
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் குறித்து தமிழகம் முழுவதும் பெரும் விவாதமானது
அரசு தரப்பிலோ ‘5 மணிநேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு விட்டார்’ என்றனர்
அ.தி.மு.க , பா.ஜ.க தரப்பிலோ குற்றவாளி ஞானசேகரன் தி.மு.க காரன் என காட்டி இந்த பிரச்சனையை தி.மு.க வுடன் சேர்த்து விட்டால் போதும் என தவித்தனர்
ஊடகங்களோ இந்த பிரச்சனைக்கான தீர்வை நோக்கி நகரமால் சினிமாவில் வன்புனர்வு காட்சியை ரசிக்கும் சைக்கோ மனநிலையில் கிசு கிசு எழுதுவது சட்டத்துக்கு புறம்பாக FIR யை வெளியிடுவது , அந்த மாணவி சொல்லாத விசயத்தை சொன்னதாக செய்தி வெளியிடுவது என்ற எச்சை வேலைகளை செய்தனர்.
இந்த சம்பவம் போலவே இரண்டு வருடம் முன்பு திருச்சி NIT யில் இரவில் காதலனுடம் பேசி கொண்டு இருந்த மாணவியை போலீஸ் என சொல்லி ஒரு பொறுக்கி, காதலனை அடித்து துரத்தி விட்டு அந்த மாணவியை வன்புணர்வு செய்தான். பின்னர் அவன் கைது செய்யப்பட்டான்.
கல்வி நிலைய வளாகத்தில் வெளி ஆட்கள் மட்டும் அல்ல அந்த வளாகத்தில் இருக்கும் ஊழியர் , ஆசிரியர்களாலும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு கலாசேத்ராவில் ஆசிரியரின் பாலியல் தாக்குதலுக்கு எதிராக மாணவிகள் போராடினர்.
நாம் தமிழர் கட்சி ஹுமாயினுக்கு சொந்தமான கும்பகோணம் அன்னை கல்லூரியில் மாணவி ஒருவரை பேராசிரியர் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியதும், அவனுக்கு ஆதரவாக ஹுமாயூன் இருந்ததும் தற்பொழுது வெளிப்பட்டு உள்ளது
இப்படி ஒவ்வொரு வருடமும் கொடுமைகள் வெளிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன.
2007 ஆம் ஆண்டு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஜஸ்டிஸ் நடத்திய ஆய்வில் 19.0% கல்லூரிப் பெண்களும் 6.1% கல்லூரி ஆண்களும் கல்லூரியில் நுழைந்ததில் இருந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவிக்கின்றது. இப்போது ஆய்வு நடத்தினால் அதைவிட அதிகமாக இருக்கும்.
இந்தியா போன்ற பார்ப்பனிய பிற்போக்கு மனநிலை , கலாச்சாரம் கொண்ட நாட்டில் இந்த தாக்குதல்களை வெளியே சொன்னால் அவமானம் என நூற்றில் 10 தான் வெளி வர வாய்ப்பு உள்ளது. அப்படியே வந்தாலும் அதன் மீதான நடவடிக்கைகள் தண்டனை என்பது இன்னும் குறைவே.
மேலும் கல்லூரி மாணவிகள் கூட கொஞ்சம் தைரியமாக வெளியே சொல்ல வாய்ப்பு உண்டு, ஆனால் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அந்த தைரியம் இன்னும் குறைவு.
திருச்சி அருகே பூவாலுரில் 9 ம் வகுப்பு மாணவியை ஆசிரியரும் அவன் நண்பனும் சேர்ந்து மிரட்டி வன்புணர்வு செய்து உள்ளனர். மாணவி வெளியே சொல்ல பயந்த நிலையில் அவர் கர்ப்பம் ஆகி பெற்றோருக்கு தெரிந்த பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டான்.
படிக்க: ♦ சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் பாலியல் வன்கொடுமை? முடிவு கட்டுவது எப்படி?
கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் நிர்வாகி போலி NCC முகாம் நடத்தி 13 மாணவிகளை சீரழித்து உள்ளான். அதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் அம்மா புகார் செய்த பொழுது பள்ளி நிர்வாகம் இதை இத்துடன் விடுங்கள் இல்லை என்றால் மாணவியின் எதிர்காலம் வீணாகி விடும் என்று சொல்லி மிரட்டி உள்ளனர். மீறி குற்றவாளி தண்டிக்கப்படனும் என அந்த மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின் தான் குற்றவாளி கைது செய்யப்பட்டான்.
இது போல் பல நூறு சம்பவம் வருடம் தோறும் நடக்கும் கொடூர உலகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.
ஆனால் ஒவ்வொரு சம்பவத்தையும் தனி தனி சம்பவமாக பார்ப்பதும் அப்படி மொத்த சம்பவமாக பார்த்தாலும் தீர்வாக சொல்வது என்பது என்ன ?
CCTV கேமரா அதிகப்படுத்தனும் என்கின்றனர். குற்றவாளிகள் CCTV கேமரா இல்லாத இடத்தில் தான் குற்றத்தை நிகழ்த்துகின்றனர் அப்படி இருக்க அத்தனை இடத்திலும் CCTV சாத்தியமா ?
கல்வி வளாகத்தில் பாலியல் குற்றத்தை சொல்ல , நடவடிக்கை எடுக்க நிர்வாக சார்பில் ஒரு கமிட்டி வைக்கலாம் என்கின்றனர். ஆனால் கலாசேத்ரா , அன்னை கல்லூரி என பல சம்பவத்தில் நிர்வாகம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நிற்கும் பொழுது அந்த நிர்வாகத்தில் இருக்கும் கமிட்டியால் தீர்வு கிடைக்குமா?
இப்படி இவர்கள் சொல்லும் தீர்வு எல்லாம் மாணவர்களுக்கு வெளியே இருந்து சொல்லும் தீர்வே!
ஏன் மாணவர்களே குற்றவாளிக்கு எதிராக நிற்கும் வலிமை இல்லையா?
நாம் அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி NIT சம்பவத்தை எடுத்து கொள்வோம். குற்றவாளி தன்னை போலிஸ் என சொல்லி தான் குற்றத்தில் ஈடுபட்டு உள்ளான் , அவன் போலீஸ் என மிரட்டியதால் ஏற்பட்ட அச்சத்தை அவன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளான் . ஒருவேளை அந்த கல்வி வளாகத்தில் மாணவர் சங்கம் வழுவாக இருந்து முறையாக தேர்தல் நடத்தி சங்க தலைமை தேர்தெடுக்கப்பட்டு இருந்தால் என்ன நடந்து இருக்கும்?
அவன் போலீஸ் என் உடன் வா என்றதும் இரு என் சங்க தலைமையுடன் பேசுகிறேன் என சங்க தலைவர்களுக்கு கால் செய்து இருப்பார்கள். யார் அனுமதி பெற்று போலீஸ் உள்ளே வந்தாய் என அவனை அங்கேயே பிடித்து உட்கார வைத்து இருப்பார்கள்.
கலாசேத்ரா-வில் மாணவர்கள் ஒன்று திரண்ட பின் தான் குற்றங்கள் வெளிப்பட்டது.
கல்லூரிகளிலும் , பள்ளிகளிலும் மாணவர்கள் – ஆசிரியர்கள் இடையேயும், பெற்றோர் – குழந்தைகள் இடையேயும் ஒரு இடைவெளி உள்ளது இதை தான் பாலியல் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.
இந்த இடைவெளி நிரப்பும் இடமாக மாணவர் சங்கத்தால் தான் முடியும். தனக்கு நிகழும் பாலியல் தாக்குதலை மற்றவரிடம் பகிர்வதை காட்டிலும் உடன் படிக்கும் மாணவரிடம் பகிர்வது எளிமையானது , அந்த மாணவர்கள் சங்கமாக, அமைப்பாக திரட்டப்பட்டவராக இருந்தால் அது குற்றத்தை வெளிப்படுத்தவும், குற்றம் நடக்காமல் தடுக்கவும் பயன்படும்.
எனவே இத்தகைய பாலியல் தாக்குதலை தடுக்க கல்வி வளாகம் எங்கும் மாணவர் சங்கம் தொடங்குவதும் , அங்கே முறைப்படி தேர்தல் நடத்தி செயல்பட அனுமதிப்பதும் தான் பிரச்சனைக்கான முழு தீர்வை தரும்
அரசு மாணவர்கள் அமைப்பு ரீதியாக, அரசியல் ரீதியாக திரள்வதை தடுக்க கூடாது. திமுக அரசு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவை தேர்தல்களை நடத்த வேண்டும். ஜனநாயகம் ஒன்றே அனைத்து குற்றத்தையும் தடுக்கும் மருந்து!
- பிரேம்
ஜனநாயகம் என்ற மருந்தை தி.மு.க அரசு சாப்பிடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்?
பள்ளி கல்லூரிகளில் மாணவர் சங்க தேர்தலை நடத்த மாணவர்களிடம் தீயை மூட்டுவோம்! தீ பரவட்டும்! பள்ளி கல்லூரிகளில் பாலியல் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டட்டும்! பாலியல் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்கட்டும்!
நன்றி.