வரலாற்றுப் புரட்டுகளைத் தொடர்ந்து மருத்துவ அறிவியலிலும் புரட்டு!
ஹிப்பாக்ரட்டிஸ் எதிர் சரகர் விவகாரம்!


துரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்தை துவங்கும் போது சரகர் பெயரால் உறுதிமொழி ஏற்க கல்லூரியின் டீன் ரத்தினவேல் நிர்ப்பந்தித்ததையடுத்து மாணவர்கள் சரகர் பெயரால் உறுதிமொழி ஏற்றனர்.

பொதுவாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவத்தின் தந்தையான கிரேக்க நாட்டை சேர்ந்த ஹிப்போகிரேட்டஸ் பெயரால்தான் உறுதிமொழி ஏற்றுக் கொள்வார்கள் ஏனென்றால் ஹிப்போகிரேட்டஸ் நல்லறிவு, அன்பு, இரக்கம், நேர்மை போன்றவற்றை தனது போதனையாக முன்வைத்துள்ளார்.

மருத்துவ தொழிலில் ஈடுபடும் மாணவர்கள் வியாபார ரீதியாக இந்த தொழிலை அணுகாமல் சமூகத்திற்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்பதால்தான் இவர் மீது உறுதிமொழி ஏற்கிறார்கள்.

ஆனால் சரக சம்ஹிதை  என்ற நூலை எழுதியதாக கூறப்படும் சரகர் பெயரால் உறுதி ஏற்பது மருத்துவ சேவை தொழிலுக்கே எதிரானது. ஏனென்றால் சரகரின் போதனைகள் மன்னரை வெறுப்பவர்களுக்கும், மன்னர் வெறுப்பவர்களுக்கும், கணவன் இல்லாத மனைவிகளுக்கும் வைத்தியம் செய்யக் கூடாது என்பதை சரகர் தனது போதனைகளாக வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் பைத்தியங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவின் பாரம்பரியத்தை முன்வைக்கிறோம் என்ற பெயரில் ஆயுர்வேதம் என்ற ஒன்றை மருத்துவ முறையாக முன்வைக்கின்றனர். இப்படிப்பட்ட ஆயுர்வேதம் மற்றும் சோதிடம் இரண்டையும் இணைத்து அதிலிருந்து கிடைத்த குப்பைகளைதான் மருத்துவக் குறிப்புகளாக அந்த சரக சம்ஹிதை முன்வைத்துள்ளது. அது மட்டுமல்ல சரக சம்ஹிதை என்பது முழுமையான மருத்துவ நூல் அல்ல என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அதனை முன்வைத்து மருத்துவ மாணவர்களை உறுதி எடுக்க வைப்பது கேடு கெட்ட செயலாகும்.

தமிழகத்தில் பிரபலமான மதுரை மருத்துவக் கல்லூரியில் அதுவும் திமுக அமைச்சர்கள் முன்னிலையிலேயே இதுபோன்ற அபத்தங்கள் நடைபெற்றிருப்பது காவி பாசிசத்தின் செல்வாக்கை நமக்கு எச்சரிக்கிறது. கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மட்டுமல்ல இன்னும் பல ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அல்லது அபிமானிகள் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் நீக்கமற நிறைந்து இருப்பார்கள். சமயம் வரும்போது தனது விஷக்கொடுக்கை நீட்டுவார்கள் என்பதுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய எச்சரிக்கையாகும்.

பொதுவாக மருத்துவம் என்பது சேவை என்ற தன்மையிலிருந்து மாறி கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ள இந்த சூழலில் மாணவர்களை மேலும் சீரழிக்கின்ற வகையில் இதுபோன்ற குப்பைகளை அவர்கள் மூளையில் திணிப்பது அபாயகரமானது.

இதுபற்றி ஷாஜகான் புதுடெல்லி எழுதிய பதிவையும் இத்துடன் இணைக்கிறோம்.

000

ஆர் எஸ் எஸ் முகாமிலிருந்து கிளப்பப்படும் புதிய பிரச்சினை மகரிஷி சரக சபதம்

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஹிப்போகிரேடிக் உறுதிமொழி எடுத்துக் கொள்வது வழக்கம். ஹிப்போகிரேட்ஸ் என்பவர் கிரேக்க மருத்துவர். மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர். அவரைப்பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது, என்றாலும் இப்போது அதற்கான நேரமல்ல. குறிப்பாகச் சொல்வதானால், நோய்கள் கடவுள்களால் வருவதில்லை, இயற்கையாக வருபவை என்று சொன்ன முன்னோடி அவர்.

ஹிப்போகிரடிக் உறுதிமொழி என்பது, கிரேக்க கடவுள்களின் பெயரால், மருத்துவத்தை முறையாகச் செய்வேன் என்று எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி. ஹிப்போகிரேட்டஸ்தான் அதை எழுதினாரா அல்லது, அவருக்குப் பிறகு வந்ததா என்பது குறித்து சர்ச்சைகள் உண்டு. ஆயினும், முதல் வரியில் கடவுளர் பெயர்கள் வருமே தவிர, அதன் பிறகு வருபவை எல்லாம் சேவை குறித்ததே. ரகசியம் காப்பேன், பாகுபாடு காட்ட மாட்டேன், தீங்கிழைக்க மாட்டேன், என்னால் முடிந்த அளவுக்கு திறமையை முழுமையாகப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பேன், என்பதெல்லாம் அந்த உறுதிமொழியில் அடங்கும்.

இந்தியாவிலும் ஹிப்போகிரட்டிக் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. அப்படியானால், கிரேக்க கடவுள்களின் பெயரால்தான் உறுதிமொழி எடுக்கப்படுகிறதா என்றால், இல்லை. கிரேக்க உறுதிமொழியை அப்படியே எடுப்பதில்லை. அதன் வாசகங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாடும் தனக்கான உறுதிமொழியை வடிவமைத்துள்ளது. இங்கே எடுக்கப்படும் உறுதிமொழி :

I solemnly pledge myself to consecrate my life to service of humanity.
Even under threat, I will not use my medical knowledge contrary to the laws of Humanity.
I will maintain the utmost respect for human life from the time of conception.
I will not permit considerations of religion, nationality, race, party politics or social standing to intervene between my duty and my patient.
I will practice my profession with conscience and dignity.
The health of my patient will be my first consideration.
I will respect the secrets which are confined in me.
I will give to my teachers the respect and gratitude which is their due.
I will maintain by all means in my power, the honour and noble traditions of medical profession.
I will treat my colleagues with all respect and dignity.
I shall abide by the code of medical ethics as enunciated in the Indian Medical Council (Professional Conduct, Etiquette and Ethics) Regulations 2002.

அதாவது, ஹிப்போகிரடிக் உறுதிமொழியில் உள்ள முக்கிய விஷயங்கள் எல்லாம் இதில் உண்டு. மனச்சான்றுடனும், கண்ணியத்துடனும் சேவை செய்வேன். நோயாளிக்கே முன்னுரிமை தருவேன். மனிதாபிமானத்துக்கு எதிராக செயல்பட மாட்டேன் போன்ற, நல்ல நோக்கங்களைக் கொண்ட வாசகங்கள்தான் இங்கே பயன்பட்டு வருகின்றன.

இப்படி அறிவார்ந்த விஷயங்கள் எல்லாம் மூர்க்க, முட்டாள் மோடி அரசுக்கு ஒத்து வருமா?

மகரிஷி சரகர் என்பவர், ஆயுர்வேத மருத்துவர். சரகரும் நோய்கள் முன்ஜென்மப் பலன்கள் என்று கருதியவர் அல்ல. நோய்நாடி, நோய் முதல்நாடி மருத்துவம் என்றவர்தான். இருப்பினும், ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்ட மருத்துவமுறையை அளித்தவர்.
அவருடைய சரக சம்ஹிதை நூலில் உள்ள உறுதிமொழியை இந்திய மாணவர்கள் ஏற்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் இந்திய மெடிக்கல் கவுன்சில் பரிந்துரை செய்தது.

மகரிஷி சரகர் என்பவர், ஆயுர்வேத மருத்துவர்

கவனிக்கவும் – பரிந்துரைதான் செய்தது, கட்டாயம் என்று சொல்லவில்லை.
ஆனால் அதற்குள் நம்மிடையே இருக்கும் சங்கிகளுக்கு அவசரம்போல! குனி என்று சொன்னாலே காலில் விழுந்து ஷூவை நக்கும் அவசரம். மதுரை மருத்துவக் கல்லூரியில் அதன் முதல்வர், ஹிப்போகிரேடிக் உறுதிமொழிக்குப் பதிலாக சரக சபதத்தை ஏற்க வைத்திருக்கிறார்.

தமிழக அரசு உடனே அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. வரவேற்கத்தக்க நடவடிக்கை. சரக சபதத்தின்படி உறுதிமொழி எடுத்தால் என்ன தவறு? வெளிநாட்டு உறுதிமொழியை ஏற்பீர்கள், உள்நாட்டு உறுதிமொழியை ஏற்க மாட்டீர்களா என்று சிலர் கேட்கக்கூடும். அதனால், சரக சபதத்தின் உறுதிமொழி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். அதன்பிறகு முடிவு செய்வோம்.

சரக சம்ஹிதை என்ற நூலில் சரகர் முன்வைத்த உறுதிமொழி உள்ளது. அது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. அதன் வடிவம் பின்வருமாறு (மொழியாக்கம் செய்ய நேரமில்லை என்பதால், கூகிள் மொழியாக்கத்தைத் தருகிறேன். துல்லியமான மொழியாக்கம் அல்ல) :
இப்போது நெருப்பின் முன்னும், பிராமணர் முன்னும், வைதீகரின் முன்னும் சீடருக்கு இவ்வாறு உபதேசிக்க வேண்டும்.

படிக்க:

♦ மருத்துவம் சித்த மருத்துவப் பொக்கிஷங்களுக்கு ஆயூர்வேத லேபிள்!

 வெளிநாட்டில் மருத்துவப் படிப்பும், நிறைவேறாத மருத்துவர் கனவும்!

நீங்கள் பிரம்மச்சாரியின் வாழ்க்கையை நடத்துவீர்கள், முடி மற்றும் தாடியை வளர்த்து, உண்மையை மட்டுமே பேசுவீர்கள். இறைச்சி உண்ண மாட்டீர், உணவில் தூய்மையான பொருட்களையே எடுத்துக் கொள்வீர், பொறாமை இல்லாதவராக இருப்பீர், ஆயுதம் ஏந்தமாட்டீர். ராஜா மீதான வெறுப்பு அல்லது பிறரின் மரணம் அல்லது எந்த அதர்மச் செயல் அல்லது அழிவை ஏற்படுத்தும் செயல்களை எல்லாம் விடுத்து, அனைத்தையும் என் கட்டளையின் பேரில் மட்டுமே செய்வீர்கள்.

நீ உன்னை என்னிடம் ஒப்படைத்து என்னை உன்னுடைய எஜமானனாக எண்ணுவாய். நீ என் கீழ் இருப்பாய், எப்போதும் என் நலனுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் செயல்படுவாய். நீ எனக்கு மகனாகவோ அடிமையாகவோ அல்லது சார்ந்தவனாகவோ சேவை செய்து என்னுடன் இருப்பாய். நீ அகங்காரம் இல்லாமல், அக்கறையுடனும் கவனத்துடனும், ஒருமுகப்பட்ட மனதுடனும், அடக்கத்துடனும், நிலையான சிந்தனையுடனும், சுதந்திரமான கீழ்ப்படிதலுடனும் நடந்துகொள்வாய். எனது கட்டளைப்படியோ அல்லது வேறு எந்த வேலையோ செய்யும் போது, உங்கள் குருவின் நலன்களை அடைவதற்காக மட்டுமே உங்களது திறமைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வீர்.

– மரணத்திற்குப் பிறகு பூலோகத்திலும், சொர்க்கத்திலும் மருத்துவராக வெற்றியும், புகழும் அடைய நீங்கள் ஆசைப்பட்டால், பசுக்கள் மற்றும் பிராமணர்கள் முதல் அனைத்து உயிர்களின் நலனுக்காகவும் நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

– நீங்கள் இரவும் பகலும் வேலையில் மும்முரமாக இருக்கலாம், உங்கள் வாழ்க்கை அல்லது உங்கள் வாழ்வாதாரத்தைப் பொருட்படுத்தாமல், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க அனைத்து முயற்சிகளையும் செய்வீர்கள். எண்ணங்களில் கூட மீறாதே. மற்றவர்களின் விஷயங்களைக் கண்ணால் பார்க்க மாட்டீர்கள். உங்கள் உடை மற்றும் வாழ்க்கையை எளிமையாக வைத்திருப்பீர்கள். நீங்கள் மது அருந்த வேண்டாம், பாவம் செய்யாதீர்கள், பாவம் செய்தவருக்கு எந்த வகையிலும் உதவாதீர்கள்.

– அரசனைப் பகைக்கிறவர்களுக்கோ அல்லது அரசராலும் மக்களாலும் வெறுக்கப்படுபவர்களுக்கோ நீங்கள் மருத்துவம் செய்ய மாட்டீர்கள். அவ்வாறே, மிகவும் இயற்கைக்கு மாறான, பொல்லாத மற்றும் பரிதாபகரமான குணம் மற்றும் நடத்தை உடையவர்கள், தங்கள் மானத்தை நிலைநாட்டாதவர்கள் மற்றும் மரணத்தின் விளிம்பில் இருப்பவர்கள் மற்றும் அதேபோன்று கணவர்கள் அல்லது பாதுகாவலர்களால் கவனிக்கப்படாத பெண்களுக்கு சிகிச்சை தர மாட்டீர்.

கணவன் அல்லது பாதுகாவலரின் அனுமதியின்றி எந்தப் பெண்ணும் கொடுக்கும் எந்தப் பரிசையும் நீங்கள் ஏற்க மாட்டீர்கள். நோயாளிக்குத் தெரிந்த அல்லது நோயாளியின் அனுமதியைப் பெற்ற ஒருவருடன் மட்டுமே நீங்கள் எந்த நோயாளியின் வீட்டிற்குள் நுழைய வேண்டும். உடம்பை நன்றாக மூடி வைத்துக் கொண்டு, நோயாளி போல் தலை குனிந்து, மீண்டும் மீண்டும் யோசித்த பிறகே நடந்து கொள்வீர்கள். வீட்டிற்குள் நுழைந்த பிறகு, உங்கள் பேச்சு, மனம், புத்தி மற்றும் புலன்கள் நோயாளியின் உதவி மற்றும் அவர் தொடர்பான விஷயங்களைத் தவிர வேறு எந்த சிந்தனையிலும் முழுமையாக ஈடுபடாது. நோயுற்றவரின் வீட்டின் குறிப்பிட்ட பழக்கவழக்கங்களைப் பற்றி நீங்கள் வேறு யாரிடமும் சொல்ல மாட்டீர்கள். நோயாளியின் ஆயுட்காலம் முடிவுக்கு வரப் போகிறது என்று தெரிந்தும், இதை அங்குள்ள யாரிடமும் சொல்ல மாட்டீர்கள், இல்லையெனில் நோயாளியோ அல்லது பிற நபர்களோ அதிர்ச்சியடைவார்கள்.

எவ்வளவு அறிவைப் பெற்றிருந்தாலும், உங்கள் அறிவைப் பற்றி தற்பெருமை காட்டக்கூடாது, மற்றபடி நல்லவர் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களைப் பற்றி பெருமையாகப் பேசுவதால் பெரும்பாலான மக்கள் எரிச்சலடைகிறார்கள்.

– ஆயுர்வேதத்துக்கு எல்லையே இல்லை. எனவே, நீங்கள் விடாமுயற்சியுடன் அதில் ஈடுபட வேண்டும். இப்படித்தான் நீங்கள் செயல்பட வேண்டும். மீண்டும் நீங்கள் பயிற்சியின் திறமையை மற்றொருவரிடமிருந்து – உங்களுக்கு நட்பில்லாதவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். அறிவாளிகளுக்கு இந்த உலகமே ஆசானாகவும், அறிவில்லாதவர்களுக்கு அதுவே எதிரியாகவும் இருக்கிறது. எனவே, இதை நன்கு புரிந்து கொண்டு, நட்பற்றவர் கூட உங்களுக்குப் புகழையும், நீண்ட ஆயுளையும் தருவதும், உங்களுக்கு வலிமையையும் செழிப்பையும் தரக்கூடியவர்களாகவும் இருக்கும் போது, அவர்களின் அறிவுரையின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.”

அதற்குப் பிறகு, ஆசிரியர் இதைச் சொல்ல வேண்டும் –
“தெய்வங்கள், புனித நெருப்பு, இருமுறை பிறந்தவர்கள், குரு, முதியவர்கள், வல்லுநர்கள் மற்றும் ஆசான்கள் ஆகியோருடன் நீங்கள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களுடன் நன்றாக நடந்து கொண்டால், நெருப்பு, வாசனை திரவியங்கள். , சுவைகள், விலையுயர்ந்த கற்கள், தானியங்கள் மற்றும் தெய்வங்கள் உன்னிடம் நன்றாகச் செயல்படுகின்றன, நீங்கள் வேறுவிதமாக நடந்து கொண்டால், அவை உங்களுக்குப் பாதகமாகிவிடும்.

இப்படிப் பேசிய ஆசிரியரிடம், சீடன் “அப்படியே செய்வேன்” என்று சொல்ல வேண்டும்.அவர் அறிவுறுத்தியபடி நடந்து கொண்டால், அவர் கற்பிக்கத் தகுதியானவர், இல்லையெனில், அவர் கற்பிக்கத் தகுதியற்றவர்.

தகுதியான சீடர்களுக்குப் போதிக்கும் ஆசிரியர், கற்பித்தலின் அனைத்து மங்களகரமான பலன்களைப் பெறுவார், மேலும் இங்கு விவரிக்கப்படாத மற்றவர்களும் கூட, தனக்கும் தனது சீடர்களுக்கும் அனைத்து மங்களகரமான குணங்களையும் பெறுவார்.

ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழி, ஆண்-பெண் பாகுபாடு இல்லாமல், மனச்சான்றுக்கு கட்டுப்பட்டு, கண்ணியமாக, நேர்மையாக, தன்னால் இயன்ற அளவுக்கு உயிர்களைக் காப்பாற்றப் பாடுபடுவேன் என்று சொல்கிறது.

சரகரின் உறுதிமொழி, பிரம்மசாரியாய் இரு, மாமிசம் சாப்பிடாதே, அரசனுக்கு அடிமையாக இரு, பிராமணர்களின் நலனுக்காக உழை, அரசை விமர்சிப்பவர்களுக்கு சிகிச்சை தராதே, தனியாக வரும் பெண்களுக்கு சிகிச்சை தராதே, ஆயுர்வேதம்தான் சிறந்தது, ………. என்று சொல்கிறது.

எது சிறப்பு என்று நீங்களே முடிவு செய்யலாம்.

ஷாஜகான்,
புதுடெல்லி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here