விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றிய பா.ஜ.க
தொடர்ச்சி…
‘பூமித்தாயை காப்பாற்ற’ இயற்கை விவசாயம்
பாஜகவின் தேர்தல் வாக்குறுதியின் பேரில் மேலும் 20 லட்சம் ஹெக்டேர் மலைகள், பழங்குடியினர் மற்றும் மானாவாரி பகுதிகளில் ரசாயனமற்ற இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும், Paramparagat Krishi Vikas Yojana மற்றும் Mission Organic Value Chain Development for North Eastern Region, உள்ளிட்ட முந்தைய திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்ததோடு புதிய திட்டங்களையும் சேர்த்தது.
பாரதீய பிரகிருதிக் கிரிஷி முறை அல்லது இந்திய இயற்கை விவசாய முறை என்று அழைக்கப்படும் முந்தைய துணைத் திட்டம் 2019-20 இல் தொடங்கப்பட்டது, இதன் கீழ் எட்டு மாநிலங்களில் 4.09 லட்சம் ஹெக்டேர் நிலம் இயற்கை விவசாயத்திற்கு அனுமதிக்கப்பட்டது. இயற்கை உற்பத்திக்கான தேசிய திட்டத்தால் சான்றளிக்கப்பட்டபடி, கிட்டத்தட்ட 4.1 மில்லியன் விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற திட்டங்களில் கரிம உரங்கள்(Organic fertilisers), புளிக்கவைக்கப்பட்ட கரிம உரம், விவசாய நிலங்களில் கழிவுகள்-ஆற்றல் திட்டங்கள், மற்றும் PM-PRANAM, அல்லது தாய் பூமியின் மறுசீரமைப்பு, விழிப்புணர்வு உருவாக்கம், ஊட்டச்சத்து மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கான PM திட்டம், ” பூமி தாயின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றுவதற்காக” உரங்களின் நிலையான மற்றும் சீரான பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், முதலியன.
IVP இன் பகுப்பாய்வில், பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனாவின் மொத்தப் பரப்பு 20 லட்சம் ஹெக்டேருக்குப் பதிலாக 12.8 லட்சம் ஹெக்டேர் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளால் பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை, 0.41 கோடி என்று தரவுகள் கூறுகின்றன. பதிவு செய்த 14.5 கோடி விவசாயிகளின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது இது ஒரு சிறிய பகுதி ஆகும்.
உறுதியளிக்கப்பட்டதில் 28% முதல் 36% வரை நிறைவேறியுள்ளதை அரசாங்கத்தின் சோதித்தறியக்கூடிய தரவுகளின் மூலமும் நிலையான அல்லது இயற்கை விவசாய நுட்பங்களின் குறிப்பிட்ட அளவுகோள்களை பொறுத்தும் அறிக்கை மதிப்பீடு செய்துள்ளது.
“நுகர்வோரின் வீட்டு வாசலில்” கரிமப் பொருட்களின் ( இயற்கை விவசாயப் பொருட்கள்) கிடைக்கும் தன்மையை அதிகரிக்க ஒரு பிரத்யேக இ-காமர்ஸ் போர்டல் என்பது தேர்தல் அறிக்கையின் மற்றொரு வாக்குறுதியாகும். 2021 ஆம் ஆண்டில், வேளாண் அமைச்சகம், இயற்கை விவசாயிகள் தங்கள் ஆர்கானிக் விளைபொருட்களை விற்பதற்கு வசதியாக, “ஒரே ஒரு தீர்வாக” ‘jaivik kheti’ அல்லது இயற்கை வேளாண்மை போர்ட்டலை அறிமுகப்படுத்தியது.
தளத்தின் படி, 600,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவுசெய்துள்ளனர், ஆனால் தளத்தில் ஒரு விற்பனையாளரின் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு என்ற இரண்டு தயாரிப்புகள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது.
கூகுள் ஆப் ஸ்டோரின் கூற்றுப்படி, Jaivik Kheti செயலி 100,000க்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பதிவு செய்துள்ளது. “விசேஷமாக, இந்திய அரசாங்கத்தின் சொந்த ஆப் ஸ்டோர் 20 ஆகஸ்ட் 2021 முதல் பதிவிறக்கங்களின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாகக் கணக்கிடுகிறது” என்று அறிக்கை கூறுகிறது.
PM-கிசான் திட்டத்தின் உண்மையான வரம்பு ஒரு சில திட்டங்கள் ஓரளவு மக்களை சென்றடைந்துள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா அல்லது PM-KISAN, டிசம்பர் 2018 இல் தொடங்கப்பட்டது, இது இந்திய அரசாங்கத்தின் 100% நிதியுதவியுடன் கூடிய மத்திய அரசு திட்டமாகும். 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 உதவி தொகையாக மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது. நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டத்தின் பலன்கள் விரிவுபடுத்தப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தாலும், பயனாளிகளின் எண்ணிக்கை உறுதியளித்ததை விட ஏறத்தாழ 40% குறைவாக உள்ளது.
2018-19 ஆம் ஆண்டில் 3.02 கோடியாக இருந்து 2021-22 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 10.78 கோடி விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, வரவு செலவு கணக்குகள் மற்றும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் DBT மூலம் இந்தத் தொகைகளைப் பெற்ற மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது முரண்பாடாக உள்ளது. 2022-23ல், பயனாளிகளின் எண்ணிக்கை 10.73 கோடியாகவும், 2023-24ல் (பிப்ரவரி 2024 நிலவரப்படி) 9.21 கோடி விவசாயிகளாகவும் குறைந்துள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக 8.78 கோடி விவசாயிகள் அல்லது இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட 14.5 கோடி விவசாயிகளில் 61% பேர் மட்டுமே இதில் பயனடைகிறார்கள். “இதற்கு அர்த்தம் பதிவு செய்துள்ள விவசாயிகளில் ஏறக்குறைய 5.7 லிருந்து 6.7 கோடி பேருக்கு இந்த திட்டத்தின் பயன்கள் கிடைக்கவில்லை என்பதாகும்” என்று அறிக்கை கூறுகிறது.
பொதுக் கொள்கை ஆய்வாளர் ஆஷா ஜோதி, IVP தன்னார்வத் தொண்டர், விவசாய நலனுக்கான சில பெரிய திட்டங்களின் பதிவு தரவுகள் அல்லது பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை ஆகியவை முதல் பார்வையில் பெரியதாக தோன்றின, ஆனால் சற்று உற்று நோக்கி நுணுக்கமான பகுப்பாய்வு மேற்க்கொள்ளும்போது பல கேள்விகள் எழுகிறது.என்று கூறுகிறார்.
உதாரணமாக, PM-KISAN இல், 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளை சென்றடைந்ததாக அரசாங்கம் கூறியுள்ளது. “இருப்பினும், ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டைப் பார்க்கும்போது, ஐந்து ஆண்டுகளுக்கு தலா 6,000 ரூபாய் என்று கணக்கிட்டு, மொத்தமாக 2.81 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படுவதைக் கணக்கிட்டால் பற்றாக்குறை உள்ளது” என்று அவர் கூறினார்.
கடந்த ஐந்தாண்டுகளில் 8.8 கோடி முதல் 10.78 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையை ஆண்டுதோறும் ஆய்வு செய்ததில், நடைமுறைப்படுத்தப்பட்ட ஆரம்ப ஆண்டுகளில் தவணையை பெற்றவர்கள் அதைத் தொடர்ந்தார்களா, அல்லது சிலர் சில தவணைகளைப் பெறத் தவறியிருக்கிறார்களா அல்லது சிலர் ரூ. 6,000க்குக் குறைவாகப் பெற்றிருக்கிறார்களா என்பது பற்றி கண்டறிய எந்த வழிமுறையும் இல்லை.
ஓய்வூதியத் திட்டம் தகுதியான விவசாயிகளில் 6% ஐ மட்டுமே அடைந்தது
மற்றொரு தேர்தல் வாக்குறுதியான, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான ஓய்வூதியம் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்டம், பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா அல்லது PM-KMY ஆகஸ்ட் 2019 இல் தொடங்கப்பட்டது. இதில் 18 வயது முதல் 40 வயது வரை விருப்பமிருப்பவர்கள் இணையலாம் தங்கள் தரப்பிலிருந்து குறிபிட்ட பங்களிப்பு செலுத்தினால் , 60 வயது முதல் ரூ.3,000 மாத ஓய்வூதியம் வழங்கப்படும்.
தோராயமாக 126 மில்லியன் சிறு விவசாயிகளில், 18 வயது முதல் 40 வயது வரையிலான விவசாயிகளின் விகிதாச்சாரப் பங்கை (உலக சுகாதார அமைப்பின் விவசாயிகளின் வாழ்நாள் தரவுகளைப் பயன்படுத்தி) 52.5 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது, பிப்ரவரி 2024 நிலவரப்படி 2.3 மில்லியன் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் தகுதியான விவசாயிகளின் சேர்க்கை 6%க்கும் குறைவாகவே உள்ளது தெரியவருகிறது, என்று அறிக்கை கூறுகிறது.
விவசாயம் சார்ந்த வாக்குறுதிகளில் 10,000 புதிய உழவர் உற்பத்தி நிறுவனங்கள் அல்லது FPOs களை உருவாக்குவது (டிசம்பர் 2023க்குள் 7,597 புதிய farmer producer companies or FPOs பதிவு செய்யப்பட்டன) என்ற திட்டம் தான் அறிவித்தவற்றிலேயே அதிகமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முன்கணிப்பு மற்றும் லாபகரமான விவசாயத்திற்கு செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வாக்குறுதி. பிந்தைய காலத்தில், விவசாயத்தில் இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை பகுப்பாய்வு கண்டறிந்தது, இருப்பினும் அவை விவசாயிகளுக்கு கணிசமான மற்றும் உறுதியான பயனுள்ள விளைவுகளைக் காட்டவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான சொத்து வளர்ச்சி
IVP ஆய்வாளர்கள், 2024 மக்களவைத் தேர்தலின் 1-ஆம் கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் வருடாந்திர வளர்ச்சியை ஆய்வு செய்தனர்.
2024 தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் அறிவிக்கப்பட்ட சொத்துக்களை ஆய்வு செய்தும், 2009 மற்றும் 2024 க்கு இடைப்பட்ட லோக்சபா அல்லது மாநில சட்டசபை தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களுடன் ஒப்பிடுவதன் மூலம் இது பகுப்பாய்வு செய்யப்பட்டது.
பதவியில் இருப்பவர்களுக்கான சொத்துகளின் சராசரி ஆண்டு வளர்ச்சி (பணவீக்கத்திற்கு சரி செய்யப்படவில்லை) காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு 11% ஆகவும், பி.ஜே.பி எம்.பி.க்களுக்கு 20% ஆகவும் இருந்தது. NDA மற்றும் INDIA கூட்டணி வேட்பாளர்களின் சொத்துக்கள் மட்டுமே பகுப்பாய்வு செய்யப்பட்டன.
குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளில் சில:
சிக்கிமில் உள்ள பா.ஜ.க வின் இந்திரா ஹாங் சுப்பாவின் சொத்துக்கள் 2019 இல் ரூ 4.79 லட்சத்திலிருந்து 2024 இல் ரூ 1.49 கோடியாக வளர்ந்தது, இது ஆண்டு வளர்ச்சி 608%;
கிருஷ்ணகிரியில் (தமிழ்நாடு) தி.மு.க.வைச் சேர்ந்த கோபிநாத் கே. 2006 ஆம் ஆண்டு பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ரூ. 15.8 லட்சத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டில் ரூ. 12.35 கோடியாக உயர்ந்து, ஆண்டு வளர்ச்சி விகிதம் 423%;
மற்றும் மதுரையின் (தமிழ்நாடு) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) எஸ் வெங்கடேசன் அவர்களின் சொத்துக்கள் 2019 இல் ரூ 18.12 லட்சத்திலிருந்து 2024 இல் ரூ 2.06 கோடியாக வளர்ந்தது, இது 209% ஆண்டு வளர்ச்சியாகும்.
கிரெடிட் சூயிஸ் குளோபல் வெல்த் டேட்டா புக் 2022 இன் படி, 2019-2022 காலகட்டத்தில் இந்தியர்களின் சராசரி தனிநபர் செல்வம் அல்லது சொத்துக்கள் (தற்போதைய மாற்று விகிதங்களில்) 0.7% வளர்ச்சியடைந்துள்ளது..
-கவிதா
மொழியாக்கம்: தாமோதரன்