மனித உரிமைப் போராளி வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீது அநீதியான அவமதிப்பு வழக்கு மற்றும் அடக்குமுறையை செலுத்திய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் ஜனநாயக கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் நேற்று (28.07.2025) காலை 10.30 மணியளவில் நீதிமன்ற வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல் நிகழ்வாக வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாகவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்தும் முழக்கங்கள் ம.க.இ.க தோழர்கள் லதா, சீனிவாசன் தலைமையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில்…
ம.க.இ.க மாநில பொதுச் செயலாளர் தோழர் கோவன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர் தோழர் செந்தில்,
மக்கள் அதிகாரம் மாநில பொதுச் செயலாளர் தோழர் செழியன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் தோழர் தமிழாதன்,
தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பாற்றது) மாவட்ட தலைவர் மா.ப. சின்னத்துரை,
ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சம்சுதீன்,
பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் புதியவன்,
மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் நிறுவனர் பஷீர்,
சமூக நீதிப் பேரவையின் நிறுவனர் ரவிக்குமார்,
ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பாக வழக்கறிஞர் தோழர் சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாநகர செயலாளர் தோழர் புல்லட் லாரன்ஸ், காந்திபுரம் தோழர் விடுதலை விக்கி, ரெட் பிளாக் கட்சியின் தலைவர் தோழர் ஏ.சி.ராமலிங்கம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் மணலிதாஸ், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர் கார்க்கி, ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் சிவா, முன்னாள் தலைவர் தோழர் செல்வராஜ், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் தோழர் இந்திரா, எர்த் மூவர்ஸ் அசோசியேசன் மாவட்ட தலைவர் தோழர் மஞ்சுதாத், திருச்சி BHEL மருத்துமனை ஒப்பந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் மனோகர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் கமலக்கண்ணன், தோழர் வின்சென்ட், தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் உதயகுமார், தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் எம்.பி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என திரளாக பங்கேற்றனர். இறுதியாக ம.க.இ.க மாவட்ட பொருளாளர் சரவணன் நன்றியுறையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் வெங்கடேஷ் தலைமையில் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
தகவல்:
ம.க.இ.க திருச்சி.
தொடர்புக்கு: 8056905898.






