ராகுல் காந்தி எம்.பி பதிவு பறிப்பு
சென்னை பாஜக அலுவலகம் மக்கள் அதிகாரம் முற்றுகை
அதானியின் கொள்ளையை பேசிய ராகுல் காந்தி எம்.பி பதிவு பறிப்பு- இரண்டு ஆண்டு சிறை தண்டனை!
ஜனநாயகத்திற்கு இறுதி எச்சரிக்கை!
கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்த களத்தில் இறங்கி போராடுவோம்!
என்ற முழக்கத்தை முன்வைத்து சென்னை- பாஜக அலுவலகம் முற்றுகை போராட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பு மாநில பொதுச் செயலாளர் தோழர்.ராஜு தலைமையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.
போராட்ட படங்கள்:
இந்த போராட்டத்தில் அதானி- மோடி களவுக் கூட்டை அம்பலப்படுத்தியும், ராகுல் காந்தியின் பதவியை பறித்த ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் பாசிச மோடி அரசே பதவி விலகு என்ற முழக்கமிட்டு பேரணியாக சென்றனர். பேரணியாக சென்றவர்கள் மோடி படம் கொளுத்த முயற்சித்த போது போலீசு தடுத்ததால் கிழித்து எறியப்பட்டது
சென்னை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தோழர்களை போலிசு தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது.
இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை























