ஆகஸ்ட் 15 அமுத தின பெரு விழா!
அமுதம் கார்ப்பரேட்டுகளுக்கு!
விஷம் மக்களுக்கு!


கஸ்ட் 15 அமுத திருவிழா என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுதந்திரம் வாங்கிக் கொண்டதாக சொல்லப்பட்ட 1947 இல் இருந்து 75 ஆண்டு காலம் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் அடையாளமாக மூவர்ண கொடியை இருபது கோடி மக்கள் நெஞ்சில் குத்திக் கொள்ள வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறார்கள்.

ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல் என்ற வரிசையில் பல்வேறு தேசிய இனங்கள் மாநிலங்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களின் உரிமையை பறித்து ஒற்றை தன்மை கொண்ட இந்தியாவை பாசிச சர்வாதிகாரத்தின் கீழ் அடக்குமுறைக்கு உள்ளாக்குவதை போல ஒரே கொடி, மூவர்ணக் கொடி என்று மாற்ற எத்தனிக்கிறார்கள்.

காஷ்மீரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 வது பிரிவு வழங்கிய சிறப்பு அந்தஸ்து மற்றும் சிறப்பு அங்கீகாரம் ஆகியவற்றை பாரதிய ஜனதா கட்சி துப்பாக்கி முனையில் ரத்து செய்தது.

காஷ்மீர் மக்களுக்கு தனி கொடி வைத்துக் கொள்ள உரிமை வழங்கியிருந்த நிலையை மாற்றி காஷ்மீரிலும் மூவர்ணக் கொடி பறப்பதற்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்துள்ளது.

அரசியல் சட்டத்தின் படி சிறப்பு உரிமை பெற்ற காஷ்மீர் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டபோது தனி கொடி வைத்துக் கொள்ள உரிமை இல்லாத அல்லது அந்த கண்ணோட்டம் இல்லாத பல்வேறு தேசிய இனங்கள் மாநிலங்கள் ஏக இந்தியா என்ற மூவர்ண கொடியின் கீழ் ஒன்றிணைப்பது சுலபமாகிவிட்டது.

ஆகஸ்ட் 15 சுதந்திரம் மட்டுமல்ல கடந்த எட்டு ஆண்டுகளாக கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் துறைகள், போக்குவரத்து ராணுவம் ராணுவ தளவாட உற்பத்தி, விவசாயம் உட்பட அனைத்தும் வாரி வழங்கப்பட்டு கார்ப்பரேட்டுகளின் அதிகாரம் நிலைநாட்டப்பட்டுள்ளது.

அம்பானி ஆசியாவில் முதல் பணக்காரனாகி விட்டார் அதானி உலகின் நான்காவது பெரிய பணக்காரனாகி விட்டார். மோடி மற்றும் அமித்ஷா ஆகிய
இரண்டு குஜராத்திகள் இந்தியாவை விற்றுக் கொண்டிருக்கிறார்கள் அம்பானி, அதானி என்ற இரண்டு குஜராத்திகள் இந்தியாவை வாங்கி விட்டார்கள்.

கார்ப்பரேட்டுகளின் சுரண்டல், கொள்ளை, அதிகாரம் ஆகியவற்றை பாசிச அடக்கு முறையின் மூலம் நிலைநாட்டுவதற்கு காவி துணை போகிறது.
காவிகளுக்கும் இந்த நாட்டை பார்ப்பன மேலாதிக்கத் கீழ் ஆள வேண்டும் என்ற வெறி உள்ளக் கிடக்கையாக இருக்கிறது. இரண்டும் ஒன்றிணைந்த கார்ப்பரேட்-காவி பாசிசம் ஏறித் தாக்கி வருகின்றது.

இந்த நிலையில் சுதந்திர தின கொண்டாட்டங்கள், அமுத தின விழா போன்ற பித்தலாட்டங்கள் அனைத்தையும் திரை கிழிப்போம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here