சாஸ்திரங்கள்

ஆபஸ்தம்ப தர்ம சாஸ்திரத்தில் இருக்கும் சுலோகம் இது.

இதன் பொருள்: பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு வர்ணங்கள் இருக்கின்றது. இதில் ஒவ்வொன்றும் அதனை அடுத்து வருகிற வர்ணத்தை விட பிறப்பால் உயர்ந்தது.

இந்த சுலோகங்களையும் அதன் பொருளையும் அவர்கள் வாயாலேயே இதோ இந்த காணொளியில் கேட்கலாம்.

ஆபஸ்தம்ப தர்ம சாஸ்திர புத்தகத்தின் லிங்க்: http://www.srimatham.com/uploads/5/5/4/9/5549439/apastamba__dharma_grihya_sutras.pdf


மனுஸ்ம்ரிதியின் முதல் அத்தியாயத்தின் 100வது சுலோகம் இது.

https://www.wisdomlib.org/hinduism/book/manusmriti-with-the-commentary-of-medhatithi/d/doc145548.html

இதன் பொருள்: பிராமணனின் உயர்ந்த பிறப்பினால் உலகத்தில் இருக்கும் அனைத்தும் அவனுக்கே  உரியதாகும்

மனுஸ்ம்ரிதியின் 2வது அத்தியாயத்தின் 31வது சுலோகத்தில், பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்ட வழிமுறை சொல்லப்படுகிறது.

https://www.wisdomlib.org/hinduism/book/manusmriti-with-the-commentary-of-medhatithi/d/doc145611.html

அதன் பொருள்:

பிராம்மண குழந்தைக்கு புனிதமான பெயர்.
சத்திரிய குழந்தைக்கு வீரமான பெயர்.
வைசிய குழந்தைக்கு செல்வத்தோடு தொடர்புடைய பெயர்

சூத்திர குழந்தைக்கு……… இழிவான பெயர்!!!

மண்ணாங்கட்டி, அமாவாசை என்றெல்லாம் பெயர்கள் வைக்கும் வழக்கம் எங்கிருந்து வந்தது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். பிறக்கும்போதே அந்த குழந்தை பிராமணனா சூத்திரனா என்று முடிவு செய்யப்பட்டு விடுகிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

வேதங்களில் அறிவியலா?

வேதங்களில் பல அறிவியல் உண்மைகள் ஒளிந்திருப்பதாக கதை விடுவார்கள். ஆனால் அதை படித்து பார்த்தால்தான் அதில் இருக்கும் அபத்தங்களும் ஆபாசங்களும் தெரிய வரும்.

கிருஷ்ண யஜுர் வேதத்தில் இருக்கும் சில சுலோகங்களை இப்போது பகிர போகிறேன். அதற்கு முன் ஒரு எச்சரிக்கை. இனி வரப்போகும் சில பக்கங்கள் 18 வயதை தாண்டியவர்களுக்கு மட்டுமே.

மன்னர்கள் யாகம் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட யாகத்தில், பல விலங்குகளை பலியிட்டு யாக நெருப்பில் போடும் வழக்கம் இருந்தது. அப்படி ஒரு யாகத்தை செய்யும் முறை பற்றி வேதத்தில் இருக்கும் சில பகுதிகள்.

முதல் நாள் ஒரு குதிரையை கொன்று விடுவார்கள். அன்று இரவு, ராணி அந்த குதிரையோடு தங்க வேண்டும். மன்னர் அரண்மனையில் தங்க வேண்டும். ராணியோடு யாகம் செய்த பார்ப்பனர்களும் தங்கி சில சடங்குகள் செய்ய வேண்டும். அந்த சடங்கு என்னவென்றால், ராணி குதிரையின் அருகில் படுத்துக்கொள்ள, பார்ப்பனர் அவர்கள் மேல் ஒரு துணியை போர்த்தி விடுவார். பின்பு ராணி… குதிரையின் ஆணுறுப்பை எடுத்து தனது பெண்ணுறுப்பில் வைத்துக் கொண்டு சில மந்திரங்களை கூற வேண்டும்.

இது யஜுர் வேதத்தில் இருக்கும் சுலோகங்கள். நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால் உண்மை இதுதான். இந்த நூல் மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் வலைத்தளத்தில் இருக்கிறது. அதன் லிங்க் இதோ

http://vedicheritage.gov.in/flipbook/Krishnayajurveda_Taittiriya_Samhita_Tamil_Vol_10/#book/291

இந்த மொழிபெயர்ப்பை எழுதியது மிஷனரிகளோ, இந்து மத எதிர்ப்பாளர்களோ அல்ல. எழுதியவர் பெயர் காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகள்

இந்த யாகமும் சடங்கும் வால்மீகி  இராமாயணத்தில் வருகிறது. பால காண்டத்தில், 14வது சரகம் முழுக்க தசரதன் செய்த அசுவமேத யாகம் பற்றிய சுலோகங்கள் இருக்கிறது. அதன் லிங்க்  https://www.valmikiramayan.net/utf8/baala/sarga14/bala_14_frame.htm

33ஆம் சுலோகத்தில் ராணி கவுசல்யா, குதிரையை மூன்று கத்திகளால் குத்தினார் என்று வருகிறது.

34ஆம் சுலோகத்தில், சடங்குகளின் பலன் முழுமையாக கிடைக்க, ராணி கௌசல்யா அந்த குதிரையுடன் ஒரு இரவு தாங்கினார் என்று இருக்கிறது.

(தொடரும்…)

  • பூதம்

முந்தைய பதிவுகள்:

இந்து மதம்  பார்ப்பனீயம் | பகுதி 1

இந்து மதம் பார்ப்பனீயம் | உபநயம் | பகுதி 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here