
பாலஸ்தீனத்திற்கு எதிராக இன அழிப்பு யுத்தத்தில் இறங்கியுள்ள இஸ்ரேலின் யூத ஜியோனி இனவெறிக்கு எதிராக போராடி வருகின்ற சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர்களை தனிமைப்படுத்தி தாக்குதல் தொடுத்து வருகிறது அமெரிக்க மேல்நிலை வல்லரசின் தலைமையிலான பயங்கரவாத கும்பல்.
பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் குறித்தும், அதிலுள்ள மக்களின் வாழ்க்கை நிலைமை குறித்தும் ஆய்வு நட்த்த சிறப்பு பார்வையாளரான பிரான் செஸ்கா அல்பனீஸ் என்ற இத்தாலிய வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை அறிக்கைகளாக வெளியிடுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அல்பனீஸ் மீது யூத விரோதி என்று முத்திரை குத்தி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசாங்கங்களும் ஊடகங்களும் தாக்குதலை தொடுத்து வருகின்றன.
2022 ஆம் ஆண்டு மே மாதம் ஐநாவின் சிறப்பு அறிக்கையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அல்பனீஸ் காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். 1967 முதல் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இஸ்ரேலின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மையையும் வெளியுலகத்திற்கு கொண்டு வந்துள்ளார் என்பதால் அவர் மீது யூத ஜியோனிஸ்டுகள் வெறித்தனமாக தாக்குதலை கொடுத்து வருகின்றனர்.
திருமதி அல்பனீஸ், ‘UN Watch’ போன்ற அரசியல் உந்துதல் கொண்ட அமைப்புகளின் இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார், அவை அவரை மௌனமாக்குவதற்கும் அவரது மனித உரிமை செயல்பாடுகளுக்கு அச்சம் விளைவிப்பதற்கும் நச்சுப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த அமைப்புகளுக்கு ஒரு குறிக்கோள் உள்ளது: சர்வதேச விமர்சனங்கள் மற்றும் சட்டப் பொறுப்புக்கூறலில் இருந்து இஸ்ரேலிய அரசாங்கத்தை பாதுகாப்பது என்பது தான் அந்த குறிக்கோளாகும்.
படிக்க: இஸ்ரேலின் போர்க்குற்றங்களை இனியும் பொறுத்துக்கொள்ள வேண்டுமா?
இத்தகைய அச்சுறுத்தல்களைக் கடந்து உண்மையை வெளி உலகத்திற்கு அம்பலப் படுத்துகின்ற மனித உரிமை ஆர்வலர்கள் உலகம் முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்படுவதும் பாசிச பிற்போக்கு சக்திகளால், பாசிச பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்தக் கொடூரமான உலக சூழலில் துணிச்சலுடன் உயிரை பணயம் வைத்து உண்மையை பேசுகின்ற மனித உரிமை செயல்பாட்டாளர்களும் இருக்கின்றார்கள் என்பது தான் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் தளராமல் போராடுவதற்கான உந்து சக்தியாகும்.
இந்த நிலையில் அல்பனீஸ் உயிருக்கும், அவரது கருத்துக்களுக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்துகளை அம்பலப்படுத்தி 30 யூத கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து அவரது செயல்பாட்டை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
”ஒடுக்கப்படுகின்ற நாடுகளைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தை விட ஒடுக்குகின்ற நாட்டைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்படும் நாடுகளின் விடுதலைக்காக குரல் கொடுப்பதுதான் உண்மையான ஜனநாயக உணர்வாகும்” என்று முன்வைத்த தோழர் லெனினுடைய ஜனநாயக உணர்வு குறித்தக் கருத்துக்களை இத்தகைய யூத அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளதன் மூலம் உலகில் போருக்கும், இன அழிப்புக்கும், பாசிச பயங்கர வாதத்திற்கும் எதிராக போராடும் ஜனநாயக சக்திகளின் உணர்வு இன்னமும் அடங்கிப் போகவில்லை என்பதை காட்டுகிறது.
படிக்க: பாலஸ்தீன இனப்படுகொலை: பொய்களை கட்டவிழ்த்துவிடும் சியோனிஸ்டுகள்!
கீழ்கண்ட இத்தகைய அமைப்புகளின் ஜனநாயக உணர்வை மதிப்போம். சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் துணையுடன் பாலஸ்தீனத்திற்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு முடிவு கட்டுவோம்.
திருமதி.அல்பனீஸ்-க்கு ஆதரவாக கையொப்பமிட்டவர்கள்:
ஒரு வித்தியாசமான யூத குரல் (நெதர்லாந்து)
பெல்ஜியத்தில் ஆண்டிசியோனிஸ்ட் யூத கூட்டணி (பெல்ஜியம்)
உள்ளே இருந்து புறக்கணிப்பு (பாலஸ்தீனம்/இஸ்ரேல்)
டிகாலனிசர் (பெல்ஜியம்)
ஈன் ஆண்டரே ஜூட்ஸ் ஸ்டெம் (பெல்ஜியம்)
ஒரு நியாயமான அமைதிக்கான ஐரோப்பிய யூதர்கள் (ஐரோப்பா)
பாலஸ்தீனத்திற்கான ஐரோப்பிய யூதர்கள் (ஐரோப்பா)
IfNotNow டொராண்டோ (கனடா)
சுதந்திர யூத குரல்கள் (கனடா)
சர்வதேச யூத எதிர்ப்பு சியோனிஸ்ட் நெட்வொர்க் (அர்ஜென்டினா)
சர்வதேச யூத எதிர்ப்பு சியோனிஸ்ட் நெட்வொர்க் (ஸ்பெயின்)
சர்வதேச யூத எதிர்ப்பு சியோனிஸ்ட் நெட்வொர்க் (யுகே)
நிறவெறிக்கு எதிரான இஸ்ரேலியர்கள் (இஸ்ரேல்/பாலஸ்தீனம்)
அமைதிக்கான யூத அழைப்பு (லக்சம்பர்க்)
தொழிலாளர்களுக்கான யூத குரல் (யுகே)
பாலஸ்தீனியர்களுக்கான நீதிக்கான யூதர்கள் (யுகே)
பாலஸ்தீனத்திற்கான யூதர்கள் (அயர்லாந்து)
Jøder for Retfærdig Fred af 5784 (டென்மார்க்)
ரெட்ஃபெர்டிக் ஃப்ரெட் (நோர்வே) க்கான ஜொடிஸ்கே ஸ்டெம்மர்
Judeobolschewiener*innen (ஆஸ்திரியா)
ஜூடியஸ் பெலா பாஸ் இ ஜஸ்டிசா (போர்ச்சுகல்)
Jüdische Stimme für Demokratie und Gerechtigkeit in Israel/Palästina (Switzerland)
Jüdische Stimme für gerechten Frieden im Nahen Osten (ஜெர்மனி)
ஜண்ட்ஸ் அசோசியேசியோ கேடலானா டி ஜூயஸ் ஐ பாலஸ்தீனம் (ஸ்பெயின்)
MARAD, Collectif juif decolonial (சுவிட்சர்லாந்து)
நஹ்லீலி-பாலஸ்தீனத்தில் நீதிக்கான யூதர்கள் (பின்லாந்து)
டிசெடெக்! (பிரான்ஸ்)
யூனியன் டெஸ் ப்ரோகிஸ்டிஸ் ஜூஃப்ஸ் டி பெல்ஜிக் (பெல்ஜியம்)
யூனியன் ஜூவ் ஃபிரான்சைஸ் ஃபோர் லா பைக்ஸ் (பிரான்ஸ்)
ஐக்கிய யூத மக்கள் ஆணை (கனடா)
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை ஓங்குக!
மருது பாண்டியன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






