தோழர் மனோகரன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!

திருவெண்ணைநல்லூர் வட்டாரத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி துவங்கிய காலத்தில் தோழர் மனோகரனின் தந்தை அமைப்பில் இணைந்தார்.

தோழர் மனோகரன் தனது சிறு வயது முதல் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களுடன் இணைந்து பணியாற்றி வந்தார்.

திருவெண்ணைநல்லூர் வட்டாரத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி நடத்திய அனைத்து போராட்டங்களிலும் முன்னணி செயல் வீரராக திகழ்ந்தார்.

கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு கொரானா பாதிப்பை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய அரசு பரிந்துரைத்த ஊசியை போட்டுக் கொண்டவுடன் எதிர் விளைவு ஏற்பட்டு சென்னை மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டும் மரணம் அடைந்தார்.

அவரது ஓராண்டு நினைவு தினத்தில் கார்ப்பரேட்- காவி பாசிசத்திற்கு எதிராக விவசாயிகளை அமைப்பாக திரட்டுவதற்கும், அரசியல் படையுடன் இணைந்து விவசாயிகளின் படையை கட்டுவதற்கும் உறுதி ஏற்கிறோம்.

விவசாயிகள் விடுதலை முன்னணி.
விழுப்புரம் மாவட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here