
பால் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க ஒரு பொருள் என்று நம்பித்தான் மக்கள் அனைவரும் பாலை குடித்து வருகின்றனர்; தாய்ப்பால் கிடைக்காத நிலையில் உள்ள பிறந்த குழந்தைகளுக்கும் கூட கடைகளில் வாங்கிய பாலை கொடுத்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட பாலில் தண்ணீர் கலந்து விற்பதையும், பாலில் உள்ள சத்துக்களைப் பெருமளவு பிரித்து தனியே எடுத்துவிட்டு பால் போன்ற வடிவில் உள்ள சக்கையை மட்டும் பாக்கெட்டில் அடைத்து பால் என்று விற்பதையும் மக்கள் அனைவரும் அறிவர்.
ஆனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ரசாயன பொருட்களைக் கொண்டு செயற்கை பாலை தயாரித்து மக்களிடையே விற்றதாக வரும் செய்திகள் மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த வரிசையில் ஆந்திர பிரதேசம் சேர்ந்து விட்டதா? என்ற கேள்வி எழுகிறது.
ஆந்திர பிரதேச மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் நரசபுரம் கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் ஒரு பால் பண்ணையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பாலை குடித்ததன் காரணமாக 4 பேர் உயிர் இழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி வெளிவந்து மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் குடித்த பாலில் ரசாயனம் கலந்திருந்தது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ரசாயன பொருள் செயற்கையாக கலக்கப்பட்டதா இல்லை இது ஒரு மனிதத் தவறா என்பதை இனிமேல் தான் கண்டுபிடிக்க போவதாக அந்த மாநில அரசு கூறி உள்ளது.
குஜராத்:
இந்த செய்தியைப் படிக்கும் பொழுது குஜராத் மாநிலத்தில் ஒரு பால் பண்ணையில் செயற்கை பால் தயாரிக்கப்பட்டு வந்தது குறித்த அதிர்ச்சிகரமான சம்பவம் நம் நினைவிற்கு வருகிறது.
குஜராத் மாநிலத்தில் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு பால் பண்ணையில் 300 லிட்டர் பாலில் யூரியா, சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் காஸ்டிக் சோடா, பாமாயில், சோயா பீன் ஆயில், செயற்கை வெள்ளை நிறப் பொருட்களை கலந்து 1,800 லிட்டர் பால் தினம்தோறும் உற்பத்தி செய்துள்ளனர். இப்படி கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து ரசாயனம் கலந்த செயற்கைப் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருவது தற்போது (பிப்ரவரி மாதத்தில் 8 ஆம் தேதியன்று) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சபர்கந்தா மற்றும் மக்சேனா மாவட்டங்களில் உள்ள மக்கள் இந்தப் பாலை பல வருடங்களாக குடித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசம்:
உத்திரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 2025 ல் ஒரு பால் வியாபாரியிடம் இருந்து 500 லிட்டர் செயற்கை பாலும் செயற்கை பால் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு லிட்டர் ரசாயனமும் கைப்பற்றப்பட்டது. பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு வியாபாரி கடந்த 20 ஆண்டுகளாக செயற்கை பாலும் செயற்கை பன்னீரும் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
படிக்க:
♦ திருப்பதி லட்டு விவகாரமும்! சந்தி சிரிக்கும் உண்மைகளும்!.
குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டுமின்றி ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களிலும் இதே போன்று கலப்படப் பால் உற்பத்தி செய்து மக்களிடையே விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்படி ரசாயனப் பொருட்கள் கலந்து செயற்கையாக தயாரிக்கப்படும் பாலை குடிப்பதன் காரணமாக மக்கள் மீண்டும் சரி செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு உடல் நலக்குறைவு ஏற்படுகின்றன என்பது கொடுமையிலும் கொடுமை.
குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் பாஜக தான் ஆட்சியில் உள்ளது. பசுக்களை பாதுகாப்பதற்காக தனிச் சட்டங்களை போடுவதுடன் நிற்காமல் பசு காவலர்கள் என்ற பெயரில் இஸ்லாமியர்களையும் தலித்துக்களையும் அடித்து கொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஆர் எஸ் எஸ் பாஜக-வினர் தாங்கள் ஆளும் மாநிலங்களில் செயற்கைப் பால் தயாரிக்கப்படுவதை கண்டறிந்து தடுப்பதில் எவ்வளவு அலட்சியத்துடன் செயல்படுகின்றனர் என்பதைத்தான் இது காட்டுகிறது.
உணவுப் பொருட்களின் தரத்தை – பாலின் தரத்தை சோதித்து அறிவதற்கு என்று உள்ள அரசு அலுவலர்கள் இத்தனை ஆண்டுகளாக இந்த அயோக்கியத்தனம் நடந்து வருவதை கண்டுபிடிக்காமல் எதைப் புடுங்கிக் கொண்டிருந்தனர்? இந்த துறையை சரிவர இயக்காமல் பாஜகவின் இரட்டை எஞ்சின் சர்க்கார் என்ன புடுங்கிக் கொண்டிருந்தது? என்ற கேள்வியை இப்பொழுது மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பொதுவாக தனக்கு நன்மை செய்த ஒருவரிடம் “என் வயித்துல பாலை வார்த்தீங்க” என்று (அதாவது, என் வயிற்றில் பாலை ஊற்றியுள்ளீர்கள்; எனக்கு நன்மை செய்துள்ளீர்கள் என்ற பொருளில்) மக்கள் கூறுவது வழக்கம். அதேபோன்று ஒருவர் மற்றொருவரின் வாழ்க்கையை அழிக்க முயற்சிப்பதை “அவனுக்கு பால் ஊத்தப் பாக்குறான்” என்று மக்கள் கூறுவதும் வழக்கமான ஒன்று.
சங்கிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இந்திய மக்களுக்கு “பால் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்பதுதான் உண்மை. அந்த வரிசையில் பிஜேபி கூட்டணி ஆட்சியில் உள்ள ஆந்திர பிரதேசம் மாநிலமும் தற்போது சேர்ந்து கொண்டு விட்டதா? என்ற கேள்விக்கான பதில் ஆந்திராவில் நடந்துள்ள சம்பவத்தை நியாயமாக விசாரித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதன் மூலமாகத்தான் நாம் அறிந்து கொள்ள முடியும். பாஜகவின் கூட்டணி ஆட்சியில் இது நடக்குமா என்பது பெரும் கேள்விக்குறிதான்.
– குமரன்







சங்கிகள் ஆட்சியில் மக்கள் குடிப்பது பாலா அல்லது விஷமா ?
குஜராத் உத்திரபிரதேசம் ராஜஸ்தான் ஹரியானா ஆந்திரா
சங்கிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ரசாயனம் கலந்த பால் குடித்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் சில பேர் இறந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது பசுமாட்டை பாதுகாக்கும் பாஜக கும்பல் மக்களை பாதுகாக்காமல் கலப்பட ரசாயன பாளை தடுக்காமல் என்ன புடுங்கி கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி சரியானது
சங்கிகள் ஆட்சியில் மக்கள் குடிப்பது பாலா அல்லது விஷமா ?
குஜராத் உத்திரபிரதேசம் ராஜஸ்தான் ஹரியானா ஆந்திரா
சங்கிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ரசாயனம் கலந்த பால் குடித்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் சில பேர் இறந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது பசுமாட்டை பாதுகாக்கும் பாஜக கும்பல் மக்களை பாதுகாக்காமல் கலப்பட ரசாயன பாளை தடுக்காமல் என்ன புடுங்கி கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி சரியானது