குடுமிகளிடமிருந்து ஐஐடிக்களை பாதுகாப்போம்!


நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்கள் மக்களது வரிப்பணத்தில் இயங்குகிறது.
‘பிறப்பால் தலையில் பிறந்த’ பார்ப்பனக் கும்பலும், அவர்களின் அடிமைகளான ஒரு சில இதர பிறப்பாளர்களும் மட்டுமே பயன்படுத்தி வரும் இந்த ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மீண்டும் குடுமிகளின் ஆதிக்கத்தின் கீழ் முழுமையாக செல்கிறது.

உயர்கல்வியை இவர்கள் பிடியிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
பல்கலைக்கழகங்கள், ஐஐடிக்களில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டங்களை உருவாக்குவோம்

கல்வியில் அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளை புறக்கணித்து வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், மூடநம்பிக்கைகள் அடிப்படையில் கல்வியை உருவாக்குவதன் மூலம், உடலால் இந்தியர்களாகவும் சிந்தனையால் ஆரிய-பார்ப்பனக் கும்பலை போல ஏகாதிபத்திய அடிமைகளையும் உருவாக்குகின்ற உயர்கல்வியை இவர்கள் பிடியிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
பல்கலைக்கழகங்கள், ஐஐடிக்களில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டங்களை உருவாக்குவோம்.

சமூக ரீதியிலான கண்ணோட்டத்தைப் பெறுவதற்கு உகந்த அறிவியலை கற்றுக்கொள்வோம். ஐஐடி காரக்பூர் முன்னாள் மாணவர்களின் முயற்சிக்கு தோள் கொடுப்போம்.

பெறுநர்,

இயக்குனர் அவர்கள்
இந்திய தொழில்நுட்ப கழகம்
காரக்பூர்

மதிப்பிற்குரிய ஐயா,

தாங்கள் இயக்குனராக உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், காரக்பூர் 2022-ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது “வேதங்களின் ரகசியத்தை அங்கீகரிப்பது”, “சிந்து சமவெளி நாகரிகத்தின் மறுவிளக்கம்” மற்றும் “ஆரிய படையெடுப்பு கட்டுக்கதைக்கு மறுப்பு” ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவற்றிற்கு எந்தவிதமான உறுதியான ஆதாரமும் இல்லாமல் வேதங்களின் தொன்மை மற்றும் படைப்பாற்றல் பற்றிய யூகங்களால் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பதைக் காண்கிறோம். Time Magazine, Down To Earth Magazine, மற்றும் National Geographic For Scholars போன்ற இதழ்களிலிருந்து மட்டுமே சில இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. “புத்தர் மற்றும் மகாவீரர் பிறப்பதற்கு முன்பே இலக்கியம், கலாச்சார மற்றும் ஆன்மீக நூல்களின் நீண்ட பரிணாம வரிசைகள் தெளிவாக உள்ளன. அதை அடைய சில 1000 வருடங்கள் எடுத்திருக்க வேண்டும். ஆரம்பகால வேத ஸ்ருதிகள் (வாய்மொழி வடிவம்) முதல் வேதகாலம் மற்றும் புராண இலக்கியங்கள் வரை இலக்கிய வடிவம் பெறுவதற்கு முன்பு நிச்சயமாக சில 1000 ஆண்டுகள் ஆகும்” போன்ற வாக்கியங்கள் எந்தவித அடிப்படையுமின்றியும், அறிஞர்களின் கட்டுரைகள் எதுவும் குறிப்பிடப்படாமலும் பதிவிடப்பட்டுள்ளது.

படிக்க:

பொய்யும் புனைவும் ஆராய்ச்சி ஆகுமா..?
காவி பயங்கரவாதம்: அச்சுறுத்தலாகும் ஆர்.எஸ்.எஸ்.

ஒரு குறிப்பிட்ட தேதி அல்லது ஆசிரியரைக் கூறுவதில் வேதங்களுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால், அவை கி.மு. 500-இல் எழுதப்படுவதற்கு முன்பு அவற்றை வாய்மொழி வடிவத்தில் எப்போது, ​​யார் இயற்றினார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இதேபோல் ஹரப்பா நாகரிகத்தின் அறிவுசார் சாதனைகளுக்கும் வேத நாகரிகத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து தற்போது நம்பகமான சான்றுகள் எதுவும் இல்லை, ஏனெனில் ஹரப்பா நாகரிகத்தின் எழுத்துக்கள் இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. எனவே, ஹரப்பா நாகரிகத்தின் முத்திரைகளில் உள்ள சின்னங்கள் மற்றும் உருவங்களுக்கும் ரிக் வேதத்தில் உள்ள வசனங்களுக்கும் இடையே தொடர்பு இருந்ததாகக் கூறுவதற்கு இந்த நாட்காட்டியானது வெறும் அனுமானங்களை மட்டுமே நம்பியுள்ளது. யூகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வரலாற்றை உருவாக்குவது ஒரு தொழில்நுட்பக் கழகத்தின் வேலை இல்லை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். பழங்கால வரலாற்றை அது ஆராய விரும்பினாலும், பண்டைய இந்தியாவின் தொழில்நுட்ப வரலாற்றில் கவனம் செலுத்த வேண்டும் அல்லது இந்தியாவில் நாகரிகம் உருவான வரலாறு பற்றிய நம்பகத்தன்மையுள்ள அறிவியல் ஆதாரங்களைத் தேட வேண்டும். ஆனால் இந்த நாட்காட்டி துரதிர்ஷ்டவசமாக எதையும் செய்யவில்லை. “ஆரியர்கள் பற்றிய” வரலாறு என்பது இந்திய வரலாற்றில் ஒரு சர்ச்சைக்குரிய, மிகவும் சிக்கலான தலைப்புகளில் ஒன்றாகும்.

இந்தியாவைச் சேர்ந்த சிலர் உட்பட உலகெங்கிலும் உள்ள 117 விஞ்ஞானிகளின் பழங்கால மனிதர்களின் 523 மரபணு வரிசைமுறை பற்றிய சமீபத்திய ஆராய்ச்சி (Sept 6, 2019 Science magazine “The Formation of Human Populations in South and Central Asia” என்ற தலைப்பிலான கட்டுரையைப் பார்க்கவும்) பின்வருவனவற்றை நிறுவுகிறது –

1. முதல் மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்தனர்.

2. இந்த மனிதர்கள் இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவினர்.

3. இன்றைய ஈரானில் இருந்து கி.மு. 4000-இல் அதிகமான மனிதர்கள் இந்தியாவிற்கு வந்தனர் மற்றும் முந்தையவர்களுடன் சேர்ந்து ஹரப்பா நாகரிகத்தைத் தொடங்கினர். இந்நாகரிகம் கி.மு. 2000-இல் வறட்சியின் காரணமாக வீழ்ச்சியடைந்தது.

4. இதற்குப் பிறகு, கி.மு. 1800-இல் மத்திய ஆசியப் புல்வெளிகளிலிருந்து வட இந்தியாவிற்கு மனிதர்கள் மேலும் இடம்பெயர்ந்தனர்.

5. ஹரப்பா மக்கள் தங்கள் நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தெற்கே குடிபெயர்ந்து, அங்குள்ள மக்களுடன் ஒன்றிணைந்தனர். மேலும் அவர்கள் மத்திய ஆசியப் புல்வெளிகளிலிருந்து குடியேறியவர்களுடனும் இணைந்தனர்.

இருப்பினும், இந்த நேரத்தில் நிகழ்ந்த அறிவுசார் வளர்ச்சியின் குறிப்பான தேதிகள் மற்றும் ஆசிரியர் பற்றிய எந்த ஆதாரத்தையும் இது வழங்கவில்லை, இது இன்னும் ஆராய்ச்சிக்குரிய விஷயமாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், உறுதியான ஆதாரம் எதுவும் வழங்காமல், தனது பணியின் முக்கியப் பகுதியல்லாத இந்த விஷயங்களைப் பற்றிய அனுமானங்களை மட்டுமே நாட்காட்டி வடிவில் வெளியிடுவது புகழ்பெற்ற IIT காரக்பூரின் மதிப்பைக் குலைக்கும் செயல் என்பதே எமது கருத்து.

இந்நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களாகிய நாங்கள், இந்த நாட்காட்டியின் வாயிலாக சந்தேகத்திற்குரிய அனுமானங்களையும், யூகங்களையும் நிறுவப்பட்ட அறிவியலாக நிறுவ முயற்சிக்கும் IIT காரக்பூரின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here