சிதம்பரம் நடராசர் கோவில் தீட்சிதர்களை பற்றி
விசாரணைக்குழுவிடம் சொல்லுங்கள் !


சிதம்பரம் நடராசர் கோவிலில் தீட்சிதர்களால் உங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களை மோசமான அனுபவங்களை, குறைகளை தயங்காமல் சொல்லுங்கள்!

கடிதமாக நேரிலோ அல்லது இமெயில் மூலமாகவோ அனுப்புங்கள், இனியும் அமைதி காக்க வேண்டாம்,

சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு சொந்தமான நகைகள், நிலங்கள், கட்டளை வருமானங்கள், கணக்கு வழக்குகள் மற்றும் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை தடைசெய்தது ஆகியவை பற்றி பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் தீட்சிதர்களின் நிர்வாக ஊழல் முறைகேடுகள் பற்றி விசாரிக்க வந்த இந்து சமய அறநிலையத்துறை விசாரணை குழுவிற்கு ஒத்துழைப்பு அளிக்காமல் தீட்சிதர்கள் திருப்பி அனுப்பி விட்டனர். சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை ஆனால் தீட்சிதர்கள் அனைத்திற்கும் மேலாக தங்களை கருதி கொண்டு ஆணவத்துடன் செயல்படுகின்றனர். இதற்கு முடிவு கட்ட வேண்டும்.

தீட்சிதர்களின் நிர்வாக யோக்கியதை சிலவற்றை கூறுகிறோம்:

  • கோவில் சொத்துக்களை முறைகேடாக விற்றது. சாமி நகைகள் திருட்டு, ஊழல் முறைகேடு.
  • ஆளுக்கு தகுந்தாற்போல் தீட்சிதர்களின் மரியாதை
  • தங்களுக்குள் இரண்டு பிரிவாக பிரிந்து கோஷ்டி பூசலில் ஈடுபடுவதுடன் யாரும் கண்காணிக்க முடியாத வகையில் மர்மமான முறையில் கோவிலை நிர்வாகம் செய்கிறார்கள், தீட்சிதர்கள் மீது எண்ணற்ற கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
  • சிற்றம்பல மேடையில் பக்தர்களின் வழிபாட்டுரிமையை தடுக்கிறார்கள். தமிழ் திருமுறைகளை நடராசர் முன் நின்று பாடுவதை எதிர்க்கிறார்கள்.
  • பக்தர்களை உட்காராதே, நடக்காதே வெளியே போ என எளிய மக்களை நாயை விரட்டுவது போல் விரட்டுகிறார்கள்.
  • ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசன விழாக்களின் போது வருகின்ற பல லட்சம் பக்தர்களின் நலன்களை பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல் தான்தோன்றி தனமாக செயல்படுகிறார்கள்.
  • அரசு அதிகாரிகளை துச்சமாக மதிப்பவர்கள் தில்லைக்கோவிலை ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க சங்பரிவார் கூடாரமாக மாற துணைநிற்பவர்கள்.
  • கோவிலை காட்டி பெரு முதலாளிகளிடம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறார்கள். இதன் மூலம் ஜக்கிவாசுதேவ், ஈஷா மையம் போன்று பெரு முதலாளிகளிடம் கோவிலை தாரை வார்க்கும் அபாயம்.
  •  சிதம்பரம் கோவிலின் தொன்மையை சிதைத்து சட்ட விரோத கட்டுமானங்களை எழுப்பி வருகிறார்கள்.
  • ஆயிரம் கால் மண்டபத்தை சிவகாசி பட்டாசு உரிமையாளரின் இல்ல திருமண வரவேற்பிற்கு பொற்கூரைமேல் ஏறி இரவு முழுவதும் ஐந்து நட்சத்திர விடுதியாக அலங்கரித்து வாடகைக்கு விட்டவர்கள்.

அர்ச்சனை சீட்டு, பிரசாதக் கடை, உண்டியல் வைப்பது ஆகிய வழிமுறைகளின் மூலம், திருப்பதி, பழனி, ஐயப்பன் கோவில் போன்ற இடங்களில் நடப்பதைப் போன்று பக்தர்களிடம் நேரடியாக காணிக்கை வருமானமாக பல கோடி பெறமுடியும். அதை விட்டு ஒரு சில பணக்காரர்களிடம் தீட்சிதர்கள் பல கோடி பணம் பெறுவதன் நோக்கம் என்ன?.

சிதம்பரம் கோவிலை விட்டால் எங்களது வருமானத்திற்கு வழி இல்லை என்கிறார்களே!

சிதம்பரம் நடராசர் கோவிலை அரசு நிர்வாகத்தில் கொடுத்து விட்டு அனைத்து தீட்சிதர்களும் கை நிறைய சம்பளம் வாங்கி கொண்டு, தினம் தோறும் பக்தர்கள் கொடுக்கும் தட்டு காசு, தட்சனையில் தீட்சிதர்கள் அமைதியாக வாழ என்ன தடை?.

மன்னர்கள் காலத்தில் பல லட்சம் மக்கள் பல ஆண்டுகள் வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்து உருவான கோவில் கட்டிடங்கள் பாதுகாக்க வேண்டிய வரலாற்று சின்னங்கள் ஆகும்.

இடையில் மணி அடிக்கவும்,பூசை செய்யவும் வந்த தீட்சிதர்களிடம் தில்லை கோவிலின் நிர்வாகம் இருப்பதை இனியும் அனுமதிக்க கூடாது.

நூறாண்டுகள் தொடரும் தில்லை கோவில் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

உங்களுக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் ஒதுக்கி வைத்துவிட்டு தேர்தலில் வாக்களிப்பதை போல் நேரம் ஒதுக்கி தங்கள் கருத்துக்களை ஆலோசனைகளை உடனே எழுதி அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி:

துணை ஆணையர் / ஒருங்கிணைப்பாளர்
விசாரணைக்குழு, இணைஆணையர் அலுவலகம்
இந்து சமய அறநிலையத்துறை
எண்.8 ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம் கடலூர் 607001
இ – மெயிலில் அனுப்புவதற்கு – vocud.hrcetn.gov.in

நாள் 20-6-2022 – 21-6-2022 ஆகிய இரு நாட்கள்
காலை 10-00 மணி முதல் மாலை 3-00 மணிவரை

chidambaram

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here