ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் பாசிச அரசு பாலஸ்தீன மக்களின் மீது கொடுமையான போரை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 1000க்கும் மேற்பட்டோர் குழந்தைகள்.
இஸ்ரேல் நடத்துவது ஓர் இனவழிப்பு போர். இதனை சர்வதேச அமைப்புகள் கண்டும் காணாமல் அமெரிக்காவின் துதிக்கு ஆட்டம் போடுகிறார்கள். இதனை கண்டித்து மக்கள் அதிகாரம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பல்வேறு அமைப்புகள் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ராஜூவின் உரையை பதிவிடுகிறோம். பாருங்கள்… பகிருங்கள்….