தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தற்செயலாக நடந்தது சவுக்கு சங்கர் பித்தலாட்டம்!

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு ஆளும் வர்க்கத்தினால் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

வேதாந்தா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் எடுபிடிகளாக செயல்படுகின்ற ஓட்டுக்கட்சிகள், போலீசு மற்றும் அதிகார வர்க்கம் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகையை, 100 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தை பாசிச முறையில் ஒடுக்க நடத்தப்பட்டது தான் துப்பாக்கிச் சூடு.

ஸ்நீப்பர் செல் உட்பட அனைத்து விதமான போலீஸ் படையையும் கொண்டு வந்து தாக்குதல் நடத்திய போலீசு, இந்த ஊடக போலி சவுக்கு சங்கரிடம் மட்டும் விவாதித்தாம்.

இவர் கேட்டாராம் என்ன சார் இப்படி நடந்து விட்டதே என்று!
அவர்கள் சொன்னார்களாம் தற்செயலாக நடந்துவிட்டது என்று.

கேட்பவர்கள் கேனை என்றால் ‘பூனை புஷ்பக விமானத்தை ஓட்டுமாம்’!

சமீபகாலமாக ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு, பாஜகவின் திராவிட ஒழிப்பு திட்டங்களில் ஒன்றான திமுகவை தமிழகத்தில் இருந்து ஒழித்துக் கட்டுவது என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதற்கு பொருத்தமாக ஏவி விடப்பட்டு திமுகவை கடுமையாக விமர்சிக்கும் பாஜகவின் பினாமி கும்பலான பல்வேறு ஊடக நரிகளின் சவுக்கு சங்கர் ஒருவர் என்பதை இந்த காணொளி நமக்கு நிரூபிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here