அன்பார்ந்த தோழர்களே!
புரட்சியில் இளைஞர்கள் என்ற சோவியத் யூனியனில் நடந்த புரட்சிகர வரலாற்றை தொகுத்து வெளியிட்ட நூலில் இருந்து முக்கியமான சில பகுதிகளை தொகுத்து கீழைக்காற்று வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது.
ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கமும் என்ற லெனின் சகாப்தத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு உறுதியான போல்ஸ்விக் மயமான  புரட்சிகர கட்சியை கட்டுகின்ற மகத்தான பணியில் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் போது பல்வேறு சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். அதைக் கண்டு அஞ்சுவது, பின்னோக்கி செல்வது போன்ற போக்குகளை புரிந்துக் கொள்ள இந்த நூல் நமக்கு உதவும்.

மாணவர்கள், இளைஞர்கள்,இளம் தொழிலாளர்கள், சமூக மாற்றத்தை நேசிக்கும் பயணத்தில் இடையில் ஏற்படும் சிறு தடைகளை கண்டு அஞ்சுவது, பின்னோக்கி செல்வது தமது லட்சியத்தை அடைய ஒரு போதும் உதவாது.
சோவியத் நாட்டில் இளம் கம்யூனிஸ்டுகள் செய்த அளப்பரிய தியாகங்களை இந்த சிறு நூல் எடுத்துரைக்கிறது.
புதிய தலைமுறைக்கு இந்த வீர மரபை அறிமுகம் செய்து தொடராக வெளியிடுகிறோம்.

நாளை முதல் மதியம் 1 மணிக்கு தினமும் வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here