லைநகர் தில்லியின் மூன்று சிறைகளில் கடந்த பதினைந்து நாட்களாக சோதனை செய்துவருகிறார்கள். இதுவரை 117 செல்போன்கள் கிடைத்துள்ளன. இன்னும் தேடத் தேட பல பென் டிரைவ்கள், கூர்மையான ஆயுதங்கள் என பல பொருட்கள் கிடைத்துவருகின்றன. சிறைத்துறை அதிகாரிகள், வார்டர்கள் என ஐந்து பேரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளனர்.

இந்திய சிறை வரலாற்றில் இது ஒன்றும் புதிய செய்தியில்லை. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் புழல் சிறையில் ஐம்பது பேர் கொண்ட குழு திடீரென சோதனை செய்தது. நிறைய செல்போன்கள், பென் டிரைவ்கள், ஆபாச டிவிடிக்கள், கஞ்சா, பான்பராக் என கொத்து கொத்தாய் அள்ளினார்கள். சில கைதிகளின் அறைகளில் கேபிள் கனெக்சனுடன் தொலைக்காட்சிகள் இருந்தன. சிறை அதிகாரிகளிடமும், சிறை மருத்துவர்களிடம் லஞ்ச பணம் சிக்கியது.

இந்தியாவின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்று புழல். ஆனால் கொஞ்சமாய் (!) சிக்கியிருக்கிறதே என யோசித்தால், அதற்கும் பதில் இருந்தது. சோதனைக்கு வந்த குழுவை அரை மணி நேரம் காக்க வைத்து தான் உள்ளேயே அனுமதித்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:மறுக்கப்படும் நீதி என்பது அநீதிதான்!  பாதிரியார் ஸ்டேன்ஸ் சுவாமி போல சாய்பாபாவையும் சிறையிலேயே கொன்று விட சதி நடக்கிறதா?

காசு இருந்தால் சகலமும் கிடைக்கிற நமது சிறைகளில் தான், ஒரு சராசரி மனிதன் தன் சொந்தத்தைப் பார்ப்பதற்கு சிறைக்கு போனால், வாங்கி சென்ற பிரெட், பிஸ்கெட், வாழைப்பழங்களை பிதுக்கு பிதுக்கு என பல முறை சோதித்து தான் உள்ளே அனுப்புகிறார்கள்.

தில்லிக்கு மீண்டும் வருவோம். தலைநகர் தில்லியில் காவல்துறையை மத்திய அரசு தான் கையாள்கிறது. அதே போலவே சிறைத்துறையையும்! ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்களே தில்லியிலும் ஆண்டால் அமைதியாய் இருப்பார்கள். வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால், “போலீசை எங்களிடம் கொடு” என கேட்பார்கள். இப்பொழுது தில்லியை ஆள்கிற ஆம் ஆத்மியும் அப்படித்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

இப்படி சகலமும் கிடைக்கிற சிறைகளில் தான்… ஜார்கண்ட் பழங்குடி மக்களின் உரிமைக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிய ஸ்டேன் சாமியும், அவரைப் போல சமூக செயற்பாட்டாளர்கள் பலரையும், பிரதமரை கொல்ல சதி என ஒரு பொய் வழக்கைப் போட்டு உள்ளே தள்ளினார்கள்.

இதையும் படியுங்கள்: மறுக்கப்படும் நீதி என்பது அநீதிதான்; பாதிரியார் ஸ்டேன்ஸ் சுவாமி போல சாய்பாபாவையும் சிறையிலேயே கொன்று விட சதி நடக்கிறதா?

ஸ்டேன் சாமிக்கு வயது 84. அவருக்கு கை, கால் நடுங்கும் பார்க்கின்சன் நோய் கடுமையாக தாக்கியிருந்தது. அவரால் குடிநீரை கூட சரியாக குடிக்க முடியாது. ஆகையால், ஸ்டிரா (Straw and sipper) வேண்டும் என கேட்டார். திமிராய் தரமுடியாது என்றார்கள். மக்கள் கொந்தளித்து ஸ்டிராக்களை சிறைச்சாலைக்கு அனுப்பி காறித்துப்பினார்கள். வழக்கும் போட்டு அவருக்கு ஸ்டிரா கையில் கிடைக்க ஒரு மாதம் ஆனது. தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தினாலும், சட்டப் போராட்டத்தினாலும் அவரை வெளியே கொண்டு வந்ததும், உடனே இறந்தும் போனார். அது அரச பயங்கரவாதம் செய்த பச்சை படுகொலை.

கார்ப்பரேட்டுகளை – அவர்களைப் பாதுகாக்கிற ஆளும் காவி கும்பலை எதிர்த்தால் சிறை சித்திரவதை! ஒரு ஸ்டிரா கூட கிடைக்காது.
ஒத்துப்போனால் சகலமும் கிடைக்கும்! இது தான் இந்தியாவின் நிலை!

2 COMMENTS

  1. குற்றங்கள் புரிந்து உள்ளே செல்லும் கைதிகளை சீர்ப்படுத்தி, திருத்தி அனுப்பும் வேலையை சிறை செய்வதாக சொல்கிறார்கள். கிரிமினல்களே நிர்வகிக்கும் பொழுது…. இது எப்படி சாத்தியப்படும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here