
நாடு முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் குறித்த வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission – UGC) தயாரித்துள்ளது. 21 பக்கங்கள் கொண்ட அந்த வரைவு அறிக்கை ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கைக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் வரக்கூடிய கல்வியாண்டில் இது அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வரைவு அறிக்கையில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission – UGC) திட்டங்களில் இருந்து நீக்கப்படும் என்றும், திட்டங்களுக்கான நிதியும் வழங்கப்படாது, பல்கலைக்கழக மானிய குழு அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று UGC அறிவித்துள்ளது. பல்கலைகழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தாத மாநிலங்களின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இனிமேல் வழங்கப்படும் பட்டங்கள், பட்டயங்கள் செல்லாததாகிவிடும் என்ற ஒரு கொடூரத் தாக்குதலைத் அடுத்த கட்டமாக தொடுத்துள்ளனர் பாஜக பாசிஸ்டுகள்.

குருகுலக் கல்வி என்ற பெயரில் பார்ப்பனர்களும், சத்ரியர்களுக்கு மட்டுமே கிடைத்துவந்த கல்வியை அனைவருக்குமானதாக பிரிட்டிஷார் மாற்றியமைத்தனர். சாதிவேறுபாடில்லாமல் கிடைத்த கல்வியால் அனைவரும் படிப்படியாக கல்வியறிவு பெற்று சமூகத்தில் உயருவதை, தங்களின் இருப்பை காலியாக்குவதைப் பொறுத்துக்கொள்ளாத பார்ப்பனர்கள் பிரிட்டிஷார் கொண்டுவந்த அனைவருக்குமான கல்வி என்பதை தகர்த்தெறிய காலம்பார்த்து வந்தனர். ஒன்றியத்தில் அவர்களின் கட்சியான பாசிச பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் தங்களின் நீண்டநாள் இலட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள முன்னாள் ISRO தலைவரான கஸ்தூரிரங்கன் என்ற பார்ப்பனரின் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் இன்னும் முழுமையாக இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையின் கூறுகள் “எண்ணும் எழுத்தும், இல்லம்தேடிக் கல்வி, நம்ம ஸ்கூல்” என்று பெயர்மாற்றப்பட்டு நரித்தனமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
புதிய மொந்தையில் பழைய கள்ளாக புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பழைய மனுதர்ம காலத்திலான கல்விக் கொள்கையை அதாவது பார்ப்பனர்களுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே கல்வி என்பதை நடைமுறைப்படுத்தி நாட்டின் பெரும்பாலான உழைக்கும் மக்களை அடிப்படை உரிமையாகிய கல்வி பெறுவதிலிருந்து ஒதுக்கி வைக்கும் குரூரத் திட்டத்தை செயல்படுத்திடத் துடிக்கின்றனர். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும், தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் இன்னும் முழுமையாக இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையின் கூறுகள் “எண்ணும் எழுத்தும், இல்லம்தேடிக் கல்வி, நம்ம ஸ்கூல்” என்று பெயர்மாற்றப்பட்டு நரித்தனமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இப்படி பகுதி பகுதியாக நடைமுறைப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளாத பாசிஸ்டுகள் தற்போது அதிரடியாக மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
படிக்க:
♦ புதிய கல்விக் கொள்கையை கிழித்தெறிவோம்! கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரப் போராடுவோம்!
♦ புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் தொடர் கட்டுரை!
தங்கள் வழிக்கு வராத மாநிலங்களை உருட்டியும், மிரட்டியும், நிதி நெருக்கடியும் ஏற்படுத்தி பல வழிகளிலும் பணியவைக்க நாள்தோறும் திட்டமிடும் இந்த பாசிச கும்பல் ஏற்கனவே புதிய கல்விக்கொள்கையின் ஒரு கூறான மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாததால் அனைவருக்கும் கட்டாயக்கல்வி திட்டத்துக்காக தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய சுமார் ரூ.2,500 கோடி நிதியை நிலுவை வைத்து கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
புதிய கல்விகொள்கையை அமல்படுத்தும் UGC விதிமுறைகளை கண்டிப்பாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்கள், கல்லூரிகள் ஏற்கவேண்டும் என வெளிப்படையாக மிரட்டியுள்ளது. இதன்மூலம் இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஈழ விடுதலைப் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், NEET எதிர்ப்புப் போராட்டம் என்ற நீண்ட நெடிய போராட்ட மரபைக் கொண்டுள்ள தமிழக மாணவர்-இளைஞர்களுக்கு மீண்டுமொரு போராட்டக்களத்தை ஏற்படுத்தியுள்ளனர் காவி பாசிஸ்டுகள். இம்முறை தனித்தனியான கோரிக்கைகளுக்கு அல்ல ஒட்டுமொத்தமாக கார்ப்போரேட்-காவி பாசிஸ்டுகளை நாட்டைவிட்டே விரட்டியடிக்கும் போராட்டமாக மாற்றியமைப்போம் வாருங்கள் மாணவர்களே.
- ஜூலியஸ்