அனைத்து சாதி அர்ச்சகர்கள் பணி நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் பிப்.16, 2022 அன்று இடைக்கால உத்தரவு!

0

அனைத்து சாதி அர்ச்சகர்கள் பணி நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் பிப்.16, 2022 அன்று இடைக்கால உத்தரவு!

புதிதாக நியமிக்கப்பட்ட அரசு கோயில் அர்ச்சகர்கள் வழக்கில் முக்கிய தரப்பினர் இல்லை!

தலைமை நீதிபதி அமர்வு வழங்கிய இடைக்கால உத்தரவு உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது!

தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாகத் தலையிட வேண்டும்!

அரசு கோயில் அர்ச்சகர்கள் சார்பில் அரசே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்!

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)
128, கோகுலம் இல்லம், அரசமரத் தெரு திருவண்ணாமலை மாவட்டம்
90474 00485.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
384, முதல் தளம்,கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், மதுரை-20, .9865348163
+++++++++++++++++

பத்திரிக்கை செய்தி

நாள்: 26.02.2022


அனைத்து சாதி அர்ச்சகர்கள் பணி நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் பிப்.16, 2022 அன்று இடைக்கால உத்தரவு!

புதிதாக நியமிக்கப்பட்ட அரசு கோயில் அர்ச்சகர்கள் வழக்கில் முக்கிய தரப்பினர் இல்லை!

தலைமை நீதிபதி அமர்வு வழங்கிய இடைக்கால உத்தரவு உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது!

தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாகத் தலையிட வேண்டும்!

அரசு கோயில் அர்ச்சகர்கள் சார்பில் அரசே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்!

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாய் இருந்த கருவறைத் தீண்டாமையை, அகற்றும் விதமாக, கடந்த ஆகஸ்ட்.14, 2021 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்து சாதி அர்ச்சகர் நியமனங்களை வழங்கினார். தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்த 24 அர்ச்சக மாணவர்கள் உட்பட 58 மாணவர்களுக்கு முறையான நேர்காணல் மூலம் பணிநியமனம் வழங்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் பணியாற்றி வருகின்றனர்.

ஒட்டு மொத்த தமிழ்நாடும் தி.மு.க அரசின் நடவடிக்கையை வரவேற்றபோதும், சிவாச்சார்யார்கள், பட்டாச்சாரியார்கள் என அரசு பொதுக் கோயில்களில் வாரிசு முறையில் பணியாற்றி வரும் சிலரும், வைதீக இந்துத்துவ மத அடிப்படைவாத அமைப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில்,

(i) அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனம் (CHALLENGING THE ADVT.DATED:06.07.2021)

(ii) அர்ச்சகர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கான, தமிழ்நாடு இந்து சமய நிறுவனப் பணியாளர்கள் பணிவரன்முறை விதிகள்,2020 (CHALLENGING G.O.Ms.No.114 – TAMIL NADU RELEGIOUS INSTITUTIONS EMPLOYEES (CONDITIONS OF SERVICE) RULES,2020- மற்றும்

(iii) அரசு அர்ச்சகப் பள்ளிகளை எதிர்த்து 24-க்கும் மேலான வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி.16, 2022 அன்று மேற்படி வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தன.மேற்படி வழக்குகளில் தங்களையும் இணைக்கச் சொல்லி, புதிதாக நியமிக்கப்பட்ட அரசு கோயில் அர்ச்சகர்கள் 12 பேர், உச்சநீதிமன்றத்தில் நடந்த இரண்டாம் அர்ச்சகர் வழக்கான ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்கில் எதிர் மனுதாரர்களாய் இருந்த அனைத்து சாதி அர்ச்சக மாணவர் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன், திரு.சத்தியவேல் முருகனார் , தெய்வீக தமிழ் பேரவை சார்பாக திரு.மணியரசன் உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

விசாரணையின்போது வா.ரெங்கநாதனின் வழக்கறிஞர் திரு.பிரபு ராஜதுரை அவர்கள் வா.ரங்க நாதனின் அர்ச்சக மாணவர் சங்க உறுப்பினர்கள் தான் இவ்வழக்கின் தீர்ப்பு வந்தால் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள், புதிய அர்ச்சகர்களின் பணி நியமனம் ரத்தானால், இவர்களுக்கும் பணி நியமனம் கிடைக்காது எனவே வழக்கில் அர்ச்சக மாணவர் சங்கத்தை இணைக்க வேண்டும் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீங்கள் வழக்கில் முக்கிய, அவசிய தரப்பினர் இல்லை; வேண்டுமானால் வழக்கில் உதவுங்கள் என்று சொல்லிவிட்டு, மனுதாரர்கள் தரப்பு வாதத்தை சிறிது நேரம் கேட்டுவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

அர்ச்சக மாணவர்களின் பணி நியமனத்துக்கு எதிரான வழக்குகள், மாணவர்கள் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்னரே தொடுக்கப்பட்டுவிட்டன என்ற போதிலும், மாணவர்களின் பணி நியமனத்துக்குப் பின்னர்தான் இவையனைத்தும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. எனவே தற்போது பணி நியமனம் பெற்றுவிட்ட அர்ச்சகர்களும், பணி நியமனம் பெற காத்திருக்கும் பயிற்சி முடித்த மாணவர்களும் இந்த வழக்குகளில் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்களும், அவசியமான தரப்பினரும் ஆவர்.

இந்த உண்மைநிலையை அங்கீகரித்த, மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞரும் அனைவரையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்வதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும் நீதிபதிகள் இடையீட்டு மனுக்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

வழக்கை ஒத்தி வைப்பதாக மட்டுமே கூறினர்.

அதன்பின் உயர்நீதிமன்ற இணைய தளத்தில் கீழ்க்கண்டவாறு உத்தரவு வந்துள்ளது.

“W.M.P.Nos.18099, 18106, 20087 and 22971 of 2021 in W.P.No.15534 of 2021, W.M.P.18122, 19759, 18552, 19376, 20006 and 23437 of 2021 in W.P.No.16287 of 2021, W.M.P.23105 of 2021 in W.P.17802 of 2021, and W.M.P.Nos.431, 430, 429, 432, 895 and 898 of 2022 in W.P.No.21906 of 2021
THE HONOURABLE CHIEF JUSTICE
and
D.BHARATHA CHAKRAVARTHY J
Heard the learned counsel appearing for the parties in all these impleading applications. The petitioners cannot be said to be necessary parties, however, to provide assistance, they are allowed to intervene in the Writ Petitions. Accordingly, these impleading petitions are disposed of”

மேற்படி இடைக்கால உத்தரவு, புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு கோவில் அர்ச்சகர்கள் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்காமலேயே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாண்புமிகு.தலைமை நீதிபதி அமர்வின், இடைக்கால உத்தரவு, மாண்புமிகு.உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது.புதிதாக அரசு பொதுக் கோயில்களில் நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அரசுக் கோயில் அர்ச்சகர்களை, வழக்குத் தொடுத்தவர்களே எதிர் மனுதாரர்களாக இணைத்திருக்க வேண்டும். தாங்களாக இணைய வந்த, அவசிய-முக்கிய தரப்பினரை எதிர்மனுதாரர்களாக இணைக்காமல் இருப்பது சட்டப்படியானதல்ல.
மாண்புமிகு.உச்சநீதிமன்றம் – கீழ்க்கண்ட தீர்ப்புகளில் – முக்கிய, அவசிய தரப்பினரை வழக்கில் இணைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. உரிய தரப்பினர் இல்லாததால், பல வழக்குகளைத் தள்ளுபடியும் செய்துள்ளது.

(i) In Ramarao and Ors. v. All India Backward Class Bank Employees Welfare Association and Ors. reported in 2004 (I) LLJ 1061SC, the Hon’ble Apex Court reiterated the legal position and held that “…. An order against the person without impleading him as a party and without giving an opportunity of hearing must be held to be bad in law. The appellants herein, keeping in view of the fact that by reason of the impugned direction, the orders of promotion effected in their favour had been directed to be withdrawn, indisputably, were necessary parties. In their absence, therefore, the writ petition could not have been effectively adjudicated upon. In the absence of the ‘promotees’ as parties, therefore, it was not permissible for the High Court to issue the directions by reason of the impugned judgment.”

(ii) In Prabodh Verma v. State of U.P. reported in 1984 4 SCC 251 the Hon’ble Supreme Court has held as follows: 50.To summarize our conclusions: (1) A High Court ought not to hear and dispose of a writ petition under Article 226 of the Constitution without the persons who would be vitally affected by its judgment being before it as respondents or at least some of them being before it as respondents in a representative capacity if their number is too large to join them as respondents individually, and, if the petitioners refuse to so join them, the High Court ought to dismiss the petition for non-joinder of necessary parties. (2) The Allahabad High Court ought not to have proceeded to hear and dispose of Civil Miscellaneous Writ No. 9174 of 1978 Uttar Pradesh Madhyamik Shikshak Sangh v. State of Uttar Pradesh [1979 All LJ 178] without insisting upon the reserve pool teachers being made respondents to that writ petition or at least some of them being made respondents thereto in a representative capacity as the number of the reserve pool teachers was too large and, had the petitioners refused to do so, to dismiss that writ petition for non-joinder of necessary parties.”

(iii) In Avtar Singh Hit v. Delhi Sikh Gurdwara Management Committee reported in 2006 8 SCC 487, the Hon’ble Apex Court held as follows: “31. In our view no relief could have been granted to the writ petitioners on account of the fact that the newly elected office-bearers of the Executive Board, who would have been affected by the decision of the writ petitions, were not impleaded as party to the writ petitions.

(iv) In Ishwar Singh v. Kuldip Singh [1995 Supp (1) SCC 179 : 1995 SCC (L&S) 373 : (1995) 29 ATC 144] it was held that a writ petition challenging selection and appointment to some posts without impleading the selected candidates was not maintainable. This view has been reiterated in Arun Tewari v. Zila Mansavi Shikshak Sangh [(1998) 2 SCC 332 : 1998 SCC (L&S) 541 : AIR 1998 SC 331]. 33. This being the settled legal position, the non-impleadment of the newly elected office- bearers of the Executive Board was fatal and no relief could have been granted to the writ petitioners. The result of granting any relief in the writ petitions, as was done by the learned Single Judge, was that the members of the newly elected Executive Board lost the office which they were holding without affording them an opportunity to present their case which is clearly impermissible in law. The writ petitions were liable to be dismissed on this count as well.”

(v) In Public Service Commission v. Mamta Bisht reported in 2010 12 SCC 204 the Hon’ble Apex Court held as follows: “9. In case Respondent 1 wanted her selection against the reserved category vacancy, the last selected candidate in that category was a necessary party and without impleading her, the writ petition could not have been entertained by the High Court in view of the law laid down by nearly a Constitution Bench of this Court in Udit Narain Singh Malpaharia v. Board of Revenue [AIR 1963 SC 786] , wherein the Court has explained the distinction between necessary party, proper party and pro forma party and further held that if a person who is likely to suffer from the order of the court and has not been impleaded as a party has a right to ignore the said order as it has been passed in violation of the principles of natural justice.

(vi) In Vijay Kumar Kaul v. Union of India reported in 2012 7 SCC 610 the Hon’ble Supreme Court held as follows: “36. Neither before the Tribunal nor before the High Court, Parveen Kumar and others were arrayed as parties. There is no dispute over the factum that they are senior to the appellants and have been conferred the benefit of promotion to the higher posts. In their absence, if any direction is issued for fixation of seniority, that is likely to jeopardize their interest. When they have not been impleaded as parties such a relief is difficult to grant.
(vii) In Ranjan Kumar v. State of Bihar reported in 2014 16 SCC 187, the Hon’ble Supreme Court held as follows: “4. On a perusal of the orders impugned, we find that only 40 persons were made respondents before the High Court and hardly a few appointees filed applications for intervention. It is well settled in law that no adverse order can be passed against persons who were not made parties to the litigation.

இரண்டாவதாக, மேற்படி வழக்குகளில் பல அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்யக் கோருபவை. சட்ட மொழியில் சொன்னால் “ CASES PERTAINING TO SERVICE “(பணித்துறை – ஊழியம் தொடர்பானது). பணித்துறை – ஊழியம் தொடர்பான வழக்குகளை, சம்மந்தப்பட்ட- பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே தொடர முடியும்;பொது நல வழக்காக, யாரோ ஒரு நபர் தொடர முடியாது. இச்சட்ட நிலையினை, மாண்புமிகு. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள், அலகாபாத் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தபோது கீழ்க்கண்ட வழக்கில் உறுதி செய்துள்ளார்.

In Public Interest Litigation (PIL) No. 9 of 2019 dated 6th July 2021 in Vinod Vs. State of U P and 3 Others is as follows,
“This Writ Petition was preferred to seek transfer of respondent no.4
We do not find any public interest involved in it and otherwise for any issue pertaining to service, a public interest litigation petition is not maintainable other than a writ of quo-Warranto.
In view of the above, this public interest litigation petition is dismissed as not being maintainable.
Order date:- 6.7.2021

சட்ட நிலை மேற்கண்டவாறு உள்ள நிலையில் சிவாச்சார்யார்களின் வழக்கை ஆரம்பநிலையிலேயே விசாரணைக்கே ஏற்கக் கூடாது என தமிழக அரசு வாதிட வேண்டும்.

தள்ளுபடி செய்யப்பட்ட அரசு கோயில் அர்ச்சகர்களின் இடைக்கால மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும்.

அரசு கோயில் அர்ச்சகர்களிடம் உச்ச நீதிமன்றம் செல்ல போதிய நிதி ஆதாரம் இல்லாததால், தமிழக அரசோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகமோ உரிய உதவிகள் செய்ய வேண்டும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை நீதிமன்றத்திலும் நிலைநிறுத்த தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாகத் தலையிட வேண்டும் எனக் கோருகிறோம்.
________________________________________________________

வா.ரங்கநாதன், தலைவர்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு.
தொடர்புக்கு : 9047400485

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
தொடர்புக்கு : 98653 48163.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here