட்டின் பிரதமர் அரசியலமைப்பின் மதச்சார்பின்மையை காலில் போட்டு மிதித்துவிட்டு,பொது அமைதியை கவனத்தில் கொள்ளாமல்,கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் “ஜெய்ஸ்ரீ ராம்”;ஜெய் பஜிரந்தள்”ஆகியன மோடியின் முழக்கங்கள் கலவரத்திற்கு காரணம் இல்லை என சொல்லிவிட முடியாது.முழக்கம் என்பது கூட ,முற்போக்கு பார்வையில் மக்கள் முன்னால் எழுப்பப்படும் ஓர் அறைகூவல்.இதனை மோடியிடமோ அல்லது இந்துத்துவ மதவாத பாசிஸ்டுகளிடமோ அறவே எதிர்பார்க்க முடியாது.மோடியின் ஜெய் ஸ்ரீ ராம்”;”ஜெய் பஜிரந்தள்”ஆகியன மதவாத கலவரவரத்திற்கான கூக்குரல்கள்;மக்களிடையே மதவாத பிரிவினையூட்டி வெறியூட்டம் கூப்பாடுகள்.இதுதான் தற்போது,நாடெங்கும் கலவரக் கும்பல்களின் வன்முறை குரல்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. மற்றும் மே-4ல் மணிப்பூரில் பழங்குடிப் பெண்களை ஆடைகளைக் கலைந்து தெருவில் இழுத்துச் சென்ற நிகழ்வு 72 நாட்களுக்கு பிறகு வெளி உலகுக்கு தெரிய வந்தது.

நாட்டின் பிரதமர்;மாநில முதல்வர்;உள்துறை அமைச்சர்.,அமித்ஷா ஆகியோர் இதனை திட்டமிட்ட இருட்டடிப்பு செய்திருந்தனர்.”கட்டுச்சோற்றுக்குள் பெரிச்சாலியை எத்தனை நாட்கள்தான் வைத்திருக்க முடியும்?!.பெரிச்சாலி வெளியே வந்தவுடன் பிரதமர் பாராளுமன்றம் பக்கம் தலைகாட்டவே முடியவில்லை.இந்த கட்டுச்சோற்று பெருச்சாலி மூட்டையை சுமர்ந்து கொண்டுதான் மோடி அமெரிக்க செனட்டில் இந்திய மக்களிடம் ஜனநாயகம் “டிஎன்ஏ”-விலேயே ஊறியுள்ளது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை அமெரிக்காவில் அவிழ்த்து விட்டுவந்த பிறகுதான் மோடியின் கட்டுச்சோற்றுக்கு வந்தது சோதனை!. மணிப்பூர் நிர்வாண ஊர்வலம் ஊரறிய உலக மக்களின் மனங்களில் நிறைந்துள்ள வேதனையாக மாறிவிட்டது.

(2)அரசியல் அதிகாரத்தின்,மேலிருந்து கீழ்வரை மேற்கண்ட சக்திகள் அனைத்தும் தேச விரோத வழக்கு விசாரணை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சக்திகளாகும் இந்துத்துவா.அதுமட்டுமல்ல,முன்னாள் காஷ்மீர் ஆளுநர் மாலிக் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பயங்கவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத் துறை தகவலை மத்திய உள்துறை அமைச்சத்திற்கு தெரிவித்து ஹெலிகாப்டரில் வீரர்களை அழைத்து செல்ல மாநில அரசு மத்திய அரசை கேட்டுக்கொண்ட பிறகும்கூட, மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.

ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட உடன், சத்திய பால் மாலிக்கை மாநில அரசிடம் ஹெலிக்காப்டர் கேட்ட விசயத்தினை வெளியில் சொல்ல வேண்டாம் என மோடிக் கூறிவிட்டார் என்ற மாலீக் தற்போது பொதுவெளியில் கூறியுள்ள செய்தியின் அடிப்படையில் மோடி விசாரிக்கப் படவேண்டிய நிலையில் உள்ளார்.அது மட்டுமல்ல ராஷ்ட்ரிய பஜிரந்தளின் கலவரக் கூக்குரல் இதே “ஜெய் பஜிரந்தள்” ;”ஜெய் ஸ்ரீ ராம்” போன்ற கூக்குரல்கள் ஆகஸ்ட் முதல் தேதியில் அஸ்ஸாமில் பள்ளிக்கூடத்தில் மூன்றுநாள் துப்பாக்கி பயிற்சியினை பிரவின் தொகாடிய தலைமையிலான “ராஷ்ட்ரிய பஜிரந்தள்” நடத்தியுள்ள நிகழ்வு நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பாசிச அச்சறுத்தல் கதைவை தட்டுகிறது.இதன் கொலை வெறியாட்டம் மிகக் அருகில் உள்ளது. இச்சூழலில்தான்,ஹரியாண மாநிலத்தில் “நூ” மாவட்டத்திலும் தற்போது கலவரம் கட்டவிழ்த்து விடபட்டுள்ளது.அதன் ஏழு மாவட்டங்கள் மதக்கலவரத்தின் விளிம்பில் இருந்து வருவதாக தகவல்.இந்த ஊர்வலத்தினை நடத்தியதும் இதே ராஷ்டிரிய பஜிரங்தள் அமைப்பினரே.!

தற்பொழுது,மும்பை ரயிலில், ரயில்வே பாதுகாப்பு ஆயுதப்படை (RPF) காவலர் ஒருவர் இதே கலவரக்கூக்குரலில் “ஜெய் ஸ்ரீ ராம்” என சத்தம் எழுப்பி மூன்று சிறுபான்மையிரை தேடிப்பிடித்து சுட்டுக்கொண்டுள்ளார்.ஆனால்,ஆளும் பிற்போக்கு அரசாங்கம் இவருக்கு மனப்பதற்றம்(ANXIETY AND PSYCHICS)மற்றும் மனநிலை சரியற்றவர் என்ற முத்திரை குத்தி தப்பிக்க வைக்க முயற்சிக்கிறது.அவருக்கு மன நிலை சரியில்லை என்பதை வாததிற்க்குகூட வைத்துக் கொண்டாலும்,நாட்டின் ஒவ்வொருவர் மனநிலையிலும் மூட்டப்பட்டுள்ள மதவாத தீயை ஊதிபெருக்க வைக்கும் சக்திகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்த பிரச்சனைக்கு தீர்வு இல்லை என்பதைத்தான் இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

நாட்டின் பிரதமரிலிருந்து சராசரி குடிமகன்வரை மதத்தின் பெயரால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக மாறி கலவரத் தீக்கு இரையாகி வருகின்றனர்.”ஜெய் ஸ்ரீ ராம்”;ஜெய் பஜிரந்தள்” என இப்படி நாடே கலவரத் தீயின் பிடியில் சிக்கி வருகிறது.நாட்டின் பிரதமரிலிருந்து மதக் கலவரம் செய்யும் சமூக விரோதிகள் வரை “ஜெய் பஜிரந்தள்”;ஜெய் ஸ்ரீ ராம்” எனும் கலவரப் குரல்களுக்கு சொந்தக் காரர்களாக இருந்துவருகின்றனர்.

மணிப்பூர் கலவரத்தினை தொடர்ச்சியாக அவதானித்து வந்த உச்சநீதிமன்றம், இவைகளை எல்லாம் வன்மையாக கண்டித்தது மட்டுமல்லாமல்,சிறப்பு விசாரணை குழுவைக் அமைத்து மணிப்பூர் கலவரம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது.அதுமட்டுமல்ல,”மணிப்பூர் கலவரம்,”காவல் துறையும் கலகக் கும்பல்களும் கைகோர்த்து நடத்திய கலவரம்” (POLICE NUXES RIOTS)எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.அதுமட்டுமல்ல,மணிப்பூரில் “ஆடைகளை கலைந்து தெருவில் இழுத்துச் சென்ற பெண்களை கலவரக் கும்பலிடம் ஒப்படைத்ததே காவல்துறையினர்தான்” என்ற தகவலையும் பொதுவெளியில் பதிவு செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.இதன் அடிப்படையில்தான் இந்த விசாரணைக் குழுவை ஏற்படுத்தியிருக்கிறது.

தேடிப்பிடித்த செங்கோல்… ஆட்சி நடத்தும்…”மகாராஜ்.. மோடி”-யின் ராஜ்யத்திலா..இந்த கொடுமை.! என உச்ச நீதிமன்றமும் மக்களும் இந்த கேள்வியை கேட்காதது மட்டும்தான் குறை.!ஆங்கிலேய ஆட்சியில் கூட,ஆறாயிரத்து ஐநூற்று இருபத்தி மூன்று(6523 FIRs)முதல் தகவல் அறிக்கைகள் எந்த சம்பவம் குறித்தும் பதிவு செய்த வரலாறு கிடையாது…அது எப்படி இருக்கும்?!.இந்துத்துவ சக்திகள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் இது மாதிரியான வரலாற்று பதிவுகளை நாடு கண்டிருக்க வாய்ப்புண்டு.

கர்நாடாக மாநில தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதுதான் மணிப்பூரில் கலவரம் தொடங்கியது. குக்கி பழங்குடி மக்கள் மீது “தீ வைப்பு;கொலை;கற்பழிப்பு;பெண்களை நிர்வாண ஊர்வலம் என அனைத்தும் வரலாற்றில்,யூத பெண்களை நிர்வாணப்படுத்திய நாஸி ஹிட்லரின் இனவாத வக்கிரத்திற்கு அடுத்து;வியட்நாம் போரில் அதே வக்கிரத்தினை செய்த அமெரிக்க ராணுவத்திற்கு அடுத்து;தற்பொழுது மணிப்பூரில் பழங்குடி பெண்களை நிர்வாண அணிவகுப்பு செய்தது அனைத்தும் இந்துத்துவ சித்தாந்திகளால்தான்!.

(3) பாசிச சிந்தாந்தின் வரலாறு என்பது பாலியல் வக்கிரம்;இன அழிப்பு;வன்முறை வெறியாட்டம்;நாகரீக விழுமியங்களின் மீதான தாக்குதல் என்பதேயே வரலாறு காட்டுகிறது.இந்துத்துவ சக்திகளுக்கு ஹிட்லர்;முசோலினி போன்ற பாசிஸ்ட்டுகளின் மீது ஓர் அலாதியான பாசமும் பற்றும் இருந்துவருகிறது.இதற்கான காரணம்,”ஆரிய இன மேன்மை(ARIYAN SUPERMACY)”எனும் சித்தாந்தம்.இதுதான் நாஸி சித்தாந்ததின் ஆணிவேர்.முதல் உலகப்போருக்கு பிறகு,பல சாக்குபோக்குகளை சொல்லி மீண்டும் ஜெர்மனியை ஆயுதம் தரிப்பதற்கு ஹிட்லர் கையில் எடுத்த இனவெறி கருத்தாக்கம்தான் “இனதூய்மைவாதம்(RACIAL PURITY)”.இதற்கான ஓர் அறிவியல் ரீதியான அடிப்படையை வழங்குவதற்காக “இனவாத அறிவியல்” எனும் மானுட விரோத துறையினத்தை(DECIPLINE OF SCIENCE OF RACISM) அறிமுகம் செய்தது.

இதையும் படியுங்கள்: பாசிச மோடியே! பதவியை விட்டு ஓடு! என்பது நாட்டின் ஒற்றை முழக்கமாகட்டும்!

இது எதனை ஒத்தது எனில், தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு,சந்தித்து கொண்டிருக்கும் “செயற்கை நுண்ணறிவினை”ப்(ARTIFICIAL INTELLIGENCE-AI) போன்றது.”மெண்டலின் மரபணு பறிமாற்ற விதிகள் மறுகண்டுபிடிப்பு(RE-DISCOVERY OF MENDALIAN LAWS OF INHERITANCE)” செய்யப்பட்டது கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்.சரியாக ஐம்பதுகளின் நடுப்பகுதியில் மரபணு(STRUCTURE OF DNA) வடிவத்தினை கண்டுபிடிக்கும் வரை இந்த துறையில் மனித அறிவின் தாக்கம் கொடிகட்டி பறந்தது.அது இன்றும் கூட தொடர்கிறது.”மரபணு பறிமாற்றப்பட்ட உயிரினங்கள்(GMOs-GENETICALY MODIFIED ORGANISMS)”என்ற சூழலியல் சார்ந்த சொல்லாட்சியினை நம்மால் காணமுடியும்.இதற்கு ஆளும் வர்க்க அரங்கம் மட்டுமே இலக்கானதாக இருந்தது என்று சொல்லிவிட முடியாது.ஒரு காலத்தில்,சோசலிஸ்ட் உலகமும் கூட தாக்கத்துக்கு உட்பட்டிருந்தது.இதனை நாம் சோவியத் வரலாற்றில் “லைசன்கோ-ஸ்டாலின் பிரச்சனை (LYSENKO-STALIN CONTROVERSY)”என அறிகிறோம்.

ஆனால்,மரபியல் குறித்த சோவியத் அணுகுமுறை என்பது முற்றிலும் அறிவியல் ரீதியானது.மரபியியல் துறையில் சோவியத் யூனியனின் பயணம் என்பது மனித குல வரலாற்றின் முன்னேற்றத்தில் அறிவியல் மற்றும் தத்துவார்த்த அரங்கில் அறிதலியல்(EPISTOMOLOGY) துறையில் இயற்கை அறிவியலின் வளர்ச்சின் போக்கில், கோட்பாடு மற்றும் நடைமுறை சார்ந்த ஒன்றாகும்.சோவியத் பயணத்தில் மரபியலின் தாக்கம் குறித்த விசயத்தினை பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் அதற்கே உரிய தளத்தில் விவாதிப்போம்.

(4) ஆனால்,ஜெர்மனியில் பாசிசம் தலையெடுப்பதற்கான தத்துவார்த்த அடித்தளத்தினை உருவாக்கிக் கொள்ள மரபியலின் கிளை-வளர்ச்சியான “மீமரபியல்(EUGENICS)” எனும் துறையினை பாசிஸ்ட்டுகள் கையிலெடுத்தனர்.அன்றைய சூழலில் அதன் முன்வரிசையில் இருந்தது ஜெர்மனி.இதன் அடிப்படையில் “இனத்தூய்மை(PURITY OF HUMAN RACE)”கருத்தாக்கத்தினை முன் நிறுத்தி இனவாத அரசியலுக்கு வழிவகை செய்துகொண்டனர்.”ஆரிய இனமே, மரபியல் தளத்தில் மேன்மையான இனவகை”யாகும் எனும் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது.இதில் நடந்தேறிய இனக்கலப்பு ஆரிய இன தூய்மையை இனக்கலப்பு செய்துவிட்டது,மேலும் ஆரிய இனத்தை மாசுபடுத்துகிறது,இதற்கான வாய்ப்பாக இருந்துவரும் ” யூத இன இருத்தல்”என்பது “ஆரிய இன இருத்தல்”க்கு அச்சுருத்தலாக இருந்து வருகிறது.

எனவே,ஒப்பீட்டளவில் குறைவான எண்ணிக்கை உடைய யூத இனத்தினை(GENOCIDE)கூண்டோடு அழிக்க கூடிய மிகக்கொடுரமான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டது.அதற்கெனவே, ஓர் சட்டமுறைமையே உருவாக்கப்பட்டது. இன வெறியூட்டக்கூடிய மத வெறுப்பு பிரச்சாரத்திற்கெனவே பல மாநாடுகள் நடத்தப்பட்டன.இதனை “நியூரம்பர்க் காங்கிரசுகள்”என அழைக்கப்பட்டன.இந்த மாநாடுகளில் ஒருபக்கத்தில்; பொதுமக்கள் அணிவகுப்பும் மறுபக்கத்தில்;ஆரிய இன மேன்மையை மக்கள் மத்தியில் இருமாப்புடன் பறைசாற்றுதல் என்ற பெயரில் “ஸ்வஸ்திக் சின்னம்” எனும் நாஸி அடையாளம் பொறிக்கப்பட்ட வானுயர்ந்த பதாகைகள்;சீருடை மற்றும் ராணுவ அணிவகுப்புகள் நடத்தப்பட்டன.

வெறியூட்டும் உரைவீச்சுகள்; மயிர் கூச்செரியும் பேச்சுக்கள்;ஆவேசமான முழக்கங்கள்;ஏற்றயிறக்க தொணியிலான பேச்சு நடைகள்;போலியான தேசபற்று; தேசிய சோசலிசம் எனும் இனவெறி (chauvinistic)அத்தனையும் கலந்த ஓர் உளவியல் தன்மை கொண்ட இனம்புரிய ஈர்ப்புகள் போன்ற பாசிச வெறியூட்டல் வழியாக வெகுமக்களின் மனங்கள் இனவாதத்திற்கு பறிகொடுக்கப்பட்டது.இத்தகைய உரைவீச்சுகளுக்கெனவே, முசோலினி போன்ற பாசிச குருநாதர்கள் நியூரம்பர்க் மாநாடுகளில் பங்கெடுத்துக்கொண்டனர்.நியூரம்பர்க் மாநாடுகள் நடத்தப்பட்டதன் பின்னனி இதுவே.இன அழிப்புக்கெனவே தனி சட்டங்கள் இயற்றப்பட்டு, உலக யுத்தம் தொடங்கும் வரை,இது இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.இந்த சட்டங்கள் பல வகையான சித்திரவகைகளுக்கு சட்டரீதியில் வழிவகை செய்து கொடுத்தது.

“வதை முகாம்களை(CONCENTRATION CAMPS) ஏற்படுத்தி யூத மக்களை கூண்டோடு அடைத்து வைப்பது;போருக்கான ஆயுத தளவாட உற்பத்திக்கான மனித உழைப்பை அவர்களிடமிருந்து பெறுவது;இவர்களிடையே பாலியல் வல்லுறவு செய்ய அச்சுறுத்தி அதனைக் கண்டுகளிப்பது;இவர்களை நிர்வாண கோலத்தில் அணிவகுப்பு செய்வது;கொடுரமான உளவாய்வு மருந்துகளை செலுத்தி இவர்களது உடலில் செலுத்தி “மனித நடத்தியினை பார்வையிடுவது(OBSERVATIONS OF HUMAN BEHAVIOURS THROUGH ADMINISTRATION OF SPYCHOTROPIC DRUGS);முடிவில்,நச்சு வாயுவினை செலுத்தி இவர்களை கூண்டோடு கொலைசெய்வது.இதுவே நியூரம்பர்க் சட்டத்தின் திட்டம்.

இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்து ஜெர்மன் ராணுவ தளபதிகள் மீதான போர்க்குற்றத்தினை விசாரித்த நியூரம்பர்க் விசாரணையின் போதுதான் இந்த சட்டம் வெளி உலகுக்கு தெரியவந்தது.போர் முடிந்த உடனயே,சாதாரண ராணுவ நீதிமன்ற விசரணயாக நடத்தி கதையை முடித்துவிடலாம் எனும் அமெரிக்கா,பிரிட்டனும் செய்த முயற்சியினை சோவியத் யூனியன் முறியடித்ததன் விளைவாகவே, வெற்றிகரமாக “நியூரம்பர்க் ராணுவ தீர்ப்பாயம் (NUREMBERG MILITARY TRIBUNAL FOR WAR CRIMES AND GENOCIDE)” ஏற்படுத்தப்பட்டது.

ஏனெனில்,இவ்விசாரணை மன்றம் அமைக்கப்பட்டால் உலக போருக்கான தயாரிப்பிற்கு அமெரிக்க,பிரிட்டன் போன்ற நாடுகளை சார்ந்த அரசும் அந்நாட்டு ஏகபோகங்களும் ஹிட்லரின் “வெர்மேட் இராணுவ இயந்திரம்(WERMIT WAR MACHINE) கட்டியமைக்கப்பட்டதில் இந்த நாடுகளின் பங்களிப்புகள்,உதவிகல் அனைத்தும் வெளி உலகுக்கு தெரிய வரும் என்பதே அமெரிக்க;பிரிட்டனின் அச்சமாக இருந்தது.இருந்த போதிலும் சோவியத் ராணுவ தலைமையகம் பாசிச எதிர்ப்பு எனும் செயல் உத்தியில் உறுதியாக இருந்தது.இதுவே பின்நாட்களில் இன அழிப்பு;போர் குற்றங்கள்;என “மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த உலகளாவிய” சர்வதேசிய சட்டம்(INTERNATIONAL LAW ON WAR CRIMES AND GENOCIDE) முறைமை” உருவானதற்கான பின்னனியாகும்.

(5) இது போரின் போக்கில் ஏற்பட்ட திருப்பங்கள் என்று மேற்குலகம் வருணித்தாலும்,சோவியத் மக்களும் அதன் செஞ்சேனையும் தன்னந்தனியாகவே போரிட்டு ஹிட்லரின் பாசிச “வேர்மெட் இராணுவ இயந்திரத்தினை ஸ்டாலின்கிராடில் சுக்குநூறாக நொறுக்கி அள்ளினர்.இதில்மட்டும் சோவியத் மக்களும் செஞ்சேனையும் இரண்டு கோடிபேர்கள் பலியாகினர்.பின்னர் ஸ்டாலின் கிராடில் தொடக்கிய செஞ்சேனையின் கிழக்கு போர்முனை ஆயிரம்மையில் தூரத்தினை கடந்து போலந்து:செக்;பல்கேரியா;ஹங்கேரி;ருமேனியா;என ஹிட்லர் பாசிசத்தின் பல இராணுவ ஆக்கிரமிப்புகளை அகற்றி தினேபர் மற்றும் விஸ்துலா ஆறுகளை கடந்து, பெர்லின் நகரத்துக்கு அருகில் சுமார் அறுபது மைல் தூரத்தில் செஞ்சேனை நிலைகொண்டது.

இதையும் படியுங்கள் : மணிப்பூர் குக்கி இன அழிப்பு கலவரம்

ஓயாத ஏவுகணை வீச்சுகள்; துப்பாக்கி சத்தங்கள்;போர்விமான குண்டு வீச்சுக்கள் ஆகிய ஹிட்லரின் காதுகளையும் மனதினையும் துளைத்து எடுத்தன.செஞ்சேனை பெர்லின் நகருக்குள் நுழைவதற்கு முன்பாகவே, பாசிச சிந்தாந்த போதகன்,தனது நண்பன்,முசோலினி ரோம் நகர வீதிகளில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தினரால் பிடிக்கபட்டு வீதியின் விளக்கு கம்பத்தில் தலைகீழாக கட்டி வைத்து சுட்டுகொல்லப்பட்டான் என்ற செய்தியால் ஹிட்லர் மனதளவில் மரணத்துவிட்டான் என்பது வேறு விசயம்.செஞ்சேனை பெர்லின் நகர மையத்திற்குள் நுழைவவதற்கு முன்பாகவே,ஹிட்லரின் பொய்;புரட்டு;வீரவசனங்கள்;அனைத்தும் அஸ்தமித்துவிட்டன.

வாழ்வின் முடிவிலும் கூட வாழ்க்கை துணையேற்றதுதான் ஆரிய இன வக்கிரத்தின் வெளிப்பாடு,தனது காதலி “ஈவாபிரான்”னின் கழுத்தில் மாங்கல்யம் மட்டும்தான் இல்லை. மற்றபடி பதிவாளரை வரவழைத்து திருமணம் வைபோகத்தினை முடித்துவிட்டு நமது தலைவர் பாணியிலேயே “மாப் கார்தாஹே ஜீ” என சொல்லிவிட்டு ரீச்டெக் கட்டிடம் எனப்படும் பாராளுமன்றத்தின் அடியில் அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழியில் சென்றவன் தான்….?.எனது எழும்பின் சாம்பல் கூட செஞ்சேனையின் கையில் கிடைக்க கூடாது என்பதுதான் ஹிட்லரின் கடைசி உத்தரவு.அதற்கு பிறகு “இதுநாள் வரையிலான பாசிஸ்ட்டுகளின் வரலாறு அனைத்தும்(THE HISTORY OF ALL HITHERTO EXISTING FACISITS ARE LIKE HITLAR AND MUSSOLINI) ஹிட்லர்-முசோலினியைப் போன்றே”என ஓர் புதிய சொற்றொடரை தொடங்கும் விதமாக வரலாறு தொடர்கிறது.

எடுத்துக்காட்டாய் முதல் வரிசையில் இருப்பவர்கள் முசோலினியும் ஹிட்லருமே!இப்படி வரலாறு நெடுகிளும் வக்கிரமும் வன்மமும் பாசிசத்தின் இரட்டை முகங்களுக்கான எடுத்துகாட்டுக்காட்டுகளாக இருந்து வருகின்றன. இதில் பிறப்பெடுத்த சிந்தாந்தமும் நடைமுறையே,ஹிட்லரின் நாசிக்களின் வணக்கமுறை( NAZI SALUTATION)வலது கையை மார்புக்கு முன்பாக நீட்டி உறுதியெடுக்கும் வணக்க முறை.இங்கு சற்று மாறுதலுடன் வலது கையை மார்புக்கு முன்பாக நீட்டி நிறுத்தி உறுதிமொழியேற்கும் “இந்துத்துவ வணக்கமுறை” இதில் மட்டும்தான் மாற்றம். மற்றப்படி வக்கிரம்;வன்மம்;அணிவகுப்பு:வணக்க முறை; ஆகிய இதே பாசிச பயிற்சி பட்டறையில் பயிற்றுவிக்கப்பட்டவரே இன்றைய இந்தியாவின் பதினேழாவது நாடாளுமன்றத்தின் தலைமை அமைச்சர்,அதாவது பிரதமர்… என்று சொன்னால்! உண்மையிலேயே இது,இந்த தேசத்தின் பெருமைமிகு வரலாறுதான்.!அதுவும் அவரது ஆட்சியிலேயே பாரத மாதாக்களை துகில் உரித்து தெருவில் இழுத்துச்செல்லப்பட்ட காட்சியினைக் கண்டு உலகம் பெருமைக் கொண்டிருக்கிறது.

மகாபாரதத்தில்,குருசேத்திர போர்.இப்போர் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் “ரஷ்ய-உக்ரைன்” போர் என்ன?!.இந்த போர் கூட சற்று தள்ளி நிற்க வேண்டிய ஒன்று.அதனால்தான் மோடி பாணியில் சொன்னால்,மணிபூராவது மண்ணாக்கட்டியாவது என்னை விடுங்கள் நான் “உக்ரைன்-ரஷ்ய போரி”னை நிறுத்திக் காட்டுகிறேன் பார்! என்று தனது 56” இன்ஞ் மார்பினை திறந்து காட்டுகிறார் மோடி.என்ன!!??மணிப்பூர் கலவரக் களத்திற்கு அவர் போகுவதற்கு நேரமில்லை அவ்வளவுதான்!.சரி…, மகாபாரதப் போரைப் பார்ப்போம்.

தொடரும்……

நன்றி.

இவண்
சாதி ஒழிப்பு இயக்கம்–(CAM)
CASTE ANNIHILATION MOVEMENT
தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here