ந்துத்துவ வெறியர்களால்  இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வாட்சப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடத்தப்படும் அருவறுக்கத்தக்க வெறுப்பு பேச்சுக்கள் இன்று புதிய பாராளுமன்றத்திலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு எதிராக.!

கடந்த வியாழக்கிழமை சந்திராயன் 3 குறித்த விவாதத்தின் போது பாஜகவின் தெற்கு டெல்லி பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியினை தகாத சொற்களால் பேசியது புதிய பாராளுமன்றத்தில் பாஜக தந்து புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதை பார்க்க முடிந்தது.

பிஜேபி எம்பி ரமேஷ் பிதுரி டேனிஷ் அலியை பார்த்து இவ்வாறு பேசுகிறார் “ யே உக்ரவாடி(போராளி), பத்வா(pimp), கத்வா(சுன்னத் செய்யப்பட்டவர்), முல்லா உக்ரவாதி(முஸ்லீம் தீவிரவாதி), மற்றும் அடங்காவாதி(தீவிரவாதி). Bahar phenko iss mulle ko (இந்த முல்லாவை வெளியே தூக்கியெறியுங்கள்)”.

இந்த வார்த்தைகளுக்கு நாம் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி இன்னொரு மக்கள் பிரதிநிதியை அரசியலமப்பு சட்டத்தின் பதவியேற்ற ஒருவர் எப்படி பேசமுடிகிறது?

அமித்ஷாவுடன் பிஜேபி எம்பி ரமேஷ் பிதுரி

இந்த தாக்குதலுக்கு உள்ளான பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலி கூறிய கருத்து முக்கியமானது. “இதுபோன்ற வார்த்தைகள் பாராளுமன்றத்திற்கு வெளியே முஸ்லீம்களுக்கு எதிராக அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன்”.

இது தனிப்பட்ட தாக்குதல் அல்ல. இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான தாக்குதல். இதைத்தான் பாசிச மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற 2014-ல் இருந்து சங்பரிவார் கும்பல் தெருக்கள் தோறும் செய்து வருகிறது. ஹிட்லரின் ஜெர்மனியில் நாஜி கும்பல் யூதர்களுக்கு எதிராக இதையே தான் செய்தது.

ஆளும் பாசிச பாஜக கும்பல் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அதை எதிர்த்து கேள்விக் கேட்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள், தேசத்துரோகிகள், பாகிஸ்தானுக்கு போ என்று தான் கூறி வந்தார்கள். இப்போது வெறுப்பு பேச்சுகளை நாடாளுமன்றத்திலேயே பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இதையும் படியுங்கள்:

மோடி வெறுப்புணர்ச்சி பற்றி பேசுவது பாசிஸ்டுகளுக்கே உரிய நடிப்பு!
ஆர். எஸ்.எஸ் கும்பலின் இசுலாமிய வெறுப்பு! வன்முறைக்கு தயார்.

வழக்கம் போல் எதிர்கட்சிகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தும், ரமேஷ் பிதுரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும் நாடாளுமன்ற சிறப்புக் குழுவுக்கு பரிந்துரைக்க கோரியும் உள்ளார்கள்,. ஆனால் இது எதுவும் ரமேஷ் பிதுரியை ஒன்றும் செய்துவிடப் போவதில்லை.

பாஜக எம்பிக்கள் இஸ்லாமிய எம்பிக்கு எதிராக அருவறுக்கதக்க வகையில் பேசுவது முதல்முறை என்றாலும் இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் காந்திக்கு எதிராகவும், கோட்சேவுக்கு ஆதரவாகவும் பேசிய பிரக்யாசிங்கும், பிரிவினை பேசிய நிரஞ்சன் ஜோதியையும் இவர்கள் ஆதரிக்கவே செய்தார்கள்.

சபையில் எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு பிறகு எழுந்து வந்த பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “ரமேஷ்பிதுரி கூறிய கருத்துக்களால் எதிர்கட்சிகள் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்” என்றார்.

ரமேஷ் பிதுரியின் இந்த கேவலமான பேச்சை பாஜகவின் எம்பிக்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.முன்னாள் அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், ரவிசங்கர் பிரசாத் பின்னால் சிரித்துக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

ஆம் அவர்கள் புதிய பாராளுமன்றத்தில், புதிய அத்தியாயத்தை தொடங்கிவிட்டார்கள். இவர்களின் வானரப்படையும் தலைவன் சொல்லிவிட்டான் நாமும் ஒரு கை பார்க்கலாம் என்று முன்பை விட மூர்க்கமாக செயல்படுவார்கள். ஒருவேளை 2024 தேர்தல் வரை பொறுத்திருக்கலாம்.

ஆனால் நாம் அதுவரை பொறுத்திருக்க முடியாது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெறுப்பு பேச்சு பாராளுமன்றத்திலும் அரங்கேறியுள்ளது.ரமேஷ் பிதுரி: தனியாள் அல்ல. காவி பாசிசத்தின் வகைமாதிரி. இவர்களை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிவதோடு பாசிச கும்பலின் அடிப்படையான ஆர்.எஸ்.எஸ் எனும் வேரை அடியோடு வெட்டி வீழ்த்தினால் தான் மத வெறுப்பற்ற, சக மனிதனை சகோதரத்துவத்துடன் நடத்தும் இந்தியா சாத்தியம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here