ஜூலை 19 அன்று ‘பாலஸ்தீனத்திற்கான இந்தியர்கள்’ என்ற கூட்டமைப்பால் டெல்லியில் நடத்தப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஹர்ஸ் மந்தர் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துக் கொண்டனர்.இந்த பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவு ஆர்ப்பாட்டம் இந்துத்துவ பாசிச கும்பலால் ஒடுக்கப்பட்டது.

அக்டோபர் 2023 தொடங்கிய இஸ்ரேல் காசா போர் இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. 58 ஆயிரம் மக்களுக்கு மேல் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள புரட்சிகர அமைப்புகள் உட்பட உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் இஸ்ரேல் நடத்தும் இனஅழிப்பு போருக்கு எதிராக தங்களது கண்டனத்தை பல்வேறு வகையில் வெளிப்படுத்தி வருகிறார்கள்..

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன். இஸ்ரேல் ஈரான் போரையும் நான் தான் நிறுத்தினேன் என சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் பாசிஸ்ட் ட்ரம்ப் இஸ்ரேல் காசா போரை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்து யூத இனவெறி நெதன்யாகுவின் இஸ்ரேல் ராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்கியும் நேரடி ஆதரவு தெரிவித்தும் காசா மக்கள் மீதான இனப்படுகொலையில் பங்கு வகிக்கிறார். அமெரிக்காவின் பேராதரவுடன் தான் இந்த இன அழிப்பு போர் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியா பல ஆண்டுகளாக சுதந்திர பாலஸ்தீனை ஆதரித்து வந்த நிலையில் பாசிஸ்ட் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவின் தீவிர விசுவாசியாக தன்னை காட்டிக் கொள்ள இஸ்ரேல் சார்பு நிலைக்குச் சென்று விட்டார். இந்த இனவெறியர்களின் போரில் பங்கு பெற இந்தியாவில் இருந்து ஆட்கள் அனுப்பப்பட்டது அந்த அடிப்படையில் தான்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான போரை நிறுத்தும் சர்வவல்லமை கொண்டவர் மோடி என சங்பரிவார் கும்பலால் வானளாவ புகழப்பட்ட மோடி கூட இஸ்ரேல் காசா போரை நிறுத்த விரும்பவில்லை. ஒட்டுமொத்த மேலாதிக்க வெறி கொண்ட பாசிச கும்பலால் காசா மீதான இன அழிப்பு போர் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக உலகம் முழுவதும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

படிக்க: பாலஸ்தீனம்-காசா வுக்கு எதிரான இஸ்ரேலின் போர்: உலகிற்கு உணர்த்தும் உண்மைகள்!

அதே போல இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட புரட்சிகர, ஜனநாயக அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் ஜூன் 24 நடந்த போராட்டமும் ஜூலை 19 நடந்த போராட்டங்களும் சங்கபரிவார் கும்பலாலும் காவல்துறையாலும் ஒடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 19 அன்று பாலஸ்தீன மக்களுக்கு நாங்கள் துணை நிற்போம் என ஒற்றுமையை காட்டும் விதமாக நேரு பிளேஸில் ஒன்று கூடிய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தன்னலமற்று துணிச்சலாக களத்தில் நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.

இரண்டாவதாக பெரும்பாலான போராட்டங்கள் அனைத்தும் ஜந்தர் மந்தரில் நடத்தப்பட்டு கொண்டிருக்கும்போது அதற்கு பதிலாக தொழிலாளர்கள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் வந்து செல்லும் பொதுவெளியான நேரு பிளேஸை தேர்ந்தெடுத்தது, போராடினாலே குற்றம் என பார்க்கப்படும் பாசிஸ்டுகள் ஆட்சியில் ஜனநாயகமாக போராடுவதற்கான இடத்தை மீட்டெடுப்பதற்கான துணிச்சலான முயற்சியாகும்.

ஆனால் ஜனநாயக ரீதியாக போராடுவதை பாசிஸ்டுகளும் அவர்களின் அடியாள் படைகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா என்ன? அதுவும் எஜமான அமெரிக்காவின் ஆதரவு பெற்ற இஸ்ரேலை எதிர்த்து போராட்டம் என்றால் சும்மா விடுவார்களா? சில நிமிடங்களில், நேரு பிளேஸின் மையப்பகுதியை சுற்றி திரண்ட நூற்றுக்கணக்கான இந்துத்துவ கும்பல் திடீரென்று வெறி கொண்டவர்களாக மாறி போராடியவர்களை தாக்கத் தொடங்கினர்! அவர்கள் “ஜெய் ஸ்ரீ ராம்!”, “இஸ்ரேல் ஜிந்தாபாத்!” மற்றும் “பாலஸ்தீன் முர்தாபாத்!” என்று கத்தத் தொடங்கினர்.

“நீ இந்தியாவைக் காட்டிக் கொடுக்கிறாய்!” “இஸ்ரேல் சிந்தாபாத்” - பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் சங்கிகள் கூச்சல்!

கூட்டம் கிட்டத்தட்ட வன்முறையில் ஈடுபட்டது, போராடியவர்களை நோக்கி கத்த ஆரம்பித்தது. ஒருவர் சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஹர்ஷ் மந்தரை நோக்கி, “நீங்கள் ஏன் இங்கே பாலஸ்தீனத்திற்காக போராட்டம் நடத்துகிறீர்கள்? பாலஸ்தீனத்திற்குச் சென்று அங்கு போராட்டம் நடத்துங்கள்!” என்று கேட்டார்.

இன்னொருவர், “நீ இந்தியாவைக் காட்டிக் கொடுக்கிறாய்!” என்று கத்தினார்.
ஹர்ஸ் மந்தர் அவருக்குப் பதிலளிக்கும் விதமாக “பாலஸ்தீனியர்களுக்காக நிற்பது எப்படி இந்தியாவுக்கு துரோகம் இழைக்கிறது?” என்று கேட்டபோது, அந்த தர்க்கம் அந்த கலவரக்காரனுக்கு புரியவில்லை.
சிலர் அவர்களிடம், “நீங்களும் ஏன் இந்தியக் கொடியை ஏந்தக்கூடாது?” என்று கேட்டார்கள். அமைதிப்படுத்தும் முயற்சியில் போராட்டகாரர்களில் ஒருவர் இந்தியக் கொடியை உயர்த்தினார். இருப்பினும், அது விரைவாகப் பறிக்கப்பட்டது. கூட்டம் “பாரத் மாதா கீ ஜெய்!” என்று கோஷமிடத் தொடங்கியது.
அவர்கள் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களையும் ஸ்டிக்கர்களையும் விநியோகித்தபோது, போராட்டக்காரர்களை எதிர்கொண்ட கும்பலுக்கு இஸ்ரேலின் குற்றங்கள் பற்றித் தெரியாது அல்லது கவலை இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இந்திய அரசாங்கத்தின் இஸ்ரேல் ஆதரவைப் பற்றி அவர்கள் அதிகம் கவலைப்படவில்லை.

படிக்க: களவாடப்பட்ட காஸாவின் வாரிசுகள் ! பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை கொன்ற இஸ்ரேல் !

ஆனால் பாலஸ்தீனியர்களை முஸ்லிம்களுடன் சமன்படுத்தி பார்த்த கும்பலுக்கு இவை எதுவும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. இறுதியில் போலீசார் வந்தனர், ஆனால் கலவரக் கும்பலின் ஆக்ரோஷத்தை அடக்குவதற்குப் பதிலாக, அவர்கள் போராட்டக்காரர்களிடமிருந்து போராட்டம் அனுமதி வாங்கி நடத்துகிறீர்களா? என ‘சட்டப்படி’ சங்பரிவார் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள். நிகழ்வை சீர்குலைத்தவர்கள், பொருட்களை வீசியவர்கள் அல்லது போராட்டக்காரர்களை அச்சுறுத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது யாருக்கும் ஆச்சரியமாக இல்லை.

இதுதான் இன்றைய இந்தியா. உலகெங்கும் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது பாசிஸ்ட் மோடி ஆளும் இந்தியாவில் போராடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அல்லது போராட்டம் வன்முறை கும்பலால் ஒடுக்கப்படுகிறது. காவல்துறை ஒருபுறம் கலவர கும்பல் மறுபுறம் என பாசிஸ்டுகளின் கொடூர ஆட்சியின் கீழ் ஜனநாயகம் மறுக்கப்பட்டு புரட்சிகர இயக்கங்களும் ஜனநாயக சக்திகளும் ஒடுக்கப்படுகிறார்கள்.

தகவல்: தி வயர்

நலன்

2 COMMENTS

  1. மேலாதிக்க ரௌடியான அமெரிக்காவின் கைபானமான பாசிச இஸ்ரேல் அப்பாவி பாலஸ்தீன குழந்தைகள் முதல் முதியோர் வரை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்க விட்டாலும் பரவாயில்லை; அந்த நடவடிக்கைகளுக்கு வின்சாரம் வீசுகிறது இந்திய ஆளு வர்க்கமான சங்கிக் கும்பல்.
    அனைத்து விதங்களிலும் எப்படி காவி கூட்டம் இந்திய நாட்டை கலவர பூமி ஆக்கி புரட்சிகர சக்திகளையும், போராடும் மாணவர்களையும், பழங்குடியினரையும் கொன்று குவிக்கக் கூடிய மரபைக் கொண்டிருப்பதால், அதே அடிப்படையில் பாலஸ்தீனத்தின் பாசிச நடவடிக்கைகளை ஆதரிப்பதும், அதனை எதிர்த்துப் போராடும் இந்திய ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதுமான இழிசெயலை நன்றாகவே அம்பலப்படுத்தி இருக்கிறது இக்கட்டுரை.

    • இஸ்ரேல் பாலஸ்தீனம் போரில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் பசி பட்டினி படுகொலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் உலகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் முற்போக்கு இயக்கங்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி உலக ரவுடி இஸ்ரேல் அரசையும் அமெரிக்காவையும் கண்டிக்கும் விதமாக பல கண்டனங்கள் முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டெல்லயில் அமைதியாக போராடிய சமூக செயல்பாட்டாளர்களை அம்மாஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் காசா மக்களுக்கு ஆதரவக போராடுபவர்களை வன்முறையும் கலவரத்தை தூண்டும் வகையில் ஆர்எஸ்எஸ் பாசிச பாஜக ரவுடிகளின் கேடான செயலை மக்கள் முறியடிக்க வேண்டும் பாதிக்கப்படும் எந்த நாட்டு மக்களுக்காகவும் ஒட்டுமொத்த நாட்டில் உள்ள அனைத்து உழைக்கும் வர்க்கமாக குரல் கொடுக்க வேண்டியது மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவக் கூடியது நம்முடைய கடமை ஆகும் அந்த வகையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிப்போம் உதவி கரங்களை நீட்டுவோம் இஸ்ரேல் அமெரிக்கா போன்ற கொலவெறி பிடித்த ராணுவத்தா தாக்குதலை தொடுக்கும் பேட்டை ரவுடி இஸ்ரேல் அரசை உலக ரவுடி அமெரிக்காவையும் வன்மையாக கட்டியமைப்போம் !

      நன்றி வணக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here