2024 – நாடாளுமன்றத் தேர்தல்!

மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன?

• மோடியின் பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துவோம்!

• I.N.D.I.A – கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்!

சமூகத்தில் நிலவும், ஏழை – பணக்காரன், தொழிலாளி – முதலாளி, வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு, பட்டினிச்சாவு, லஞ்ச – ஊழல், விவசாயிகள் தற்கொலை…… இவை போன்ற எண்ணற்ற பிரச்சனைகளுக்கு, நடைமுறையில் உள்ள ‘வாக்குச் சீட்டு ஜனநாயகம்’ மூலம் நிச்சயமாக நிரந்தரத் தீர்வினைக் காண முடியாததுதான். அதற்கு சமூக ரீதியான – தலை குப்புறப் புரட்டிப்போடும் உழைக்கும் மக்களின் வர்க்க ரீதியான சமூக-அறிவியல்-சோசலிசப் புரட்சி முன் தேவையாயுள்ளது. ஆனால், அதனை சாத்தியப்படுத்துவதற்கான புரட்சிகர இயக்கங்களின் தேய்மானமும், தற்போது நிலவும் சமூக சூழலும் உடனடித் தீர்வுக்கு வாய்பின்றியே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதுவரை….. !?

2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது நடந்தது என்ன?

வீணாய்ப்போன அன்னா ஹசாரே என்ற கிழவனும், அன்று அவனுக்குப் பக்கவாத்தியம் வாசித்த அரவிந்த் கெஜ்ரிவாலும் (இன்று இவர் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரத்தில் இருக்கிறார்) காங்கிரசுக்கு எதிராக இணைந்து 2G அலைக்கற்றை ஊழல் 1,75,000,0000000 (ஒரு இலட்சத்தி எழுபத்தி ஐயாயிரம் கோடி) ரூபாய் நடந்துவிட்டதாகப் பெரும் புரளியை கிளப்பிவிட்டார்கள். இதுதான் துவக்கப் புள்ளி. ஆம்! இந்தப் புரளியையும் அத்துடன் சேர்ந்து சில புரூடாக்களையும் இணைத்துக் கொண்டு அப்படியே லட்டுபோல் கையிலெடுத்துக் கொண்டு நாடு முழுவதும் பொய் பிரச்சாரம் மேற்கொண்டது பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் – சங்பாிவார் – மோடி கும்பல். தொடர்ந்து அன்றைய ஒன்றிய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி MP கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த வழக்கு முற்றிலும் பொய் வழக்கு என்பதாக நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் சுமார் 1½ ஆண்டுகளுக்கு பிறகு மேற்கண்ட இருவரும் விடுவிக்கப்பட்டனர். வழக்கு தொடுத்தோரும், பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சங்கிகளும் குற்றத்தை துளியளவுகூட நிரூபிக்க இயலவில்லை. இதற்கு உடந்தையாயிருந்த ஓய்வு பெற்ற சில அதிகாரிகளும், இவ்வழக்கு மிகைப்படுத்தப்பட்ட பொய் வழக்குத் தான் என பின்னர் வாக்குமூலம் கொடுத்தனர். அதற்காக காங்கிரஸ் ஆட்சியில் ஊழலே இல்லை எனவும் கூறுவதற்கில்லை. அது தனிக் கதை. இப்போது அதனை விவாதிப்பது பொறுத்தமற்றது

ஆனால், அதற்குள் 2014 தேர்தல் நடந்தது ”எங்கும், எதிலும், எத்தருணத்திலும் நாடு முழுவதும் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும், வெளிநாட்டில் பெரும் முதலாளிகளாலும், அரசியல்வாதிகளாலும் பதுக்கப்பட்டுள்ள பல இலட்சம் கோடி திருட்டுப் பணத்தை மீட்டு, இந்தியாவில் உள்ள மக்களின் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15,00,000 போடப்படும்; பண மதிப்பிழப்பு மூலம் கருப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்; ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்; அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் வெகுவாக குறைக்கப்படும்; பெட்ரோல் – டீசல் – கேஸ் இவற்றின் விலைகள் குறைக்கப்படும்; தேசிய நதிகள் இணைக்கப்படும்; விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு தகுந்த ஆதார விலை வழங்கப்படும்; அனைவருக்கும் கல்வி விஸ்தாிக்கப்படும்; அனைத்து மொழி உரிமைகளும் பாதுகாக்கப்படும்; அனைத்து மாநிலங்களிலும் AIMS மருத்துவமனைகள் நிறுவப்படும்; பொதுத்துறைகள் பாதுகாக்கப்படும்; அனைத்து வகையிலும் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி பாய்ச்சல் வேகத்தில் முன்னேற்றமடையும்; 2020 -க்குள் நாடு உலகின் மாபெரும் வல்லரசாகும்”……….. இது போன்ற எண்ணற்ற புரூடா வாக்குறுதிகளை பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் – சங்பாிவார் – மோடி கும்பல் மக்களுக்கு அளித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் “50 நாட்கள் கொடுங்கள் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், தூக்கில் தொங்குவேன்” என்றார் மோடி.

ஆனால், இன்று நிலைமை என்ன? மேற்கண்ட எந்த வாக்குறுதிகளையும் மோடி நிறைவேற்றவில்லை. மாறாக அனைத்து வாக்குறுதிகளும் எதிர்மறையில் வளர்ச்சி அடைந்து, அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைக்கின்றன. மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக பறிபோய்விட்டன.

பாசிச மோடி ஆட்சியில் 10 ஆண்டுகால ‘சாதனை’களாகக் கீழ்க்கண்டவாறு சிலவற்றைப் பட்டியலிடலாம்:

5G அலைக்கற்றையில் பல இலட்சம் கோடி ஊழல்.

PM Care Fund -ல் மாபெரும் ஊழல்.

C.A.G அறிக்கையின்படி ரூபாய் 7,50,000,0000000 (ரூபாய் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி) மெகா ஊழல்.

தேர்தல் பத்திர முறைகேட்டில் உலகமே காரி உமிழும் வகையில் பல்லாயிரம் கோடி ஊழல்.

ஏர்லைன்ஸ், துறைமுகங்கள் உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தூக்கிக் கொடுத்ததில் மாபெரும் ஊழல்.

கோடிக் கணக்கில் வங்கியில் கடன் வாங்கிய மோடியின் நண்பர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு உதவிய மோடியின் ஊழல்.

ரபேல் விமான கொள்முதலில் மாபெரும் ஊழல்.

மாபெரும் வியாபம் ஊழல்.

மோடியின் சுய விளம்பரத்திற்காகப் பல்லாயிரம் கோடி ஊழல்.

முக்கியமாக வெளிநாடுகளில் நிலக்காிச் சுரங்கம், துறைமுகம் இன்னும் பல தொழில்கள் துவங்க மோடியின் உற்ற நண்பர்களான அதானி – அம்பானிகளுக்கு உற்ற துணையாய் இருந்து மாபெரும் ஊழல்.

உலகின் முதல் வரிசைப் பணக்காரர்களாக அதானி – அம்பானி உயர்ந்து நிற்க இந்திய நாட்டு மக்களின் வரிப்பணத்தையும், வங்கி சேமிப்பு பணத்தையும், இந்திய நாட்டு வளங்களையும் தாரை வார்த்ததில் மாபெரும் ஊழல்.

MLA -க்களை பல்லாயிரம் கோடிகளில் விலைக்கு வாங்கி பல்வேறு மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு செய்ததில் மாபெரும் ஊழல்.

சிறு-சிறு கட்சிகளை மொத்தமாகவே பா.ஜ.க -வுடன் இணைத்திட (தமிழ்நாட்டில் சரத்குமார்-ராதிகாவின் ச.ம.க -வைப் போல) பலநூறு கோடி ஊழல்.

ED, IT, CBI மூலம் எதிர்கட்சியினரை மட்டுமே மிரட்டி உருட்டி பா.ஜ.க -வுக்கு ஆள் பிடிப்பதில் மாபெரும் ஊழல்.

அன்றாடம் வரும் ஊடகச் செய்திகளில், அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. காரர்களின் ஊழல் சாம்ராஜியம் தலைவிரித்தாடுகிறது. ஆனால் இங்கெல்லாம் ED, IT, CBI துளிகூட கண்டு கொள்வதில்லை.

ED, IT, CBI மூலம் ஊழல்வாதிகள் என கைதானவர்கள், FIR வழக்குப் பதிவுப்பெற்றவர்கள் பா.ஜ.க -வில் இணைந்தவுடன் அந்த வழக்குகள் அனைத்தையும் B.J.P வாஷிங் மிஷின் மூலம் புஷ்வானமாக்கியதில் மாபெரும் ஊழல். இன்று பா.ஜ.க. கூட்டணியில் மிக முக்கிய அங்கம் வகிப்பது ED, IT, CBI மற்றும் தேர்தல் ஆணையம் என்பது நாடறிந்த உண்மையாயிற்று.

இதையும் படியுங்கள்:

இன்று நாட்டின் மொத்தக் கடன் 155 இலட்சம் கோடியாக உயர்வதற்கு காரணமான மோடியின் மாபெரும் ஊழல். இதன் மூலம் இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் 2,50,000 (இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம்) ரூபாய் கடன் பட்டிருக்கின்றான்……. இவ்வாறு மோடியின் ”ஊழல் சாதனை” விவரங்களைப் பட்டியலிட்டால் மிக நீளும்; இடமும் போதாது.

பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் – சங்பாிவார் கும்பலின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுக் கொடுமைகள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் சிலவற்றைக் காண்போம்:

1) மணிப்பூரில் சங்பாிவார் கூட்டம் 2023 மே மாதத்தில் இரண்டு இளம் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அடித்து இழுத்து சென்று, பாலியல் வன்புணர்ச்சி செய்ததை இன்று நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் பதைபதைக்கிறது.  இவர்களை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தால் நாடு என்னவாகும் என்பதை எண்ணிப் பாருங்கள்!

இதையும் படியுங்கள்:

மேலும், எத்தனை ஆலயங்களை இடித்தார்கள்., எத்தனை நூறு பேர்களை படுகொலை செய்தார்கள்., எத்தனை இளம் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கினார்கள்., மலைவாழ் மக்கள் எத்தனை ஆயிரம் பேர் குடிபெயர்ந்து வேற்றிடங்களுக்குள்ளும், முகாம்களுக்குள்ளும் அடைபட்டுக் கிடக்கின்றனர். இத்தனைக்கும் மணிப்பூரிலும், ஒன்றியத்திலும் பா.ஜ.க ஆட்சிதான்! வாயைத் திறந்தாரா பிரதமர் மோடி? இன்றுவரை மணிப்பூரை எட்டிப்பார்த்தாரா? எவ்வளவு பொிய கொடுமை? எவ்வளவு பொிய அக்கிரமம்?

2) குஜராத்தில் பில்கிஸ்பானு என்ற நிறைமாத கர்ப்பிணியின் சிறு பாலகனை அந்த தாயின் கண் எதிரிலேயே காலைப் பிடித்து தலையைப் பெருங்கல்லில் அடித்து கொலை செய்தார்கள் சங்கிகள்; அந்த கர்ப்பிணித் தாயையும் கூட்டுப் பலாத்காரம் செய்தார்கள் அந்த படுபாதக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காலிகள். இதில் சம்மந்தப்பட்டதாக கூறும் 11 கொலைக் குற்றவாளிகளை சில ஆண்டுகள் சிறையில் இருக்கச் செய்துவிட்டு அவர்கள் எல்லாம் புனிதர்கள் என்று விடுதலை செய்தது இழிகுணம் கொண்ட குஜராத்தின் பா.ஜ.க அரசு! ஆனால், பில்கிஸ்பானு என்ற தாய் டெல்லி உச்சநீதிமன்றம் வரை சென்று மேல்முறையீடு செய்ததில் உச்சநீதிமன்றம், ”குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறு! அந்த 11 குற்றவாளிகளும் ஒரு வாரத்திற்குள் சரணடைய வேண்டும்!” என உத்தரவிட்டது. ஓரிருவர் மட்டும் சரணடைந்தனர். மற்றவர்களை பா.ஜ.க அரசு இன்னும் தேடிக்கொண்டிருக்கிறதாம்.

இதையும் படியுங்கள்:

3) ஜம்மு காஷ்மீரில் 8 வயது இஸ்லாமியச் சிறுமியை கோயில் கருவறைக்குள்ளேயே வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தார்கள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – சங்பாிவார் காலிகள். இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள முடியுமா?

4) டெல்லியில் நாட்டுக்கு பெருமை சேர்த்த – ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகளை பா.ஜ.க MP ஒருவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியபோது அதற்கு எதிராக டெல்லியில் போராடிய மல்யுத்த வீராங்கனைகளை கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டும், தண்ணீர்ப் பீய்ச்சி அடிக்கப்பட்டும், தடியடி நடத்தப்பட்டும் கொடுமைப்படுத்தியது மோடி அரசு! ஆனால், குற்றவாளியான பா.ஜ.க MP -யோ எந்த குற்ற உணர்வுமின்றி மோடியின் அரவணைப்பில் பதவி இழக்காமல் இன்றுவரை உல்லாசமாக வலம் வந்து கொண்டிருக்கின்றான்.

5) உத்திரப் பிரதேசத்திலும், மத்திய பிரதேசத்திலும் இன்னும் பல வட மாநிலங்களில் தலித்துகள் பொதுக் குளத்தில் குளித்தார்கள்., தண்ணீர் குடித்தார்கள்., என்பதற்காகவே மேல்சாதி சங்கிக் கூட்டம் ஆண்-பெண் என பலரையும் அடித்துத் துவைத்தார்கள்! கீழே போட்டு மிதித்தார்கள்; சிலரை கொலையும் செய்தார்கள்! இந்த சங்கிகளின் அகராதிப்படி இந்த தலித்துகளும் ’இந்துக்களே’ என்பது முக்கியமான விடயம்.

6) மாட்டுக்கறி வைத்திருந்ததாக இஸ்லாமியர் பலரையும், தலித்துகள் பலரையும் கொன்று குவித்தார்கள்.

7) ஓடும் இரயிலில் இஸ்லாமியரை தேடிப் பிடித்து ஒரு ஆர்.எஸ்.எஸ். இராணுவ வீரன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

8) பஞ்சாப், அரியானா, உ.பி உட்பட பல்வேறு மாநில விவசாயிகள் தமது விலை பொருட்களுக்கான ஆதார விலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை டிராக்டர்கள் பேரணி மூலமாக முற்றுகையிட முயன்றபோது டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க சாலைகளில் ஆணிகளைப் பதித்தும், தடுப்புகள் வைத்து சாலைகளை மறித்தும், போராடும் விவசாயிகள்மீது அடக்குமுறைகளை ஏவியும், பலரை கொலை செய்தும் சதிராட்டம் போட்டது மோடி அரசு!

9) நாடு முழுவதும் திட்டமிட்டு மதக்கலவரங்கள், சாதிக் கலவரங்களை தூண்டுவிடுகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – சங்பாிவார் காலிகள். அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது.

10) மசூதிகள், தேவாலயங்களைத் திட்டமிட்டே இடித்துத் தள்ளுகிறது இந்த வானரக் கூட்டம்.

11) ராமன் பெயராலும், இந்துத்துவா பெயராலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக போர் தொடுக்கிறது பாசிச மோடி அரசு. ஆனால், உண்மையில் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல., அறுதிப் பெரும்பான்மையினரான ஒட்டுமொத்த இந்து மக்களுக்கும் மிகப் பெரும் விரோதி இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – சங்பாிவார் காலிகள் கூட்டம்தான். இதை நாட்டு மக்கள் அனைவரும் உணர வேண்டும்.

12) மத வேறுபாடுளுக்கு அப்பால் அண்ணன் தம்பியாக, மாமன் மச்சானாக, அக்கால் தங்கையாக உறவு கொண்டு பழகும் பல்வேறு வித மக்களை அப்படி ஒரு உறவே வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கங்கனம் கட்டிக்கொண்டு மக்களைப் பிளவுபடுத்தி, வெறுப்பு அரசியல் உணர்வூட்டி திட்டமிட்டே கலவரங்களை நடத்துகிறது பா.ஜ.க அரசு!

13) ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – சங்பாிவார் கொலைகாரக் கூட்டம், முற்போக்காளர்களான தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் முதலான சமூக செயற்பாட்டாளர்களை திட்டமிட்டே சுட்டுப் பொசுக்கியது. இன்னும் பல முற்போக்காளர்கள் சிறையில் வாடுகின்றனர்; வதைபடுகின்றனர். அனைவருமே மோடி வகையறாவின் அகராதிப்படி இந்துக்கள்தான். ஆனால், அவர்கள் இந்துத்துவா என்ற மதவெறியை அம்பலப்படுத்தியமைக்காகவும், மோடியின் மக்கள் விரோத பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து அம்பலப்படுத்தியமைக்காகவுமே இத்துன்பங்களுக்கு இரையாகினர்!

இன்னும் சில புள்ளி விவரங்கள் உங்களுக்காக:

கொரோனா பெறுந்தொற்றுக் காலத்தில் நாட்டு மக்களை விளக்குப் பிடிக்கவும், மணி அடிக்கவும், வீட்டு வாசலில் நின்று ”GO கொரோனா… GO கொரோனா…” என்று தட்டேந்தி ஒலி எழுப்பவும் ஆணையிட்டார் இந்தியப் பிரதமர் ‘அறிவியல் மாமேதை’ மோடி!

அனைத்து வாகனங்களையும் முடக்கி, உழைக்கும் மக்கள் பலநூறு மைல்கள் குழந்தைகளுடனும், முதியவர்களுடனும், சுமைகளுடனும் சுட்டெறிக்கும் வெயிலில் நடந்தே தமது சொந்த ஊர் சென்றனர். இதில் பலர் போகின்ற வழியேலேயே மாண்டனர்.

விலைவாசி விஷம் போல் ஏறுகிறது.

வேலையில்லாத் திண்டாட்டம் பெறுகுகிறது.

அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் அனுபவித்து வந்த எண்ணற்ற உரிமைகளை – சலுகைகளை பறித்தெடுத்தது மோடி அரசு.

தொழிலாளர் – விவசாயிகள் உரிமைகளையும் பறித்தெடுத்தது மோடி அரசு.

மாநில உரிமைகளை பறிப்பதோடு, நிதிப் பங்கீட்டில் சமமான பங்கீடு இன்றி பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு வாரி வழங்கியும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அற்பசொற்பமாகவும் நிதி வழங்குகிறது மோடி அரசு.

போிடர் காலங்களில் நாடு சுற்றும் மோடி, தமது சொந்த மாநிலம் என்றால் ஓடோடி சென்று 1000 கோடிகளை அள்ளித் தருகிறார். எதிர்கட்சி மாநிலம் என்றால் போிடர் பாதிப்புகளை நோில் கூட பார்வையிடுவதில்லை; நிதியும் தருவதில்லை.

மோடிக்கு எதிராக வாயைத் திறந்தாலே ED, IT, CBI -ஐ ஏவி எதிர்க் கட்சிகளை வேட்டையாடி சிறையில் தள்ளுகிறது மோடி அரசு.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்விகள் எழுப்ப இயலவில்லை. ஒரே சமயத்தில் 141 எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து வெளியேற்றிவிட்டு, அவசர அவசரமாக தொழிலாளர் விரோத சட்டங்கள் உட்பட பல மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றிக் கொண்டது மோடியின் பாசிச அரசு.

ED, IT, CBI -க்கு பா.ஜ.க -வின் ஊழல்வாதிகள் கண்ணுக்கே படுவதில்லை. அவர்கள் அனைவரும் உத்தமபுத்திரர்களா என்ன?

ஒரே நாடு – ஒரே தேர்தல் – ஒரே மதம் – ஒரே மொழி – ஒரே கலாச்சாரம் – ஒரே அடையாள அட்டை – ஒரே கல்வி முறை என்பது மட்டுமின்றி, நீட் திணிப்பு, இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு……. இப்படி எல்லாவற்றையுமே ஒற்றையாக ஆக்கத் துடிக்கிறது பாசிச மோடி கும்பல்.

எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து எதிர் ஆட்சி நடத்துகிறது பாசிச மோடி அரசு.

இதன்மூலம் ஹிட்லர் – முசோலினி பாணியில் ஒற்றை சர்வாதிகாரத்தை, பாசிச – நாசிசத்தை நிறுவத் துடிக்கிறது மோடி கும்பல்.

அரசமைப்பு சட்டத்தையே தூக்கி வீசத் தயாராகிவிட்டது மோடி கும்பல்.

இனி மனுஸ்மிரிதிதான் அரசியல் சட்டம்; சனதனம்தான் ஒரே கலாச்சாரம். நாட்டை 150 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்கிறது மோடி அரசு. இனி குலகல்வி திட்டம்தான் நடைமுறையில் இருக்கும்.

பாராளுமன்ற புதிய கட்டிடத் திறப்புவிழாவில் பங்கேற்க நாட்டின் முதல் குடிமகளான திரெளபதி முர்மு என்ற குடியரசு தலைவருக்கே அழைப்பு இல்லை. அதனால், அவர் அதில் பங்கேற்கவும் இல்லை. காரணம், அவர் பழங்குடியினர், விதவை என்பதுதான்! மற்றொருபுறம் காவி உடை அணிந்த சாமியார் கூட்டமும் அரைகுறை ஆடைப் புகழ் நடிகை கங்கனா உட்பட எண்ணற்ற நடிகைகள் பட்டாளம் பாராளுமன்ற கட்டிடத்தில் நிரம்பியிருந்தார்கள்.

ஆசான் கார்ல் மார்க்ஸ் அவரகளை இச்சமயம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. ஆம்! அவர் பல்துறைகளில் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற பின், 1843 லேயே பெர்லின் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அப்படிப்பட்ட பட்டங்களை பெற்றமைக்காக தம்மை அவர் ஒருபோதும் பெருமைபடுத்திக் கொண்டதில்லை. தம் பெயருக்கு முன்னரும், பின்னரும் அந்த பட்டங்களை ஒருபோதும் பயன்படுத்திக் கொண்டதில்லை. அவற்றிற்கு அப்படி ஒரு சிறப்பான மதிப்பு இருப்பதாக அவர் உணர்ந்து கூட பார்த்ததில்லை. ஆனால், அவர் ஒரு சமூகப் பொருளாதாரத்தில் மாபெரும் விஞ்ஞானி. உலகப் பாட்டாளி வர்கத்தின் விடுதலைக்காக மாபெரும் தத்துவத்தை தமது உற்ற தோழன் பிடெரிக் எங்கெல்சுடன் இணைந்து மாபெரும் இயக்கவியல் பொருள் முதல்வாத தத்துவத்தையும், வரலாற்றியல் பொருள் முதல்வாத தத்துவத்தையும் படைத்துச் சென்றார். வறுமையின் காரணமாக குடிசையில் வாழ்ந்த அவர் தமது 7 பிள்ளைகளில் நால்வரை சாககொடுத்தார். தனக்கு முன்னரேயே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1881 -ல் தனது மனைவி ஜென்னியைப் பறிகொடுத்தார். உலக பாட்டாளிகள் என்றென்றும் அவரது மகத்தான புரட்சிகரப் பணிகளையும், பங்களிப்பையும் மறக்கவே முடியாது! அவர் மனைவியின் இறப்பிறகு அவர் வாழ்ந்த இரண்டு ஆண்டுகளும், இருந்தகாலம் அல்ல – இறந்தகாலமே! கடைசியில், அவர் 1883 -ல் தமது 65 -வது வயதில் சிந்திப்பதை நிறுத்தி, கண் மூடினார்.

நாடு இன்று போிருளை எதிர்நோக்கியுள்ள நிலையில் சில மெத்தப்படித்த ‘மேதாவிகள்’ துளியும் வெட்கமின்றி தம்மை மாபெரும் ‘ஆய்வாளர்கள்’ எனத் சுயத்தம்பட்டம் அடித்துக்கொண்டு பெரும் ’பட்டப்படிப்புகளை’ முடித்தவர்கள் எனப் பீற்றிக்கொண்டு பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகாிக்கிறார்கள். முகத்தை பட்டவர்த்தனமாக வீடியோ கேமரா முன் காண்பித்துக்கொண்டு அர்த்தமற்ற வாதங்களை அருவருப்பாக முன்வைக்கிறார்கள்; பேட்டியும் கொடுக்கிறார்கள்! இவர்கள் ஒரு காலத்தில் புரட்சி வேதாந்தம் பேசியவர்கள். இப்போது இவர்கள் புது வேடம் தாித்துள்ளனர். இது காலத்தின் கோலம்! அசிங்கம்! ஆபாசம்! கேவலம்!

ஓன்று மட்டும் உறுதி! இன்று உழைக்கும் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் சூழலில், மக்கள் எழுச்சி நாடு முழுவதும் மோடிக்கு எதிராக எதிரொலிக்கிறது. உறுதியாக மோடியின் பாசிச ஆட்சி வீழ்த்தப்படும் என்பது திண்ணம்!

ஒரு வேளை மோடி வென்றால் EVM வாக்கு இயந்திர மோசடியும், பல தில்லு முல்லுகளும் நடந்தேறி உள்ளன என்பதை உறுதிப்படுத்தலாம். இதனை சில எலக்ட்ரானிக்ஸ் வல்லுநர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். இதனால்தான் பல்வேறு மேலை நாடுகளில் வாக்குச் சீட்டுக்கள் மூலம் தேர்தல்கள் நடக்கின்றன. சில நாட்களுக்கு முன் நடந்த தென்கொரியத் தேர்தல் கூட வாக்குச் சீட்டு முறையில் தான் நடந்தேறியுள்ளது.

தேர்தல் ஆணையரகத்தில் சிலர் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார்கள். அதற்குப் பதிலாகப் புதிதாக நியமிக்கப்பட்ட இருவரில் ஒருவர் அயோத்தி ராமர் கோவிலுக்குப் பொறுப்பானவராய் இருந்து பணியாற்றியவர் என்றும், மற்றொருவர் இந்துத்துவவாதி என்றும் அறியப்படுகிறது.

இவ்வளவு கடுமையான சூழலில் தேர்தலை சந்திக்கிறோம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் 2024 தேர்தலே கடைசித் தேர்தலாக அமையும்! எது எப்படியே குறைந்தபட்ச ஜனநாயகம் இருந்தால் தான் பேச்சுரிமை, எழுத்துரிமை, ஊடக உரிமை, கூட்டம் கூடும் உரிமை, போராடும் உரிமை இருக்கும். ஆனால், ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படுமாயின் நாட்டு மக்களும் சேர்ந்தே புதைக்கப்படுவார்கள்!

I.N.D.I.A கூட்டணி மீது நமக்கு எவ்வளவுதான் அபிப்பிராயப் பேதம் இருந்தாலும் இன்றைய கடுமையான, கொடுமையான சூழலில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்று பார்க்கவேண்டி உள்ளது. சர்வாதிகாரம் – பாசிசம் – நாசிசம் இவற்றின் மொத்த உருவமாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – சங்பாிவார் – மோடி மதவெறிக் கூட்டம் திகழ்கிறது.

எனவே,

• மோடியின் பாசிச சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுக் கட்டுவோம்!

• I.N.D.I.A கூட்டணியை ஆதாிப்போம்!

• I.N.D.I.A கூட்டணிக்கு வாக்களிப்போம்!

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here