கடந்த 75 ஆண்டு கால இந்தியத் தேர்தல் ஆணைய வரலாற்றில் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு முன்பு 26 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாகப் பணியாற்றி உள்ளனர்.அவர்களில் எவர் மீதும் பாராளுமன்ற இரு அவைகளிலும் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்ட வரலாறே இல்லை.
அரசியலமைப்பின் 324(5) பிரிவின்படி உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்ய பின்பற்றப்படும் அதே நடைமுறை அடிப்படையில் தான் தலைமை தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய முடியும். அத்தகையதொரு ‘மகத்தான வாய்ப்பு’ முதன் முறையாக பாசிசக் காவிக் கும்பலின் பின்புலத்தில் தற்போதையத் தலைமை தேர்தல் ஆணையராக ‘வீற்றிருக்கும்’ ஞானேஷ்குமார் ‘IAS’ -க்குத் கிடைத்துள்ளது.
ஆம், பாராளுமன்ற மேலவையில் 130 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 63 உறுப்பினர்களும் ஆக மொத்தம் 193 (197 என்ற செய்தியும் வருகிறது) எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையொப்பமிட்டு தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி நோட்டீஸ் அளித்துள்ளனர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சற்றேறக் குறைய 200பேர் ஞானேஷ்குமாருக்கு எதிராகக் கையொப்பமிட்டுள்னர். இது சாதாரண எண்ணிக்கை அல்ல;பாஜக தனது கூட்டணி கட்சிகளின் ‘உறுதுணை’யுடன் பெரும்பான்மைப் பலம் பெற்றிருந்தாலும், ஒரு தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக கையொப்பமிட்டவர்களின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கதொரு அளவுக்கு அதிகமான எண்ணிக்கை தான். அதை எவராலும் மறுக்க முடியாது.
உண்மையில் மானம், அவமானம் பார்க்கக்கூடிய சுபாவம் உடையவர் எவரேனும் அப் பதவியில் இருந்திருந்தால் உறுதியாக பதவியை ராஜினாமா செய்து விட்டு கிளம்பி இருப்பர்.ஆனால் ஞானேஷ்குமாரின் தொடர்ச்சியான சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடுகளை கண்ணுறும்பொழுது அவர் அப்படியெல்லாம் தன்மானம் பார்க்கக் கூடியவராகத் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் எப்படி சட்டத்திற்குப் புறம்பாக சனாதனத்தின்படி நீதிபரிபாலனம் செய்வதில் ஒரு நீதிபதி முன்னுதாரணமாகத் திகழ்கிறாரோ அதற்கு எள்ளளவும் குறைந்தவரில்லை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.
ஞானேஷ்குமாரின் அட்டூழியங்கள் ஒன்றா? இரண்டா?
ஞானேஷ்குமார் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு வரும் முன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுப்பாட்டிலிருந்த கூட்டுறவுத் துறையில் செயலாளராகப் பணியாற்றியவர். இளமைக்காலத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் மோடி- அமித்ஷாக் கும்பல் இவரைப் பொறுக்கி எடுத்து தலைமைத் தேர்தல் ஆணையாளராக நியமனம் செய்து கொண்டது.
ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் தில்லு முள்ளு மோசடிகள் பற்றி ஏற்கனவே நாம் இதே தளத்தில் பல கட்டுரைகளைப் படைத்திருக்கிறோம். எனினும், அவர் மீது இவ்வளவு எம்.பி.க்கள் பதவி நீக்கம் செய்யக்கோரி கையொப்பமிட்டு நோட்டீஸ் வழங்கியுள்ள சூழலில் அவரைப் பற்றி மீண்டும் சிலவற்றை நாம் அசைபோட வேண்டி உள்ளது.
தேர்தல் ஆணையாளர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர் + எதிர்க்கட்சித் தலைவர் + உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி = மூவர் அடங்கிய குழு தான் தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பைப் பாசிச காவிக் கூட்டம் நாடாளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டு சட்டத் திருத்தம் செய்து கொண்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு பிரதமர் நியமிக்கும் ஒன்றிய அமைச்சரை அதற்கு பதிலாக நியமித்துக் கொண்டு எப்பொழுதுமே நிரந்தரமாக பாஜக முன்மொழியும் ஐஏஎஸ் அதிகாரிகளே காவிச் சிந்தனை கொண்ட தேர்தல் ஆணையர்களாக நியமித்துக் கொள்ளும் மோசடித்தனத்தை உருவாக்கிக் கொண்டார்கள். அதன்படி ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவா சங்பரிவார் கூட்டத்தின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் ஆணையாளர்களின் செயல்பாடுகள் அமைந்து விட்டன.
அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் ராகுல் காந்தி ஓராண்டிற்கு முன்பு அம்பலப்படுத்திய பெங்களூரு மத்திய பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மகாதேவ் புரா சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 250 போலி வாக்குகள் சேர்க்கப்பட்டு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றியடைய வழிவகை செய்த மோசடியாகும். இத்தொகுதியில் சுமார் 12,000 வாக்காளர்கள் இரு முறை பதிவாகி இருந்தனர். 40059 வாக்காளர்களின் முகவரிகள் போலியானவை. 10452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதியப்பட்டிருந்தனர். 4132 பொருத்தம் இல்லா புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைப் பதிவு செய்ய படிவம் 6-ஐ33692 பேர் தவறாகப் பயன்படுத்தி உள்ளனர்.
ஒரே கதவு எண்ணில் 80 வாக்காளர்கள்; வீட்டு எண் ‘0’; வாக்காளர் பெயர் zoldcm; ஒரே படுக்கையறையில் 46 வாக்காளர்கள்; ஒரே நபருக்கு 4 வாக்குச்சாவடிகளில் பெயர்கள் பதியப்பட்டிருந்தது; 4-லிலும் வாக்கு போடப்பட்டிருந்தன; ஒருவருக்கு மகாராஷ்டிரா, உ.பி.யில் தலா ஒரு வாக்கும், மகாதேவ்புரா தொகுதியில் இரண்டு வாக்குகளும் இருந்தன…
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த ஒரு மகாதேவ்புரா சட்டமன்றத்தொகுதியில் மட்டும் இவ்வளவு தில்லுமுல்லு மோசடிகள் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையமும் ஒன்றிய பாஜகவும் கைகோர்த்து நின்றன. இதனை ராகுல் அம்பலப்படுத்திய போது தேர்தல் ஆணையம் ‘இடைக்கால வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட போதும், முடிவான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட போதும் ராகுல் எங்கே சென்று இருந்தார்? இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரமாண வாக்குமூலம் மூலமாக மனுச் செய்ய வேண்டும்; இல்லையே ராகுல் மீது வழக்கு தொடரப்படும்…’ என்பதாக மிகவும் ‘கெட்டிக்காரத்தனமாக’ மிரட்டி சவடால் அடித்தது தேர்தல் ஆணையம்.
இதே போல அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்; அம்மாநிலத்தில் பிரேசில் மாடல் அழகி ஒருவரின் பெயர் புகைப்படத்துடன் 22 வாக்குச்சாவடிகளில் வெவ்வேறு பெயர்களில் இடம் பெற்றிருந்தன; 22 வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்தன; இதை அறிந்த அந்த மாடல் அழகி இந்திய தேர்தல் ஜனநாயகத்தைப் பார்த்துக் காரி உமிழ்ந்தார். இதே போல் தான் பல வட மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு பாஜக ‘வெற்றிக்கனி’யைத் தட்டிப் பறித்துச் சென்றது.
கடந்தாண்டு பீகாரில் தீவிர வாக்காளர் சேர்த்தல்/நீக்கல்/திருத்தல் பட்டியல் (SIR phase-I) பணி மேற்கொள்ளும் பொழுது 65 லட்சம் பேரை நீக்கினார்கள்; நீக்கியோர் பட்டியலைக் கேட்டால் தர மறுத்தது தேர்தல் ஆணையம். இறந்து போனோர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர்; உயிரோடிருப்போர் இறந்தோர் பட்டியலுக்கு கொண்டு சென்று நீக்கப்பட்டனர். இவ்விதக் கொடுமைகளைக் கண்டோம்.
படிக்க: ”SIR” எனும் பாசிச தாக்குதல்! பீகாரை அடுத்து மேற்கு வங்கம், தமிழ்நாடு!
இவ்வளவையும் மீறி இரு கட்டத் தேர்தலில் பல்வேறு தில்லுமுள்ளு மோசடிகள் மூலம் NDA கூட்டணி வழக்கம் போல ஆட்சியைப் பிடித்தது. தற்போது தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் (SIR phase-II) எனும் மோசடி பணி அரங்கேறி முடிந்துள்ளது. பீகாரை விட மோசமான முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே தான் வழக்கம் போல இந்த மாநிலங்களிலும் மோசடி தேர்தல் நடத்தி வெற்றி அடைய பாசிச காவிக் கூட்டம் கனவு கண்டு கொண்டிருக்கிறது. அதற்கு சாத்தியப்பாடுகளும் உள்ளன.
*சிசிடிவி கேமராக்களை 45 நாட்களில் அழித்து விடுவது;
*தேர்தல் ஆவணங்கள் அனைத்தையும் மூன்று மாதங்களுக்குள் அழித்து விடுவது;
*எதிர்க்கட்சிகள் கோரும் வாக்காளர் நீக்கல் பட்டியலை தர மறுப்பதற்கு ஆணையத்திற்கு உரிமை உண்டு என சட்ட திருத்தம் செய்வது;
*பணியில் இருக்கும் காலத்திலோ ஓய்வு பெற்ற பின்னரோ குற்றச்சாட்டுகளின் பின்னணியில் தேர்தல் ஆணையாளர்கள் மீது எவ்வித வழக்கும் தொடுக்க முடியாது; தண்டனை வழங்கவும் முடியாது என்று பாராளுமன்றத்தில் வெட்கங்கெட்ட தனமாக சட்டத் திருத்தம் செய்து கொண்டது;
*தலைமைத் தேர்தல்ஆணையருக்கு Z+ காவல்துறை பாதுகாப்பு வழங்கி நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் செய்து கொண்டது; தேர்தல் ஆணையத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு சென்றது…
இப்படி எண்ணற்ற மிக இழிவான தன்மையில் உச்ச நீதிமன்றத்திற்கு சமமான தன்மையில் சுயேட்சையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையத்தை சங்கிகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான கருவியாக மாற்றிக் கொண்டுள்ளது ஆர்எஸ்எஸ் பாஜக பாசிசக் காவிக் கும்பல்.
காவிப் பாசிஸ்டுகளை ஆட்சி அதிகாரத்தில் தூக்கியெறிவதே தீர்வு!
தற்போது பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக் கோரும் நோட்டீஸ் என்பதும் கூட இந்த பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்தே செயல்படுகிறார்கள். அதுவும் பாராளுமன்ற மேலவை சபாநாயகர், மற்றும் மாநிலங்களவை தலைவர் அனுமதித்து விசாரணக்கு ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்;
பின்பு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், இந்தியாவின் 25 உயர் நீதிமன்றங்களில் ஒன்றின் தலைமை நீதிபதி, மற்றும் ஒரு சிறப்புமிக்க சட்ட வல்லுநர் அடங்கிய குழு விசாரணைக்கு உட்படுத்தும். நீதிமன்ற விசாரணை நடைமுறைகளைப் போன்றே அமைந்திருக்குமாம்.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் கீழமை நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்ற – உச்ச நீதிமன்றங்களில் கொலிஜியம் மூலமாக நியமனம் செய்யப்படும் நீதிபதிகளில் பெரும்பான்மையோர் சங்கிகளாக ஆர்எஸ்எஸ்-காரர்களாக உருவெடுத்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது. அவ்வாறெனில் எந்தக் குழுவை அமைத்து என்ன பயன்?
எனவே, நாட்டில் காவிப் பாசிசம் நிலைத்து நிற்பதை தடுக்க வேண்டும் என்றால் ஆர் எஸ் எஸ் – பாஜக – இந்துத்துவ பாசிசக் காவிக் கூட்டத்தை வீழ்த்துவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள் வெகு மக்களை – தொழிலாளர்களை – விவசாயிகளைத் திரட்டி வீதிகளில் இறங்கிப் போராடி வீழ்த்துவதன் மூலமே குறைந்தபட்ச ஜனநாயகத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இதுதான் நிதர்சனமான உண்மை.
எழில்மாறன்








இந்திய தேர்தல் ஆணையம் மக்களுக்கானது அல்ல?
அது கார்ப்பரேட் காவி நலன் கொண்டதாக மாறி உள்ளது. என்பதை தான் இந்த கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக காவிகள் தங்கள் நலம் சார்ந்த நபர்களை அதிகாரத்தில் நியமனம் செய்து தனக்கானதை சாதித்து கொள்கிறார்கள்.
இது முறியடிக்கப்பட வேண்டும் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும் அதுதான் தீர்வாக இருக்கும்.
ஞானேஷ்குமார்:
தேர்தல் ஆணைய வரலாற்றில் மாபெரும் கரும்புள்ளி:
கடந்த கால தேர்தல் ஆணையர்களில் மிகவும் மோசமான ஆர்எஸ்எஸ் பின்புலத்தை சேர்ந்த ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி 200 எம்பிக்கள் கையொப்பம் போட்டுள்ளனர் சங்கீ கும்பலுக்கு ஆதரவாக சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் மோசடிகளை செய்து பாஜகவுக்கு வாக்கு வங்கி ஏற்படுத்தித் தரும் ஒரு மோசடி பேர்வழி தான் ஞானேஷ்குமார் என்ற கட்டுரை சிறப்பாக உள்ளது.
ஞானேஷ்குமார் இவர் தேர்தல் ஆணையத்திற்கு தகுதி இல்லை என்று அம்பலப்படுத்தியும் .ராகுல் புள்ளிவிவரமாக வெளியீட்டும் இவர் சனாதனத்தின் சங்கிதான் இவரை கீழிருந்து மக்களிடம் அம்பலப்படுத்தி விழ்த்துவது ஜனநாயகத்தின் கடமையை .