ழைத்துக் களைத்த மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் இரவு நேரத்தில் சுமார் 1:30 மணிக்கு ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஜடூரா கிராமத்திற்குள் 50 பேர் கொண்ட ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் படை நுழைகிறது. இது இந்திய ராணுவத்தில் உள்ள ஒரு படை பிரிவு.

அது ஜூன் 23 மற்றும் ஜூன் 24 ஆகிய தேதிகளுக்கு இடையிலான இரவு. கிராமத்தில் இருந்தவர்களில் 10 இளைஞர்களை சிறைபிடித்த படை அவர்களின் 5 பேரை முதுகுத்தோல் பிய்யும் வரை பெல்ட்டால் அடித்து நொறுக்குகியது.

இந்திய ராணுவத்தின் அட்டூழியங்களை கண்டு விக்கித்து போன மக்கள் விடிய விடிய விழித்திருந்த நிலையில் அடுத்த நாள் காலையில் தொழுவதற்கான நேரம் வந்துவிட்டது.

தொழுகைக்கு அழைப்பு விடும் நபரை அதாவது பாங்கு ஓதும் நபரை பிடித்து தொழுகைக்கு இடையில் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்க வேண்டும் என்றும் பாங்கு ஓதும் நபர் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லும் பொழுது அவருக்கு பின்னால் ( இராணுவம் சிறை பிடித்து இருந்த ) 10 இளைஞர்களும் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியது. அந்த மசூதியின் ஒலிபெருக்கியில் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கம் இடப்பட்டது. அத்துடன் நிற்காத ராணுவம் மசூதியை நாசப்படுத்தியது.

இதனை கண்டித்த பரூக் அப்துல்லாவின் டிவிட்டர் பதிவு

ராணுவத்தினரின் அட்டூழியங்களை கண்டு கொதித்து எழுந்த கிராமத்தினர்
ராணுவத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். அந்த பகுதியில் உள்ள அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் வந்து சமாதானப்படுத்திய பிறகு இந்திய ராணுவத்திற்கு எதிரான தங்கள் போராட்டத்தை மக்கள் நிறுத்தினர்.

இந்த சம்பவம் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா ஜம்மு காஷ்மீருக்கு வந்திருக்கும் பொழுது நடந்துள்ளது என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

புல்வாமா என்றவுடன் நமக்கு 2019 ஆண்டில் கன்வாயில் சென்ற இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 40 வீரர்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டது தான் நமது நினைவிற்கு வருகிறது.

இதையும் படியுங்கள்: புல்வாமா தாக்குதலும், பாஜகவின் பிண அரசியலும்

பி.ஜே.பி. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 40 இராணுவ வீரர்களை பலி கொடுத்ததாக மோடி–அமித்சா மீது நாடே காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இது குறித்து சொரணையற்ற ராணுவ வீரர்கள் அமித்சாவின் ஜம்மு காஷ்மீர் வருகையை சிறப்பிக்கும் வகையில் இந்து மத வெறித் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த லட்சணத்தில் தான் அமெரிக்கா சென்ற மோடி இந்தியாவில் சிறுபான்மையினர் மீது ஒடுக்கு முறைகள் நடப்பதில்லை என்றும் ஜனநாயகம் என்பது இந்தியர்களின் டிஎன்ஏ-விலேயே உள்ளதாகவும் பொளந்து கட்டிக் கொண்டிருக்கிறார்.

இதை பார்க்கும் பொழுது காரி துப்ப வேண்டும் என்று நினைக்கும் மக்கள் யார் மீது முதலில் துப்பவேண்டும் என்று முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள் என்பது உறுதி.

ஆனால் காவி பாசிசத்தை முறியடிக்க வேண்டும் என்று விரும்பும் மக்கள் காவி பயங்கரவாதிகளை மட்டுமல்ல அவர்களுக்கு ஆதரவான ராணுவத்தினரையும் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும் என்பதில் ஐயம் கொள்ள மாட்டார்கள் என்பதும் உறுதி.

  • பாலன்
    செய்தி ஆதாரம்: The wire

https://m.thewire.in/article/rights/kashmir-army-jai-shri-ram-mosque-amit-shah#:~:text=Rights,CMs%20Demand%20Probe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here