விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்றனர் என்ற செய்தி வெளியாகி இருந்தது.
விநாயகர் சதுர்த்தி போன்ற நிகழ்வுகளுக்கு லட்சக்கணக்கானவர்கள் செல்வது ஏன் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாக உருவாகியுள்ளது என்பது மட்டுமின்றி இது கவனத்துடன் விவாதிக்கப்பட வேண்டிய அம்சமாக மாறியுள்ளது..
ஏனென்றால் அதற்கு முந்தைய வாரத்தில் தான் தொடர்ச்சியான விடுமுறை என்ற பெயரில் 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர்.
ஒரே வாரத்துக்குள் ஒரே வாரத்திற்குள் ஏன் இவ்வளவு பெயர் சொந்த ஊர் களுக்கு திருமணமானவர் இப்படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது என்பதை மேலோட்டமாக பரிசளிக்க முடியாது.
“சென்னையில் இருந்து மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறார்கள். ரயில்களில் தற்போது 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பொங்கலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (12/9/2024) தொடங்குகிறது.
அதாவது 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறது.15ம் தேதி மாட்டுப் பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை திங்கட்கிழமை வருகிறது. நீண்ட நாள் விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமையே பயணம் செய்ய விரும்புவார்கள். இதனை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று செப்டம்பர் 12ம் தேதி முதல் தொடங்குகிறது.”என்று நாளேடுகள் உசுப்பேத்துகின்றன.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு செல்கின்ற புதிதாக உருவாகி வரும் நடுத்தர வர்க்கம் தனது கிராமங்களிலும் அல்லது நகரங்களிலும் இரண்டு, மூன்று தெருவுக்கு ஒரு விநாயகர் சிலையை அமைப்பதற்கு தனது வருவாயிலிருந்து கணிசமான தொகையை வாரிக் கொடுத்துள்ளனர்.
ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் உழைக்கும் மக்களின் ரத்தத்தை வட்டியின் மூலம் உறிஞ்சி கொழுக்கின்ற மார்வாரிகள், சேட்டுகள் இதுபோன்ற விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு லட்சக்கணக்கான ரூபாயை தாராளமாக வாரி வழங்குகின்றனர்.
அந்த வட்டிப் பணமும், புதிய நடுத்தர வர்க்கம் கொடுக்கின்ற ‘கிட்டிப் பணமும்’ (பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர்களின் உழைப்பின் மூலம் கிட்டிய) இணைந்து பெரும் தொகையாக புழங்கத் துவங்கியுள்ளது.
இப்படி பெரும் தொகை லட்சங்களில் புரண்டதன் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி தின விழா கொண்டாட்டங்கள் மிகப்பெரும் திருவிழாவைப் போல மாறியுள்ளன.
ஏற்கனவே மக்கள் மத்தியில் புரையோடிப் போயுள்ள பார்ப்பன (இந்து) மதம் குறித்த பிற்போக்குத்தனமான கருத்தியல்கள் இந்த விநாயகர் ஊர்வலம் மற்றும் கொண்டாட்டங்களின் மூலம் பிரம்மாண்டமாக வெளிப்படத் துவங்கியுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நகரமயமாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதும், தலா 10 லட்சம் பேர் கொண்ட (தற்போது எண்ணிக்கை 25) மாநகராட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதற்கும் இது போன்ற புதிய நடுத்தர வர்க்கம் உருவாகியுள்ளது என்பதற்கும் நெருக்கமான உறவு உள்ளது.
படிக்க:
♦ கலவரத்தின் தொடக்கப்புள்ளி விநாயகர் சதுர்த்தி!
♦ விநாயகர் சதுர்த்தி வசூல் வேட்டையில், திருப்பூரில், அடித்து நொறுக்கப்பட்ட தள்ளுவண்டி கடை!
இவர்கள் பாரம்பரியம், மரபு என்ற பெயரில் பல நூற்றாண்டுகளாக நீடித்து வருகின்ற பலவிதமான பிற்போக்கு பழக்கவழக்கங்களை தோண்டி எடுத்து அதற்கு புதிய பெயிண்ட் அடித்து கடை விரிக்க துவங்கியுள்ளனர்.
கோவில் கும்பிடு, குலதெய்வ வழிபாடு, பார்ப்பன மத பண்டிகைகள் துவங்கி இதுபோன்ற இன்ஸ்டன்ட் பண்டிகைகள் வரை அனைத்தும் மிகவும் பிரமாண்டமாகி வருகிறது என்பதுடன் அது உருவாக்குகின்ற உளவியல் தாக்கங்களையும் சேர்த்துதான் நாம் பரிசீலிக்க வேண்டும்.
“புதுக்கோட்டை, பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விநாயகர் சதுர்த்தி விழாவை மகிழ்ச்சியுடன், உறுதி மொழியுடன் கொண்டாட வேண்டுமென்று சுற்றிக்கைகள் அனுப்பப் பட்டுள்ளன” என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.
வேளாங்கண்ணி சீசன், மருவத்தூர் சீசன், சபரிமலை சீசன், பழனி பாதயாத்திரை சீசன் என்பதைப் போல விநாயகர் சதுர்த்தி சீசன் உருவாகி உள்ளது என்பதை கார்ப்பரேட் காவி பாசிசத்துடன் இணைத்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இதனைப் புரிந்து கொள்வதற்கு கடந்த காலங்களில் விநாயகர் தின விழாவை எவ்வாறு தமிழகம் பார்த்தது, அதற்கு எதிராக பகுத்தறிவு பாரம்பரியத்தில் என்னென்ன எதிர்ப்புகள் உருவானது என்பதையும் தற்போது உருவாகியுள்ள புதிய சூழலையும் ஒருங்கிணைத்து பார்ப்பதன் மூலமே விநாயகர் ஊர்வலங்கள், புதிய வகை திருவிழாக்கள் எந்த அளவிற்கு சமூகத்தை பாசிச மயமாக்கி வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
(தொடரும்…)
- பார்த்தசாரதி.