தமிழ்நாட்டில் துணை வேந்தர்கள் நியமனம்: தடைக்குத்  தடை விதித்தது உச்ச நீதிமன்றம்...!
உயர் நீதிமன்ற தடை உத்தரவை நீக்க கோரி தமிழ்நாடு அரசு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை மீண்டும் ஆரம்பம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் தெளிவாக விசாரிக்க வேண்டும் என்று ஒரு கொட்டுக் கொட்டி, அதன் தடை உத்தரவிற்கு தடை  விதித்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

மிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் பல்வேறு துணைவேந்தர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டின் முதலமைச்சரரையே வேந்தராக நியமித்து, துணைவேந்தர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சரே உரிய குழுக்களை அமைத்து நியமனம் செய்யலாம் என்றதொரு அரிய தீர்ப்பினை ஏற்கனவே வழங்கி இருந்தது. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இது தொடர்பான சட்டம் இயற்றப்பட்டது.

அதன் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க தேர்வு குழுக்களை அமைத்து அரசிதழில் வெளியிட்டது.

சங்கிகளால் இதனை ஜீரணிக்க முடியுமா…?

தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க துணைவேந்தர்களை நியமிக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டதை ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ பாசிசச் சங்கிக் கும்பலால் ஜீரணிக்க முடியவில்லை. உடனே சதி திட்டம் ஒன்றை திட்டியது. அதன்படி துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட பாஜக செயலாளர் வெங்கடேசனைத் தேர்வு செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஏற்பாடு செய்தது இக்கேடுகெட்ட கும்பல்.

அதுவும் எப்படி தெரியுமா? திருநெல்வேலி மாவட்ட வெங்கடசனுக்கு உரிய நீதிமன்ற எல்கையான (Jurisdiction) மதுரை அவசரகால அமர்வை விட்டுவிட்டு அவசர காலத்திற்கு மட்டுமே உருவாக்கப்பட்ட விடுமுறை கால சென்னை உயர்நீதி மன்ற  அமர்வில் அவசரமற்ற இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

FORUM SHOPING OR BENCH HUNTING – என்பதுதான் என்ன?

அதாவது நீதிமன்றத்தில் ஒரு நபர் ஒரு வழக்கை தாக்கல் செய்ய முற்படுகையில், ஒரு குறிப்பிட்ட நீதிபதி தமக்கு முழுக்க சாதகமாக செயல்படுவார் தீர்ப்பளிப்பார் எனக் கருதி அந்த நீதிபதியின் அமர்வில் மட்டும் வழக்கு, விசாரணைக்கு வருமாறு செயல்படும் முறைக்குத்  தான் FORUM SHOPING OR BENCH HUNTING என்று பெயர். இந்த நெறிமுறையற்ற – அருவருக்கத் தகுந்த முறைமைகள் நீதிமன்றத்தில் நடைமுறைப்படுத்தவே கூடாது என பல உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்களில் சுட்டிக்காட்டப்பட்டும் அந்த இழிநிலை தொடர்ந்த வண்ணமே உள்ளன.

அந்த வகையில் தான் சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வில் ‘வீற்றிருந்த’ நீதிபதி GRS – லட்சுமி நாராயணன் அமர்வில் வெங்கடேசன் தமிழ்நாடு அரசாங்கத்தின் உத்தரவிற்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்தார்.

படிக்க: 

 அரசியலமைப்புச் சட்ட விரோதமாக நடக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக வரிந்து கட்டி நிற்கும் உச்ச நீதிமன்றம்!

 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பு வீச்சும்! சனாதன பயங்கரவாதத்தின் உண்மை முகமும்!

இவ் வழக்கை விசாரித்த நீதிபதி GRS,அட்வகேட் ஜெனரல் ராமன், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் கெஞ்சிக் கூத்தாடியும், அரசுத் தரப்பிற்கு ஒரு நாள் கூட அவகாசம் தர மறுத்து ஒரே நாளிலேயே மனுதாரர் பாஜக திருநெல்வேலி மாவட்ட செயலாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக, ஏன் ஆளுநர் RN. ரவிக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசின் உத்தரவிற்குத் தடை உத்தரவு பிறப்பித்து  தீர்ப்பளித்தார்.

மண்டையில் ஓங்கி கொட்டிய உச்ச நீதிமன்றம்!

உயர் நீதிமன்ற தடை உத்தரவை நீக்க கோரி தமிழ்நாடு அரசு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை மீண்டும் ஆரம்பம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் தெளிவாக விசாரிக்க வேண்டும் என்று ஒரு கொட்டுக் கொட்டி, அதன் தடை உத்தரவிற்கு தடை  விதித்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

இத்தருணத்தில், சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பொழுது உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்,‘1800 மாணவர்கள் முதல் பட்டதாரிகளாக பட்டங்களை பெற்றமைக்கு பாராட்டுக்கள்; இனி தமிழ்நாட்டில் துணைவேந்தர்கள் பணியிடங்களை காலியாக வைத்திருக்காமல் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தமிழ்நாட்டின் முதலமைச்சரே துணை வேந்தர்களை உடனுக்குடன் நியமிக்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வார்’ என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார்.

ஆக, அரசியலமைப்பு சட்ட அடிப்படை நியதிகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஆர்எஸ்எஸ் எண்ணங்களை தனது மூளையில் சுமந்து திரியும் சில நீதிபதிகள் இத்தகைய கயமையான தீர்ப்புகளை வழங்குவதிலிருந்து விடுபட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்! செய்வார்களா?

  • எழில்மாறன்

2 COMMENTS

  1. தமிழ்நாட்டில் துணைவேந்தர்கள் நியமனம்!
    தடைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்……!

    துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக முதல்வருக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் நிரூபித்து உள்ளது அதற்கு எதிராக வாசிச கும்பல் ஆளுநருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெற சென்று தலையில் சரியான கூட்டு வாங்கி கொண்டு திரும்பி சென்று உள்ளார்கள் இப்படிப்பட்ட வழக்குகளை ஏடான முறையில் பாசிச கும்பல் பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என இந்த கட்டுரை உணர்த்துகிறது .

    கட்டுரையாசிரியர்:
    தோழர் எழில் மாறன்.
    அவர்களுக்கு நன்றி

  2. ஆளுநர் உயர்கல்வியின் வேந்தராக இருப்பது நாட்டிற்கே வெட்ககேடுதான்.
    இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கு அதிகாரங்களை குவிக்கிறது ஆங்கிலேய காலத்தில் துடைத்தெறிய பட வேண்டிய சட்டத்தை இன்னும் நாம் தூக்கி சுமந்து கொண்டு இருக்கிறோம்.
    மாணவர்களின் அரசியல் போராட்டங்கள் தொடர்ந்தால் ஆளுநரை மண்டியிட வைக்க முடியும்.
    அதனை கட்சிகளும் களத்தில் செய்ய வேண்டும்.
    மேலும் தமிழக அரசு நிதி பற்றாக்குறையால் சிக்கி தவிக்கும் சுமார் 10 பல்கலைகழகம் மேல் நிதி ஒதுக்கி பாதுகாக்க வேண்டும்.
    இந்த நடவடிக்கை அரசு ஆதரவாக ஆளுநருக்கு எதிராக போராடுவதற்கும் இரட்டை அதிகாரத்தை தடுக்கும் அரணாக அமையும்.
    சங்கிகள் நீதிமன்றத்தின் வாயிலாக பெறும் சட்டங்களை வீதியில் இறங்கி போராடி செல்லாகாசாக்குவோம்.

    தக்க தருணத்தில் சரியாக கட்டுரையை தந்த திரு.எழில்மாறன் அவர்களுக்கு நன்றி 🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here