மக்கள் கலை இலக்கிய கழகம் தமிழ்நாடு


கண்டன அறிக்கை

           கோயம்புத்தூர் விளாங்குறிச்சி தர்மசாஸ்தா பள்ளியில், காவி பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் ஷாகா பயிற்சி நடைபெற்று வருகிறது. வெவ்வேறு சமயப்பின்னணியிலிருந்து கல்விக் கற்க வருகின்ற இளம் தளிர்களை இந்து மதவெறி நஞ்சை ஊட்டுகின்ற சதித்திட்டத்தோடு இந்த ஷாகா பயிற்சி தொடங்கி நடைபெற்று வருவது மிகவும் கவலையளிக்கிறது கல்வி நிறுவனங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் கூடாது என்கிற அரசு ஆணை இருந்தும் அதை மீறி இத்தகைய நடவடிக்கைகளுக்கு சில தனியார் கல்வி நிறுவனங்கள் இடம் கொடுக்கின்றன. சமூகத்தின் அமைதியைக் குலைக்கின்ற திட்டத்தோடு நடத்தப்படும் இந்த ஷாகா பயிற்சியை நிறுத்தக்கோரிதான் பல்வேறு முற்போக்கு ஜனநாயக இடதுசாரி பெரியாரிய தலித்திய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடச்சென்றன திராவிடக் கருத்தியலை மிக மோசமாக விமர்சனம் செய்வதற்கு எச்.ராஜா போன்றோருக்கு மூன்று மணிநேரம்வரை அனுமதியளித்து பாதுகாப்பளித்த கோவை காவல்துறை, ஷாகாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தச்சென்ற அமைப்பினரை அனுமதிக்காமல், கூடுவதற்கு முன்னதாகவே குண்டுக்கட்டாக தூக்கி வேனில் திணித்துள்ளது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மிக மோசமாய் நடத்தப்பட்டுள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளச்சென்ற தோழர்கள். பாலசுப்பிரமணியன்(சி.பி.ஐ எம்எல்) தோழர்-ஜூலியஸ் (மக்கள் அதிகாரம்) ஆகியோரை காவல்துறை முன்னிலையிலேயே சங்பரிவார அமைப்பினர் தாக்கியுள்ளனர் ஜனநாயக வழியில் போராடுகின்ற தோழர்கள்மீது தாக்குதல் நடத்திட சங் பரிவாரத்தினருக்கு ஆதரவாய் காவல்துறைசெயல்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அடுத்தடுத்து வந்த தோழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அந்த இடத்திலேயே அமர்ந்திருந்த ஆர்எஸ்எஸ் குண்டர்களை தெரிந்தே அனுமதித்துள்ளது.

இவ்வாறு அமைதியான வழியில் போராடச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எஸ் காவிக்குண்டர்களை உரிய சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அவர்களுக்கு ஆதரவாய் செயல்பட்ட கோவை காவல்துறையினர் மீது துறைவாரியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் அமைதியாய் இருக்கின்ற கோவையை மட்டுமின்றி தமிழகத்தையே மதக்கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டு நடத்தப்படும் ஷாகா பயிற்சியை தடைசெய்யவேண்டும் என்றும், இத்தகைய மதவெறி நடவடிக்கைகளுக்கு இடமளிக்கின்ற தனியார் கல்வி நிறுவனங்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு
31.12.2021

கோவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here