சம்யுக்த கிசான் மோர்ச்சா
பத்திரிகை செய்தி


25 அக்டோபர் 2022

ரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளைக் அனுசரிக்கும் வகையில், 26 நவம்பர் 2022 அன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணிகள் நடத்த எஸ்.கே.எம். அழைப்பு விடுத்துள்ளது !

SKMஇன் அடுத்த கூட்டம் 2022 நவம்பர் 14 அன்று டெல்லியில் நடைபெறும் !

SKMக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது !

இன்று (25.10.2022) எஸ்.கே.எம்.இன் ஒருங்கிணைப்பு குழு மற்றும் வரைவுக் குழுவின் கூட்டம் இணையவழி கூட்டமாக நடைபெற்றது. SKMஇன் தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2022 நவம்பர் 26 அன்று ஆளுநர் மாளிகை நோக்கி விவசாயிகளின் பெரிய பேரணிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெறவிருக்கும் பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அனைத்து மாநிலங்களிலும் ஆயத்தக் கூட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் விவசாயச் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஆளுநர் மாளிகை நோக்கிய பேரணிகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கவும், ஆளுநர்களிடம் சமர்ப்பிக்க வேண்டிய குறிப்பாணையை (மனு) இறுதி செய்யவும், நவம்பர் 14 ஆம் தேதி டெல்லியில் எஸ்.கே.எம்.இன் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 14ஆம் தேதி அன்று நடைபெறும் கூட்டத்தில், ஒருங்கிணைப்பு குழு மற்றும் வரைவுக் குழுவின் உறுப்பினர்களிடையே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவாதங்களின் அடிப்படையில், SKMஇன் வழிகாட்டும் நெறிமுறைகள் இறுதி செய்யப்படும்.

வனப் பாதுகாப்புச் சட்ட விதிகளில் ஒன்றிய அரசு செய்து வரும் மாற்றங்களை எஸ்.கே.எம்.இன் இன்றைய கூட்டம் கண்டித்தது. தியாகி பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15 அன்று, தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் பழங்குடி மக்களின் அமைப்புகளுக்குத் தனது ஆதரவு கரத்தை நீட்ட SKM முடிவு செய்துள்ளது.

380 நாட்கள் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தலைவர் பரம்ஜீத் சிங்கின் மறைவுக்கு இன்றைய கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் ஹன்னன் மொல்லா, டாக்டர் தர்ஷன் பால், யுத்வீர் சிங், மேதா பட்கர், ராஜாராம் சிங், அதுல் குமார் அஞ்சன், சத்யவான், டாக்டர் அசோக் தவாலே, அவிக் சாஹா, சுக்தேவ் சிங், ரமிந்தர் சிங், விகாஸ் ஷிஷிர் மற்றும் டாக்டர் சுனிலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அறிக்கையை வெளியிட்டவர்கள் :
டாக்டர் தர்ஷன் பால், ஹன்னன் மொல்லா, ஜோகிந்தர் சிங் உக்ரஹான், யுத்வீர் சிங்

சம்யுக்த கிசான் மோர்ச்சா

மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு : ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here