புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 61-வது நினைவு நாளான இன்று (21-04-2026)அவரது கவிதை வரிகளில் அனைவரது மனதிலும் என்றும் நிலைத்து நிற்க வேண்டியவையும், வழிகாட்டு நெறிமுறைகளாகக் கொள்ள வேண்டியவையும் எண்ணற்றவை உள…!

எனினும் உடனடியாக மனத்தில் இறுத்த வேண்டிய கவிதை வரிகள் சில இதோ:

“நடவு செய்த தோழர் கூலி நாலணாவை ஏற்பதும் –

உடலுழைப்பில்லாத

செல்வர் உலகை யாண்டு லாவலும் –

கடவுள் ஆணை என்றுரைத்த கயவர் கூட்ட மீதிலே – கடவுள் என்ற கட்டறுத்துத் தொழிலாளரை ஏவுவோம்..”

“ஓடப்பராயிருக்கும் ஏழை யப்பர் – உதையப்பராகி விட்டால் ஓர் நொடிக்குள் – ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி – ஒப்பப்பர் ஆயிடுவார் உணரப்பா நீ…”

“தொண்டு செய்து பழுத்த பழம் –
தூய தாடி மார்பில் விழும் –
மண்டைச் சுறப்பை உலகு தொழும் –
மனக் குகையில் சிறுத்தை எழும் –
அவர்தாம் பெரியார் –
பார் அவர்தாம் பெரியார்..”

பிறப்பிலுயர்வு தாழ்வு பேசும் இம்மண்ணில் சிறக்குமோ சொல்வாயடி – சகியே சிறக்குமோ சொல்வாயடி?

பிறந்த முப்பது கோடிப் பேரில் மக்கள் இறந்தாரோ சொல்வாயடி – சகியே இறந்தாரோ சொல்வாயடி

இதம் தரும் சமநோக்கம் இல்லா நிலத்தில் நல்ல சுதந்திரம் உண்டாகுமோ-சகியே சுதந்திரம் உண்டாகுமோ?

பதம்பெறப் பணி செய்வோர் பகை கொண்டார் எனில் எந்த விதம் அஃது கொள்வாரடி – சகியே தீனி நீங்காதடி!

வேதம் பாராட்டி வந்தோம் பிழை செய்தோம் பல்லாண்டாக மீதம் உயிர்தானுண்டு-சகியே மீதம் உயிர் தானுண்டு!

அற்பத் தீண்டாதார் என்னும் அவரும் பிறரும் ஒரு தாய் கர்ப்பத்தில் வந்தாரன்றோ!-சகியே கர்ப்பத்தில் வந்தா ரன்றோ?

தீண்டும் மக்களின் அன்னை தீண்டாரையும் பெற்றாளோ? ஈண்டிதை யார் நம்புவார்- சகியே ஈண்டிதை யார் நம்புவார்?

தீண்டாமை ஒப்புகின்றார் தீண்டாரிடம் உதவி வேண்டாமல் இல்லையடி – சகியே  வேண்டாமல் இல்லையடி!

சுவர்க்கத்தில் தேவர் என்போர் சுகமாய் இருப்பது ண்டாம் அவருக்குத் தாம் சொந்தம் என்றார் – சகியே அவர்க்குத்தாம் சொந்தம் என்றார்!

துவக்கத்தில் ஆரியரைத் தொழுதால் இறந்த பின்பு சுவர்க்கம் செல்வார் என்றனர் – சகியே சொர்க்கம் செல்வார் என்றனர்!

தம் சிறு வேதம் ஒப்பார் தமிழரை ஆரியர்கள் நஞ்சென்று கொண்டார டி – சகியே நஞ்சென்று கொண்டாரடி!

வெஞ்சிறு வேதம் ஒப்பா வீரரை ஆரியர்கள் வஞ்சித்துக் கொன்றாரடி – சகியே வஞ்சித்துக் கொன்றாரடி!

அழிவேதம் ஒப்பாதாரை அரக்க ரென்றே சொல்லிப் பழி போட்டுத் தலை வாங்கினார் – சகியே பழி போட்டுத் தலை வாங்கினார்!

பழி வேதம் ஒப்போம் என்ற பண்டைத் தமிழர் தம்மைக் கழுவேற்றிக் கொன்றார டி – சகியே கழுவேற்றிக் கொன்றாரடி!

ஆரியர் தமை ஒப்பா ஆதித் திராவிடரைச் சேரியில் வைத்தாரடி – சகியே சேரியில் வைத்தாரடி!

சேரிப் பறையர் என்றும் தீண்டாதார் என்னும் சொல்லும் வீரர் நம் உற்றாரடி – சகியே வீரர் நம் உற்றாரடி!

சூழ்கின்ற பேதமெல்லாம் துடைத்தே சமத்துவத்தில் வாழ்கின்றார் வாழ்வின் பமாம் – சகியே வாழ்கின்றார் – வாழ்வின்பமாம்!

  • எழில்மாறன்

2 COMMENTS

  1. புரட்சிக் கவிஞர் நினைவு நாள் ஏப்ரல் 21 ! அவர் புகழ் நீடூழி வாழ்க !

    கவிதை வடிவமைப்பு
    தோழர் :எழில்மாறன்

    உங்கள் கவிதை சிறப்பாக உள்ளது இந்த சிறப்பான உணர்வூட்டும் கவிதையை நான் முதன் முதலாக இப்பொழுதுதான் படிக்கிறேன்.
    தோழருக்கு வாழ்த்துக்கள் 💐🌹🌻🌺🌷

    • கவிதை வரிகள் அனைத்தும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடையதே! நான் அவரது நினைவு நாளையொட்டி கட்டுரை ஒன்றினைப் படைக்க நேரமின்மையால் குறைந்த பட்சம் நம் அனைவருக்கும் புத்துணர்ச்சி ஏற்படும் வகையில் அவரது கவிதை வரிகளில் சிலவற்றை தொகுத்து பதிவிட்டேன்! அவ்வளவே! எனக்கு கவிதை படைக்கும் ஆற்றல் இல்லை! இல்லவே இல்லை தோழரே!

      கவிதை வரிகளுக்குக் கீழே ‘எழில்மாறன்’
      எனப் பதிவிட்டுள்ளதற்குப் பதிலாக
      “தொகுப்பாளர்: எழில்மாறன்” என்று குறிப்பிட்டிருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here